Tuesday, October 9, 2012

கனல் அணைந்தது

டிவிட்டர் நண்பர்களே,

 

இந்த பதிவை எழுத ஆரம்பித்து விட்டேன். எப்டி முடிப்பேன் என்று தான் தெரியவில்லை. பதிவுகள் எழுதி பழக்கமில்லை. அதற்கு என் முந்தைய டுபாக்கூர் பதிவுகளே சாட்சி. நான் பள்ளியில் மலையாளம், பிரெஞ்சை இரண்டாம் மொழியாக தேர்ந்தெடுத்து படித்தேன். பூர்வீகம் மலையாளம் என்பதால் மலையாளம் தான் எளிதாக இருந்தது, ஆனால் தமிழும் ஒரு பக்கமாக கற்று கொண்டு வந்திருக்கிறேன். பத்து முதல் பன்னிரண்டு வரை பிரெஞ்சை படித்தேன் அதிக மார்க்குகாக..

 

கல்லூரியில் தான் என் தமிழ் ஆர்வம் அதிகமானது.. காரணம் டிவிட்டர் என்றே சொல்வேன். சில சினிமா பிரபலங்களின் டிவிட்டுகளை மூன்று வருடங்களுக்கு முன் வ.பாயில் பார்த்தேன். சினிமாவில் ஆர்வம் இருந்ததால், பிரபலங்களுடன் உரையாடலாமென்று டிவிட்டர் அக்கவுன்ட் ஆரம்பித்தேன்.

நான் முதலில் பின் தொடர்ந்தது சின்மயியை தான். அவர் டிவிட்டை தான் ஆ.வியில் படித்தேன் முதன் முதலில். அதன் பின் ஒவ்வொரு பிரபலங்களை பின் தொடர்ந்தேன். முதலில் கோலிவுட், பின் பாலிவுட், அப்புறம் பிரதமர், ஜனாதிபதி என்று ஒரு அரசியல் கனவே இருந்தது.

 

அடுத்த வார வ.பாயில் சின்னபையன் chpaiyan , mayavarathaan டிவிட்டுகளை பார்த்தேன், உடனே பாலோவினேன். அன்று தான் தெரிந்தது "சந்து" ன்னு ஒன்னு இருக்குறது. அவர்கள் பின்தொடற்பவர்கள், பின் தொடர்ந்தவர்கள் என பெரும்பாலான தமிழ் டிவிட்டர்களை பின் தொடர்ந்தேன்.

 

அவர்களுடன் முதலில் இங்க்ளிஷில் தான் உரையாடினேன். அப்போ என் ஹேண்டில் shaijusg. பின் மனதில் தோன்றியவாறு ShaijuSGR, SGR_here, 5haiju, shaiju_SGR, 0SGR என் மாற்றி கொண்டேன். ஹேண்டில் சின்னதா இருந்தா எளிதா  இருக்கும், எந்த ட்ரெயின்ல வேணும்னாலும் ஏறலாம்ன்னு தான் 0SGR ன்னு சின்னதா கடைசியா வச்சேன். ஆனா பேரு புரட்சி கனல் என்று எப்படியோ மனசில் தோன்றி காலபோக்கில் அதுவே பேரானது.

 

தமிழின் மீது மோகமும், தாகமும் அதிகமானது. ஆரம்பத்தில் கரையான் எனக்கு உதவினார். அவரது தளத்தில் தமிழில் எப்படி கீச்சுவது என்று பெரும் கட்டுரையே இருந்தது. அதில் க்ருபாஷங்கரின் தமிழ் டைப்பின் லிங்க் இருந்தது, அன்று முதல் என் தமிழ் கீச்சு ஆரம்பமானது. செந்தமிழில் இல்லைஎன்றாலும் நாகர்கோவில் வட்டார தமிழிலேயே முதலில் கீச்சுனேன்.

 

இப்ப எதுக்கு இப்படி ஃபிளாஷ்பாக் சொல்லிட்டு இருக்கன்னு நீங்கள் கேக்கலாம். நான் சொல்ல வந்த விஷயம் இனி தான். கடந்த மூன்று மாதங்களாக நான் தனிமையில் தள்ளப்பட்டேன், புது வேலை, கேரளா என்று எல்லாம் புதிது,.. நேரம் போக்க டிவிட்டரில் என் நேரம் அதிகமானது. நிறைய புது நண்பர்கள் என என் டைம்லயினே களைகட்டியது. ஒரு நாளில் 300, 500 டிவிட்டுகள்  என என் டிவிட்டர் ஆதிக்கம் அதிகமானது. அப்பொழுது தெரியாது நான் ஒரேடியாக டிவிட்டர் அக்கவுண்டை மூடும் அவலத்திற்கு தள்ளப்படுவேன் என்று,

 

டிவிட்டரில் ஒரு வியாதி உண்டு.. இது பல பேருக்கு இருக்கலாம். Multiple timeline Disorder தான் அது. அதாவது நேரத்திற்கும், டிரெண்டுக்கும் ஏற்றாபோல் மாற்றி மாற்றி பேசுவது. உதாரணம்: நான் விஜய் ரசிகன். ஆனால் எதோ ஒரு சந்தர்பத்தில் அவரை டிவிட்டரில் பழித்து பேசியிருப்பேன். இது ஒரு வித வியாதியே.

இதன் காரணமாக நான் பல நாள்களுக்கு முன் உளறிய டிவிட்டுகளை ஆதாரம் காட்டி இன்று,நான் மிகவும் மதிக்கும் ஒரு மாமனிதர் என்னை கேவல படுத்திவிட்டார்.. தவறு என் மீதே என்று ஒத்து கொள்கிறேன். ஆனால் அவர் செய்தது முதுகில் குத்தியது போலவே இருந்தது, ஏற்கனவே சில பிரச்சனை காரணமாக பல பேர் என்ன ப்ளாக்கி வைத்திருந்தது ஒரு பக்கம் வேதனையாக இருந்தது.

 

இது சரியில்லை. அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. டிவிட்டரை விட்டு வெளிவர முடிவு செய்து அக்கவுண்டை டெலிட் செய்து விட்டேன். இனி வேற அகவுன்ட் தொடங்கி ஃபேக்காக அங்கு வாழவும் விரூப்பம் இல்லை. மனசாட்சி எனக்கு எதிரியானது இன்று தான். டிவிட்டர் இல்லாமல் வாழ பழகி கொள்கிறேன்.

 

இத்தனை நாள் என்னுடன் உறவாடிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.

 

நன்றி

புரட்சிகனல் SGR

 

No comments:

Post a Comment