டைம்லைன் நாலு வகை :
சண்டை:
எப்ப பாத்தாலும் சண்ட.. எதுகெடுத்தாலும் சண்டை.. ஒரு அக்கா ஒரு டிவிட் போட்டா அடுத்த செகண்டே ஒருத்தர் அத ஆர்டி பண்ணுவார்.. அப்போ ஒரு சண்டை வரும்ன்னு எதிர்பார்ப்போம்.. அது அப்படியே நடக்கும். ஆண்-பெண் சண்டை.. ப்ளாகர் சண்டை. குழாயடி சண்டை. பெண்ணுக்கு சண்டை.. ஆறடிக்கு சண்டை.. கடலைக்கு சண்டை. ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் சண்டை டைம்லைன்.
கடலை:
கடலை போடுறதுக்குன்னே ஒரு க்ருப்..இப்ப வேற நிறைய பெண் ஐடிக்கள் நிறைஞ்சு போச்சா... சதா கடலை தான்.. நானும் அப்பப்ப கடலில் லைப்பேன், ஆனா கடலை டிஎம்மில் ரொம்ப சீரியஸா நிறைய பேர் பண்ணுறாங்க..
புரட்சி:
இது தான் நம்ம பேவரைட்டு.. கரண்ட்ல நடக்குற பிரச்சன எதுவா இருந்தாலும் அலசி கிண்டல், நக்கல், நளி, நையாண்டி, வஞ்ச புகழ்ச்சின்னு ஒரு நாள் புல்லா ஒரு ரவுண்டு வருவோம்... டேக் மூலம் அது ட்ரென்ட் ஆகி நாட்டையே ஒரு கலக்கு கலக்கும்.
வறட்சி:
சாயங்காலம் ஒரு 3 - 5 மணி வர டைம்லைன் நகரவே நகராது... எல்லாரும ஆணி, தூக்கம்ன்னு நெம்ப பிசி.. அப்போ டைம்லைன காப்பாத்த சில பேர் கொஞ்சம் மொக்க டிவிட்சா போட்டு ஒரு ரெண்டு மணி நேரம் ஒட்டிருவாங்க.
இதையும் தாண்டி
1. எப்படா வம்புக்கு இழுக்கலாம்ன்னு ஒரு கேங்கு ரொம்ப நேரமா வெயிட் பண்ணும்.
2. யார்கூடயும் பேசாம ஒரு சிலபேர் கவிதை, ஹைக்கூன்னு அவங்க வழில டிவிட் போடுவாங்க.
3. கொஞ்ச பேரு உருப்பிடியா டிவிட்சே போடாம கடலைக்கு காத்திருப்பாங்க.
4. பிரபல டிவிட்டர் கொஞ்ச பேரு வழக்கம் போல மென்சன் போடாம அடிச்சுப்பாங்க.
5. கேம் லிங்க், வெட்டி பெட்டிங்க்ன்னு இப்ப கொஞ்ச நாளா டைம்லைன் யாவாரம் ஆவுது.
6. கொஞ்ச நாளா ராஜா தான் டாப்பு.. அவர் டாப்பிக் எடுத்தா எப்பேர் பட்ட ஆணி இருந்தாலும் ஜொய்ன்னு எல்லாரும் ஆஜர்.
பொது நலம் (என் உடல் நலம்) கருதி யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
என்ன நடந்தாலும் டைம்லைன் வேடிக்கை பாக்குற சுகமே தனி..என்ன நான் சொல்றது.
மீண்டும் இது மாதிரி ஒரு நல்ல பதிவில் சிந்திப்போம்..
- புரட்சி கனல் எஸ்.ஜி.ஆர்
No comments:
Post a Comment