இந்த சந்து விசித்திரம் நிறைந்த பல பஞ்சாயத்துகளை சந்தித்திருக்கிறது. புதுமையான டிவிட்டர்களை கண்டிருக்கிறது. ஆகவே இந்த கேஸ் விசித்திரமல்ல. வழக்காடும் நான் புதுமையான டிவிட்டருமல்ல.
டைம்லைன் பாதையிலே சர்வ சாதாரணமாய் காணக்கூடிய மொக்கை ஜீவன் நான். சந்திலே கொழப்பம் விளைவித்தேன். ட்டைம்லைனில் டீ வித்தேன், பிரபலங்களை தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை.
சந்தில் கொழப்பம் விளைவித்தேன். சந்து கூடாது என்பதற்காக அல்ல. சந்து மொக்கையர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக.
பிரபலங்களை தாக்கினேன். அவர்கள் பேமஸ் என்பதற்காக அல்ல. டைம்லைன் பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை, சந்தில் யாருக்கும் இல்லாத அக்கறை,என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். ட்ரோல் என்பீர்கள். என் ட்ரோல்லிலும் பொதுநலம் கலந்திருக்கிறது.
- தொடரும்
புரட்சிக்கனல் எஸ்.ஜி.ஆர்
No comments:
Post a Comment