Tuesday, October 2, 2012

சக்தி

லண்டனில் படிப்பை முடித்து சக்தி தனது சொந்த ஊருக்கு தனது காதலியுடன் திரும்பி வருகின்றார். அங்கு தந்தையான பெரிய தேவரை சந்தித்து தனது காதலியை அறிமுகமும் செய்து வைக்கின்றார்.ஆரம்பத்தில் கோபம் கொள்ளும் பெரிய தேவர் பின்னர் அமைதி கொள்கின்றார்.இதற்கிடையில் அவ்வூரில் இருக்கும் பெரிய தேவரின் சகோதரனின் பகை உணர்வுகளால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது,பின்னர் அது கலவரமாகவும் வெடித்தது.இதற்கிடையில் வெளியூருக்குச் செல்லும் சக்தியின் காதலியோ பின்னாளில் வரும்பொழுது சக்தி வேறொருவரை மணம் செய்துள்ளது கண்டு கடுங்கோபம் கொள்கின்றார்.சக்தியும் பெரியவர் ஒருவருக்குக் கொடுத்த வாக்கின்படியே தான் திருமணம் செய்ததெனக் கூறுகின்றார்.இறுதியில் பெரிய தேவரின் சகோதரரின் மகனிடம் ஏற்படும் தகராறுகளினாலும் பலமுறை கூறியும் அவன் காவல்துறையினரிடம் சென்று செய்த தவறுகளைக்கூறவில்லை என்ற காரணத்தினாலும் அவனைத் துரத்துகின்றார் சக்தி.இதற்கிடையில் தெரியாத்தருணமாக அவரின் தலையையும் துண்டித்து விடுகின்றார்.அவ்வூர் மக்கள் எடுத்துக் கூறியும் செய்த தப்பிற்காக தண்டனை பெறவும் செய்கின்றார் சக்தி.

 

No comments:

Post a Comment