Wednesday, October 17, 2012

அன்பே சிவம்

அன்பே சிவம்

இயக்குனர்

சுந்தர்.சி

தயாரிப்பாளர்

கே.முரலிதரன்
வி.சுவாமிநாதன்
ஜி.வேணுகோபால்

கதை

-திரைக்கதை-
  கமலஹாசன்
-
வசனம்-
 மதன்

நடிப்பு

மாதவன்
கமலஹாசன்
நாசர்
கிரன் ரதோட்
சந்தான பாரதி
பாலு ஆனந்த்
செல்லத்துரை
உமா ரியாஸ் கான்
லக்ஸ்மி ரேட்டன்
ஆர்.எஸ். சிவாஜி
நடராஜன்
நெல்லை சிவா
தாத்தா ராமச்சந்திரன்
கே. விஷ்வனாத்
விஜய்கணேஷ்

இசையமைப்பு

வித்யாசாகர்

ஒளிப்பதிவு

ஆர்தர் வில்சன்

படத்தொகுப்பு

சுரேஷ் பாய்

விநியோகம்

லக்ஸ்மி மூவி மேக்கர்ஸ்

வெளியீடு

2003

கால நீளம்

160 நிமிடங்கள்

மொழி

தமிழ்

 

 

அன்பே சிவம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் கமலஹாசன், மாதவன்,நாசர்,கிரண் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2003 இல் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

கதை

 

தொழிலாளர்களுக்காகப் போராடும் நல்லசிவம் (கமலஹாசன்) அந்நிய நாட்டினரின் விளம்பரங்களை விற்பனை செய்பவராக தொழில் புரியும் அன்பரசு (மாதவன்) இருவரும் புவனேஷ்வரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல இருக்கும் போது எதிர்பாராத வண்ணமாகச் சந்தித்துக்கொள்கின்றனர்.அங்கு ஏற்படும் பிரச்சனை காரணமாக விமானத்தில் பயணிக்க முடியவில்லை எனவே இருவரும் புகையிரதம், பேருந்து ஆகிய பல ஊர்திகளின் மூலம் பயணம் செய்கின்றனர்.இதற்கிடையில் பல சோதனைகள், பல விபத்துகள் ,புகையிரதம் ஒன்று விபத்துக்குள்ளாக காயப்பட்ட ஒரு சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வேளையில் அவன் இறந்துவிடவே, இதன் மூலம் "என்ன கடவுளையா இது" எனக் கேட்கும் அன்பரசு வாழ்க்கையினைக் கண்டு சலித்துப் போகின்றார்.பின்னர் நல்லசிவம் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவம், தொழிலாளர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடியாத படையாச்சி (நாசர்) போன்றவர்களைப்பற்றியும் கூறுகின்றார்.அன்பரசும் தனக்கு நல்ல சிவமே அண்ணனாக வரவேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு அவரை தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்யாண மண்டபத்திற்கு அழைத்துச் செல்கின்றார்.அங்கு அவர் அதிர்ச்சி அடைகின்றார் காரணம் அவர் காதலித்திருந்த பெண்ணே அன்பரசிற்கு மணப்பெண்ணாக இருப்பதனையும் உணர்கின்றார்.இவ்வாறு இருந்தும் தனது காதலைத் தியாகம் செய்யும் நல்ல சிவம் தொழிலாளர்களுக்குத் தேவையான ஊதிய உயர்வுக்கான பத்திரத்தில் கையொப்பம் வாங்கியும் செல்கின்றார்.

துணுக்குகள்

  • இத்திரைப்படத்தில் வரும் சில காட்சியமைப்புகள் ஆங்கிலத்திரைப்படங்களான ஃபாரஸ்ட் கம்ப்,மற்றும் 1987 ஆண்டில் வெளிவந்த Planes, Trains and Automobiles போன்ற ஆங்கிலத் திரைப்படங்களுடன் ஒத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி,

புரட்சி கனல் SGR

 

Tuesday, October 16, 2012

விமலா"ஸ்ரீ"ராகம் - கயலதிகாரம்

 

விமலா"ஸ்ரீ"ராகம் - கயலதிகாரம்

 

 

 

 

என் பலமாக நான் நினைப்பது பல சமயம் என் பலவீனமாகவே பார்க்கப்படுகிறது என் நண்பனால்....

 

      நீ குடிக்கும்போது தவறிவிட்டதால் உன்னை தழுவியிறங்கும் ஒரு துளி நீர் போதும் இப்போதைய என் தாகத்திற்க்கு....!

 

      நான் சேர்த்து வைக்கவில்லை என் முத்தங்களை, ஒளித்தே வைத்திருக்கிறேன் தேடல் இன்பம் இதிலும் வேண்டுமென்பதற்க்காக....

 

உன் பிரிவின் தாக்கம் ஒன்றே என்னை ஏங்கவும் வைக்கிறது, ஏளனமும் செய்கிறது.

 

      தவறுதலாக உதடை கடித்துக்கொண்டு அழும் உன்னிடம் எப்படி சொல்லேன் என் வேலையை நீ செய்ததால் உனக்கு கிடைத்த தண்டனை இதுவென ...?

 

      ஒருத்தரை ரொம்ப புடிச்சிருக்கு ஆனா அது காதல் இல்ல..இதப்பத்தி அவர்கிட்ட பேசவும் பயமா இருக்கு, என்ன தப்பா நினச்சிட்டா?

 

      சிலரது தனிமையை தொலைக்க பலரது தனிமையை தொல்லை செய்கின்றனர்.....

 

      கொஞ்சல்களுடன் நான் இங்கே ..நான் தஞ்சம் அடைய கோதை மகன் எங்கே?

 

      பல நேரம் என் காதலனாக, சில நேரம் கள்வனாக....-தலையனை...என் சிறந்த நண்பனும் கூட...!

 

 

உன் கன்னக்குழியில் விழுந்து இறக்கவேண்டும்.....

 

      உன்மையில் பேசுவதற்காக உருவாக்கப்பட்ட டிவிட்டரில் இருவர் பேசுவதை "கடலை"என கின்டல் செய்வது மிகவும் தவறானது....

 

      சில்லென தழுவி சில நிமிடம் சங்கடப்படுத்தும் குளிர்காற்று என்னை தீண்டும்போதெல்லாம் சட்டென தோன்றுவது அது நீதானா என்று....

 

      நான் கேட்காத கேள்விகளுக்கும் சரியான விடை கிடைப்பது உன் கண்களில் மட்டுமே....!

 

      கோபமே மிஞ்சுகிறது உன் தவறுகளின்மீது நீ அதற்க்கு தண்டனையாக கொஞ்சும்வரை...

 

      விவரமாக இருப்பதாய் நினைத்துக்கொண்டு நம் முட்டாள்தனத்தையே நிரூபிக்கிறோம் எப்போதும்...

 

ஏற்க்கப்படுவதாக இல்லையென்றாலும் ரசித்து ஏற்றுக்கொள்கிறேன் தாமதத்திற்க்காக நீ சொல்லும் ஒவ்வொறு காரணங்களையும்...!

 

உன் கைப்பற்றலில் முடிகிறது என் எல்லா கண்ணீரும்....

 

 

      பட்டா? பனாரஸாகட்டிக்கொள்ள ஒரு புடவையைசொல் என கேட்டேன்  ,நீயோ உன் பெயரை பதிலாக தருகிறாய்...!

 

      உனக்கான என் கனவுகள் என்னுள் ஏறாளம் ஆனாலும் அவற்றை நிகழ்த்துவதில் உனக்கில்லை தாராளம்..!!

 

      கண்ணாடி வளையல்களை தவிர்க்கிறேன் நம் ரகசியம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்க்காக....!

 

      வளமான உன் தோள் அரவனைப்பில் அடைந்துவிட ஆசை கூண்டு கிளியாக...!

 

      தினமும் வருகிறாய், திடீரென தொலைகிறாய்...தொல்லைகள் தருகிறாய்., ம்ம் சுகமாகவே இருக்கிறது....

 

      நாம் விரும்பும் விளக்கம் கிடைக்காதவரை கிடைக்கும் எந்த விளக்கத்தையும் நாம் ஏற்றுக்கொள்வதில்லை...

 

      சந்திக்க காத்திருக்கும் காந்த துருவங்களாக நாம் தூரத்தில் இருந்தாலும் ஈர்க்கப்பட்டு...!

 

      அகங்காரம் கொண்டு நீ அனல் கக்கினாலும் அதை அன்பாகவே ரசிக்கத்தோன்றுகிறது எனக்கு ...

 

      விடியவேண்டும் என் இரவுகள் அனைத்தும் உன் மார்பின் மீது நான் மாலையாக......

 

      மொட்டை மாடி நிலவு,மாடியில் நான், இருவருக்கும் ஒரே ஒற்றுமை தனிமை... !

 

      நிமிடமும் கரைய மறுக்கிறது நிஜத்தில் நீ இல்லாமல்....

 

      கொஞ்சம் கோபம்...நிறைய முத்தம்...

 

      உன் நினைவுகள் எனக்கு என்றுமே வேண்டாம் ஆனால் என் கனவுகளை மட்டும் கொடுத்துவிடு....

 

      திறந்துவிட்டேன் நம் காதல் புத்தகத்தை ஆனால் வாசிக்கவும் தோனவில்லை, மூடிவைக்கவும் மனசில்லை...!

 

எல்லோரும் பேசினாலும் நாம் எதிர்பார்த்தவர் பேசவில்லையெனில் மிஞ்சுவது ஏமாற்றமே...

 

      புரிகிறது எனக்கும் ஆனாலும் புரியாததுபோல நடிப்பதே வழக்கம் உனக்கும்...

 

      கொஞ்சலில் கோபம் முடியும் இடம் உன் மிஞ்சலே....

 

      சிலநேரம் கோபம் வழிவகுக்கிறது உன் பலநேர கொஞ்சலுக்கு...!

 

      கனவுகளிலேயே வாழ்வதால்தானோ நமக்குள் பிரிவு இல்லை...?

 

      எல்லொரும் இருந்தாலும் அப்பட்டமாக நீ கொடுக்கிறாய் முத்தம் அடிக்கடி ..இதழால் அல்ல உன் இமையால்...கள்வா...

 

      நான் கோபத்துடன் கூப்பிட்டாலும் கொஞ்சலாகவே தெரிவது உன் பெயர் மட்டுமே....!

 

      என்னிக்கையில் முத்தங்கள் உன்னைப்போலவே அடங்காதவைகளாக....!

 

      அலுவலக அலுப்புகளிலும் சலிப்பில்லாமல் காத்துக்கிடக்கிறேன் உன் குறுந்தகவலுக்காக.....!

 

      வாசகன் விரல் தொடாத புத்தகமாக நான் உன் நூலகத்தில்.......

 

      வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. முதல் நேர்முகத்தேர்வில் வெற்றி. மீதம் டிஸ்கஷன் ஒன்லி பேலன்ஸ்...

 

கண்ணில் நீ கண்ணீரிலும் நீ,கனவில் நீ கவலைகளிலும் நீ.

 

      தூற்ற தயாராக இருக்குமளவு வாழ்த்த தயாராக இல்லை யாரும்....

 

      சுடும் ஆனால் எனக்கு காயம் ஏற்ப்படுத்தாத ஒரே நெருப்பு உன் கண்கள்...!

 

      நண்பர்களாக நினைத்ததால்தான் இப்பொழுதும் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன் தயவுசெய்து திருத்திக்கொள்ளுங்கள்....

 

      சிரிப்போ, அழுகையோ தயாராக  இருக்கிறது ஒரு கூட்டம் தங்களது பொழுதுபோக்கிற்க்காக பிறர் வேதனையை வேடிக்கை பார்க்க...

 

      உண்மையில் உண்மையாக யாரும் இல்லை யாருக்கும்...

     

சகிக்க முடியவில்லை என்னுடன் சுகிக்க மட்டுமே உறவாடுபவர்களை நினைத்தால்....

     

பெண்களை சதையாக மட்டும் பார்க்கும் சமுகம் என்று ஒழிகிறதொ அன்றே உண்மையான சுதந்திரம் எங்களுக்கு..

     

ஆண்களில் மட்டும் ராமன்களை நாங்கள் எதிர் பார்க்க முடியாதாம் ஆனால் பெண்கள் அனைவருமே சீதைகளாக இருக்க வேண்டுமாம்என்ன நியாயம் இது?

 

      தைரியம் இல்லாத உலகம் பேசினால் வேசி, பேசாவிட்டாள் உத்தமி, உன்மையில் சந்தேகம் கொள்ள வேண்டியது உத்தமியிடமே..

 

தோடர்ந்து வருவான் என்று நாம் நினைத்தால் அவனோ தொல்லையாகவே நினைக்கிறான் அவன் தேவைகள் தீர்ந்தப்பின்..

 

      எல்லா ஆண்களாலும் எளிதாக உடைக்கமுடியும் பெண்கள் மனதை அவள் நடத்தையை குறைகூறி...

 

      ஆண்,பெண் நட்பும் சாத்தியம்தான் தன் நண்பர்களிடம் தோழியை வேசியாக அவன் சித்தரிக்காதவரை...

 

      நம்முடன் நட்புகொள்கிறார்கள் என சந்தோஷப்படுவதற்க்கு பதில் சந்தேகமே வருகிறது இவரால் இழக்கப்போவது எதை என்பதில்...

 

      சிலரது உண்மை முகம் தெரியும்போது புரிந்துவிடுகிறது அவரது தேவை நம்மிடம் என்ன என்பது..

 

      நம் சிறந்த நண்பனாகவே இருந்தாலும் மற்றவரிடம் அவர் நம்மைப்பற்றி நல்லதாகதான் சொல்லுவாறென எதிர்பார்ப்பது நம் முட்டாள்தனம்..

 

எல்லாமே மாயைதான் தெரிந்தும் நம்புகிறோம் நாம் ஏமாறும்வரை...

 

      இசைத்துக்கொண்டுதான் இருக்கிறேன் உறங்காமல் நானும் உனக்கான கீதங்களை உயிர்ப்பில்லாமல் வாடும் நம் காதலுக்காக...

 

      வேண்டாதது உன் கெஞ்சல்கள் வேண்டுவது உன் கொஞ்சல்கள்...!

 

ரம்யமான ராத்திரி கதைகள் எல்லாமே வீணாகிறது என்னுள் நீ கேட்க்க இல்லாததால்...!

 

எல்லோருக்கும் சிம்பு புடிக்கும் ஆனா அதை வெளிய சொன்னா மத்தவங்க கலாய்ப்பாங்கன்ற பயம்...

 

      இமைகள் முடினாலும் இயலாமை விடுவதில்லை உறங்க...

 

சொல்லிவிடாதே காதலை இன்னும் கொஞ்சம் பேசி புரியட்டும் நம் கண்கள்...!

 

      வரும்போது எதையும் கொண்டுவரவில்லை ஆனால் போகும்போது நிச்சயம்  எடுத்துசெல்வேன் உன் நினைவுகளை நிறைவாய்...!

 

      தன்னோட லவ்வரும் நம்மோட ஆபீஸ்ல கூட வேலை பாக்கனும்னு யாருமே ஆசபட்ட தில்லையாசில்லி பாய்ஸ்:-\

 

      பேசாதே என்று சொல்லிவிட்டேன் கோபத்துடன் உன்னிடம், ஆனாலும் பேசிக்கொண்டே இருக்கிறாய் என் கண்ணிடம்....

 

      மனதிற்க்கு பிடித்தவர்களுடன் வேலை செய்கையில் வரும் சந்தோஷமே தனிதான். எகி

 

தவிற்க்க வேண்டும் என நாம் நினைப்பதே நம்மை அதிகமாக தவிக்க வைக்கிறது..

 

 

      யோசிக்கிற்றேன் எதற்க்கு உன்னிடம் பேச நான் முதலில் யோசிக்கவில்லையென....

 

 

      எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அதை துவக்குவதற்க்குமுன் விரல் சொடக்கும் நேரமே ஜென் நிலை..

 

சாலையில் நம்மை லேசாக உரசிவிட்டு செல்லும் பேருந்து நம்மை தாண்டிவிட்டபின் மனம் ஒரு கலவரப்படுமே அதுவே ஜென் நிலை என்னளவில்.

 

எனக்கு பிடிக்கும் என நான் சொல்லுவதையெல்லாம் எனக்கும் பிடிக்கும் என்பவர் மீது ஏனோ சிறிய சந்தேகம் பிறக்கிறது.....

 

கொல்வதில்லை உன் கண்கள் என்னை மயக்கவே செய்கின்றது...தப்பித்துவிடு பெண்ணே இதன் விளைவுகள் விபரீதமானது...

     

கவலைகள் பல இருந்தாலும் உன்னிடம் மறைப்பதில்லை என் கண்கள்.....

 

      சொல்லிவிட்டேன் என் நிலமையை அதை புரிந்துகொள்வதும் புரியாததுபோல  கொல்வதும் உன் விருப்பம்..

 

அதிகாலைதூங்கி எழுந்ததும் நீ சோம்பல் முறிக்கும் அழகை ரசிக்கவே சீக்கிறம் எழுகிறேன் நான் உனக்கு முன்....

 

நிச்சயம் நீ கற்றுத்தறுவாய் என்ன நம்பிக்கையில் கற்றுக்கொள்ளாமல் நான்...#சேலை கட்ட

 

      காதலா காதலா காதலால் அழைக்கிறேன்..! ஆதலால் வா வா அன்பே தவிக்கிறேன்.....!#clt

 

      வெளுக்க துவைக்கிறாய் துணிகளை அழுக்கடைந்தது என் மனம்......

 

      விவரங்களே இல்லையென்றாலும் விவாதமாக நம் திருமணம் வரும்போது செல்லக்கோபத்துடன் என்னை அள்ள வந்துவிடுகிறது வெட்கம்...

 

      கவிதையே நீயென பொய் சொல்லமாட்டேன்.. என் கவிதைகள் அனைத்தும் நீயெனும் மெய்யையும் மறைக்கமாட்டேன்...

 

      பொது இடத்தில் துப்பாதீர்னு போடு வைங்க சந்துல...

 

     

அடையாளங்களில் உண்மை எதிர்பார்க்கப்படுவதில்லை இப்பொழுதெல்லாம்.காரணம் அதை வெளிப்படுத்த பலரும் முன்வராததே..

 

      இயலாமைக்கும் பொறுந்துவது மௌனம்...

 

 

      பேசும்போது இன்னும் கேட்கத்தோன்றுவதும் , பேசவே வேண்டாமென்பதும் அவர்களின் முகபாவத்தைவிட கண்களைவைத்தே முடிவு செய்யப்படுகிறது பல சமயம்...

 

காந்தியின் கதரிலும் கறையுண்டு.....

 

      பலர் பேசவில்லையே என வருந்துவது புகழ்ச்சிக்கு...சிலர் பேசாமல் இருக்க வேண்டுமென வருந்துவது இகழ்ச்சிக்கு.....

 

      மரணத்தின் வாயிலுக்கு வழி கேட்டேன் நீ சொர்கத்தின் கதவுகளை திறக்கிறாய்....

 

      காந்தீஜீ, நேரூஜீ, சோனியாஜீ,மம்தாஜீ எல்லாரும் ஒரே ஃபேமலியா?

 

      காந்தீஜீநேரூஜீ மாதிரி மம்தாஜீ டே எப்ப வரும்?

 

      வாடன் ஹாஸ்டலில் எல்லோருக்கும் அம்மாவாக பாசம் கொடுக்கிறாள் வீட்டில் தன் குழந்தை ஹாஸ்டல் வாசம் வாழ்வதை மறந்து...

 

      என் கவிதைகளில் காதல் குறையும்போதெல்லாம் நினைவில் நீ இல்லையென அர்த்தமில்லை...

 

      குற்றம் கண்டுபிடிப்பவரின் மனதிலேயே உள்ளது... குற்றவாளியாக கருதப்படுபவனின் கருத்தில் இல்லை..

 

      மனதினில் உன் என்னம், உன்னை நினைக்கையில் சிவந்தது என் கண்ணம்....

 

 

      இதுவரை நான் தனியே ...என் பக்கம் வேண்டும் துணையே..இரவு நேரம் விழிகள் உனையே தேடும் உயிரே #clt

 

      குற்றங்களில் சுற்றம் அந்தகாலம், சுற்றங்களில் குற்றம் இந்த காலம்...

 

      தன் பிறந்தநாளை மனதில் வைத்தே செய்யப்படுகின்றன நண்பன் பிறந்தநாள் உதவிகள் பெரும்பாளும்...

 

      நானும் கடவுளே உயிரில்லாத உடலுக்கு உயிர்கொடுப்பதால் #பலூனுக்கு காத்து ஊதுறேன்...

 

      கொல்லப்படுவதற்க்காகவே விரும்பி வாங்கப்படுகின்றன பலூன்கள் பிறந்த நாள் கொண்டாட்டங்களில்...

 

நண்பர்கள் தங்களின் வட்டங்களில் எளிதில் சேர்ப்பதில்லை மற்றவரை அவர் உண்மையானவரானாலும்...

 

 

நண்பனின் குழந்தைகள் நமக்கு வைக்கும் மோசமான பெயர்கள் உண்மையில்  நம் நண்பனால் சொல்லிக்கொடுக்கபட்டதே...

 

 

      உன் கண்ணீரை துடைக்க அருகில் நான் இல்லாவிட்டாலும் அதை சோகத்திலிருந்து சந்தோஷ கண்ணீராக மாற்றும் வித்தை நான் அறிவேன்...

 

தொட்டுவிடும் தூரத்தில் நீ இருந்தாலும் உன்னை எட்டி பிடிக்க முடியாமல் நான்  ....

 

      குளிரில் நடுங்குகிறேன் திரும்பி பார் போதும் அந்த கோபம் நான் குளிர்காய...!

 

      கோபம் கொள்ளாதே கூடுகிறது உன் அழகு ....

 

பிரம்மன் எதைக் கொண்டுதான் வரைந்தானோ வளமான உன் கண்களை , ஆனாலும் என்னால் முடியுமா என தெரியவில்லை  இதில் நீந்தி என் வாழ்க்கை கரையை அடைய ...

 

      மத்தவங்கள கிண்டல் பண்ணுறதுக்கு முன்னாடி தன்னோட முகரய ஒருதரம் பாக்க சொல்லுங்க...

 

      என்ன இது என்ன இது என்னைக் கொல்வதேன்...? என்னவென்று கேட்ப்பவர்க்கு என்ன சொல்லுவேன்யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ? #clt

 

      லவ்லி மார்னிங்... ஹாப்பி மண்டே...

 

      விவரங்கள் வேண்டாம் விளகிப்போய்விடுவிடியட்டும் இந்த இரவு -நிலா.

 

      கொடுத்து எடுக்கும் பண்டமாற்றம் நமக்குள் நிகழும் நேரம். இதயம் கொடுத்து இதழ்கள் வாங்குகிறாய்..

 

      இதுவாஅதுவா என்ற குழப்பதில் இழந்தே விடுகிறேன் இரண்டையுமே...

 

காதலாகாமமாகாரணம் புரியவில்லை கலவரமான காதலில் மென்மையான மனதிற்க்கு..

 

      காதலை பூஜை செய்ய அது கடவுள் இல்லை, நம் உள்ளத்தால் உணரக்கூடிய  கலவரம்.

 

      ஒவ்வொரு ஞாயிறையும் நிறைவாக கழிக்க முடியவில்லை நீ இல்லாததால்...

 

      விளக்கங்களே தேவைப்படாத பிரிவுகள் விலக்கப்படுவதில்லை எண்ணங்களில் இருந்து...

 

      ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்ப்படும் காதலாநட்பா ? என்ற குழப்பங்கள் பெறும்பாலும் பிரிவில் வந்தே முடிகின்றன .

 

      கவிதையால் காதல் அழகாகாதலால் கவிதை அழகாகாதல் நீ, கவிதை நான்.

 

      கனல் தெரிக்கும் உன் கரு விழிகளில் காதல் தெரிவது எப்போது?

 

ஹோட்டலில் பல சமயம் வெயிட்டர்களே பூச்சாண்டிகள் இன்றய குழந்தைகளுக்கு..

 

 

      வந்துவிட்டான் என் காதலன் என் தனிமை தெரிந்து...-மழை.

 

      என் காதலை சொல்லிவிட ஆசை, உன்னை முழுதாக அள்ளிவிடவும் ஆசை, ஆனால் நீயோ என்னை தள்ளிவிடவே ஆசைப்படுகிறாய்..

 

      நீ சொல்வாயென காதலுடன் நான். சொன்னால் நான் என்ன பதில் சொல்வேனென கலக்கத்துடன் நீ . மலராமலே செல்லவேண்டுமோவென சோகத்துடன் நம் காதல்.

 

 

மறக்கவேண்டிய விஷயங்கள் தொலையாமல் தொல்லை கொடுக்கின்றன, மறந்துவிட்ட விஷயங்கள் தூரத்தில் நின்று சிரிக்கின்றன.

 

      மெல்லிய பாடல்கள் தான் கேட்கிறேன் ஆனாலும் மன அலைகளில் உன் சீற்றம்..

 

      ரூம் மெட்ட பொண்ணு பாக்க வராங்களாம் நாளைக்கு. பொண்ணு இங்க தண்ணி பார்ட்டிக்கு இப்பவே சொல்லிட்டு போறா. வெளங்கிடும்.

 

      ஏன் பிறந்தேன் உன் மகளாகபிச்சையெடுப்பவர்கள்கூட பிச்சையெடுக்க விடுவதில்லையேதன் பிள்ளைகளை மற்றவரிடம் பாசத்தை.. ஆனால் நீ?

 

 

      ஒவ்வொருத்தருக்கும் தனித் தனியா ரிங் டோன் வக்கிறதுதான் இப்போதைய கேர்ள்ஸ் டிரன்டு போல.

 

      காஃபி மட்டும் குடிச்சிட்டு இன்னமும் பெட்ல படுத்துகிட்டு இருக்கும் நல்ல உள்ளங்கள் இதை RT செய்யவும்...கணக்கெடுப்பு.

 

      எல்லோருடைய வாழ்விலும் தனிமை உண்டுசிலருக்கு நண்பனாக, பலருக்கு எதிரியாக..

 

 

அவனுக்காக இவள் கனவு காண்கிறாள்இவளுக்காக அவன் உறங்க மறுக்கிறான்ஆக எல்லாமே முரண் இந்த முத்தங்கள் நிறைந்த காதலில்....

 

      விடியும் காலைகள் சொல்லாமல் போனதில்லை உன் குறும்புகளின் விவரங்களை...

 

      இல்லாதவர்களை இருப்பதாக கற்ப்பனை -எளிது, இருப்பவரை இல்லாததுபோல உண்மை -கடிணம்.

 

      கவிதை இலக்கியம்தான் பேச வந்தேன் உன்னிடம் ஆனால் உன் கண்களைப்பார்த்த பின்பு புத்தகம் மாறிவிட்டது காதல் இலக்கியமாக....

 

 

நெருங்கி வரும்போது விலகல் விரும்பப்படுகிறது ,நெருங்கிவிட்டபின் விலகல் வெறுக்கப்படுகிறது.

 

அலைபாயும் என் கூந்தலுக்கு தெரியாது அது கரை சேர உன் தோள் அருகில் இல்லையென்பது...

 

நெடுநாள் பயணம்கூட முடிவுக்கு வந்துவிடும் சில தூரம் கடப்பதனால் ஆனால் பல தூரம் கடந்தபின்னும் நீண்டுகொண்டே செல்கிறதுநம் இரவு...

 

ஏனோ தெரியவில்லை எல்லா ஞாயிறும் நியாயமில்லாமல் வெறுக்கப்படுகிறது என்னால்..

 

      மனதை வருட இசை வேண்டும், கூந்தல் தவழ காற்றும்வேண்டும்என் கனவுகள் பலிக்க நீயும் வேண்டும்..!

 

      அன்னை மடி தாலாட்டை இதுவரை   உணர்ந்ததில்லை, இன்று உணர்கிறேன் தொடர்வண்டியில்...!

 

      மழை மீண்டும்..கவியே உன் துணை வேண்டும்...!

 

 

ஒரு ஊர்ல ஒரு நரியாம், அதோட கதை சரியாம்...நான் பாப்பாவா இருக்கும்போது பாட்டி சொன்னது

 

     

      மிகவும் பிடித்தமான உணவு -சப்பாத்தி..! நவ் ஈட்டிங்.  (யாரும் கண்ணுவக்காதீங்க)

 

      எதார்த்தத்தைவிட ஏமாற்றத்தையே விரும்புகின்றனர் பலர்.

 

      சில விஷயத்தில் பிடிவாதம் நல்லது.

 

      விழி அம்புகள்தான் எனக்கு ஆனாலும் தடுமாறிப்போகிறேன் அதைவிட வலிமையான உன் சொல்லம்பின் சீற்றத்தில்...!

 

      சரியாக தெரியாத உன் பெயரை உச்சரித்து பழகிக்கொண்டிருக்கிறேன் இப்படியாவது உன்னை முத்தமிட...!

 

      மழையில் நனைந்துவிட்டேனென உன் வருத்தம், என் காதலனை தழுவி விட்டதாய் என் மகிழ்ச்சி...!

 

      சாரல் உன் தீண்டலைப்போல மென்மை.. தூரல் உன் கோபத்தைப்போல வன்மை...!

 

      நனையாத மழைக்கு சமம் தொடுதல் இல்லாத காதல்...

 

என் வெட்கங்கள்  வீணாகிறது நீ பார்க்காமலே  ()சிக்கவாது நீ வரவேண்டாமா?

 

புதிர்களாக சொந்தங்கள்,வி()ளக்கப்படாமலே பயணம் கடைசிவரை...

 

எனக்கான சிரிப்பை  மறந்தேவிட்டேன்மற்றவரின்  உலகத்தில் கோமாளி ஆனதால்..

 

      கேட்பவர்களுக்கு எல்லாம் பதில்சொல்ல ஆரம்பித்தால் நாம் கேட்கவேண்டிய கேள்விகள் முடிந்துவிடும் கேள்விகளாகவே.....

 

காத்திருப்பினால் உண்டான காயம் மறக்க வேண்டும் எனக்கு உன் கை சேர்ப்பு...!

 

      பெருங்கோபம் நீ கொண்டாலும் அதை சரிசெய்ய சிறு முத்தம் போதும் எனக்கு..!

 

      வைரம் மதிப்பில்லை உன் ஒரு துளி கண்ணீருக்கு..வீணாக்காதே ஆனால் பட்டைதீட்டு....

 

 

      இனி சொல்வதற்க்கு ஒன்றும் இல்லை சோகம் நிறைந்த என் கண்ணீரைத்தவிர உன்னிடம்...இனியும் என்வலி புரியவில்லையெனில் சென்றுவிடு திரும்பாதே...!

 

      இதுவும் கடந்துபோகும்என்ற வார்த்தையிலேயே கடந்துவிடுகிறோம் கட்டுக்கடங்காத சோகங்களையும்...

 

      இதுவரை பூ பிரியனாக இருந்த நான் பூவைப்பிரியனானது பூக்களைவிட அழகான உன் சிரிப்பை பார்த்து...!

 

      நீ விரும்பி  சூடும் மாலையும் என்னைப்போலொரு பூ என்பதால்தானா எளிதில்  கசக்கிவிடுகிறாய்...?

 

      பேசாதே என என்னிடம் கோபமாக சொல்லிவிட்டு நீ மட்டுமே கொஞ்சலாக பேசுகிறாய் உனக்கு கொஞ்சமும் இரக்கமில்லையா? என் காதல் கெஞ்சுகிறதே உன்னிடம் !

 

      என்னை தவிர்ப்பதாக நினைத்து கோபப்படவில்லை நான் ஆனால் உன்னிடம் என் முக்கியத்துவம் குறைவதாக எண்ணுவதாலேயே கோவப்படுகிறேன்...!

 

 

      உனக்காக காத்திருக்கும் நேரங்களில் நடந்தே போயிருந்தன்னா வீட்டுக்கே போய் சேந்திருப்பேன்.:-P கவித சொல்லுவேன்னு நினச்சீங்களா?

 

      என் சோகம் என்னும் வார்த்தையை நீ மோகம் கொன்டு அழிக்க பார்க்கிறாய்முடியாது...!

 

      சிலநேர காத்திருப்பும் பலமடங்கு  சந்தோஷமாம், பலநேரமாகவே காத்திருக்கிறேன் சிலநேரமாவது உன் தோள் என் தலை சாய கிடைக்கும் என்ற நம்பிக்கையில்

 

பூக்களை பார்க்கும்போது அதில் அதை பறித்ததால் உண்டான சோகம்  காண்பது நான் மட்டும்தானா ??

 

      உன்னை பிரியும் கொடுமைகூட பெரிதாக இருக்குமாவென தெரியவில்லை உன்னை தேடும் வலியைவிட...!

 

      உன் வாசம் சேர்ந்தே வீசுவதால்தான் காற்றும் எந்தன் கவலையை போக்குகிறதோ ...?

 

      உறங்க முடிவுசெய்தேன் திறக்க மறுக்கிறான் கனவுகளின் கதவுகளை...!

 

      பிடித்திருந்தாலும் போராடவேண்டியுள்ளது உன்னிடம் போலியாகவாது, உன் வேகத்தை அதிகரிக்க...!

 

      தொட்டுவிடும் தூரத்திலே நீ இருந்தாலும், உன்மீது படாமல் நான், என்னை தொடாமல் நீ...!

 

 

      கொண்டவனின் கோவம் குறைக்க ஒரே வழி அவன் கையில் குழந்தையாவது..

 

      கேள்விகள் கேட்பது என்னமோ என் உதடுகள்தான் ஆனால் அவையனைத்திற்க்கும் பதில் கிடைப்பது உன் கண்களில்...!

 

      தொலைத்ததற்காக எப்போதும் வருந்தாதேஅதை நீ மறக்கவில்லையென நினைத்து சந்தோஷப்படு...

 

      ரசனை மிகுந்த ரசிகன் கிடைக்கவில்லையெனில் எல்லாமே பாழ்...

 

      குழந்தைத்தனமான பெண்ணின் குறும்புகள் கேலிக்குள்ளாகின்றன சில ரசிக்கும் மனப்பான்மை இல்லாதவர்களால்.

 

      நீ கேட்டு என்னால் வழங்க முடியாதென மறுத்த மன்னிப்பை இன்று நான் கேட்கிறேன் உன்னிடம் மன்னிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை ஆனால் மறந்துவிடாதே.

 

 

      விளக்கங்கள் தேவைப்படுவதில்லை நம் விவாதங்களில்.. விலக்கங்களே தேவைப்படுகின்றன...!

 

      தினமும் விடிகிறது தனியாகவே...என்றுதான் விடியும் நீ என் அருகில் துணையாக ...?

 

      கனலாக இருந்திருந்தாலே காணாமல் போயிருக்க மாட்டாய் என்றே தோன்றுகிறது கயலாக மாறி நீ கரைந்து போனதால்...

 

ஆசைகளை சமூகம் கருதி மறைப்பதல்ல கௌரவம், நமக்கான ஆசைகளை நம்மால்முடிந்தவரை மற்றவருக்கு தொல்லையில்லாமல் நிறைவேற்றுவதே உண்மை கௌரவம்...!

 

      ஆண்களுக்கு அழகாக தெரிவது பெண்களுக்கு ஆபாசமாக தெரிவதன் காரணம் அறியாமையோ?

 

      பொய் நல்லது புணர்தலுக்கு உதவுவதால்...!

 

      கோபமும் தாபமும் ஒருங்கே விளையாடும் ஒரே மேடை "கட்டில்"...!

 

      புதிர்கள் போலவே நம் இரவு தேடித்தேடி கண்டுபிடிப்பதிலே சுகம் காண்கிறோம்...!

 

      என் "போடா'வில் கலந்திருக்கும் வெட்கம் காதலாவது "போங்க'வில்தான்...!

 

புரட்டாசிதான் இது ஆனாலும் உணர்கிறேன் மார்கழியை நீ அருகில் இருப்பதால்...!

 

      உந்தன் பொய்கள் கொடுக்கும் போதையில் எந்தன் மெய் இழந்துவிடுவேனோ...?

 

      புன்னகையை வீணாக்காதீர்கள்  புறம் பேசுபவர்களிடம்..

 

      எல்லோரையும்போல உன்னிடமும் சகஜமாக பேச ஆசைதான் ஆனாலும் பேசவில்லை மற்றவரைபோலவே என்னையும் நீ நினைத்துவிடக்கூடாது என்பதால்...!

 

இலக்கணம் இல்லாத இலக்கியம் நம் காதல்...!

 

      உன் கவிதைகள் அனைத்தும் நானாகவே மாறிய பின் உண்மையில் மறந்துவிட்டேன் என் உருவத்தை...!

 

கவிதை வேண்டும் எனக்கு ரசித்து ருசிக்க உன் உருவில் ...!

 

      நித்தமும் உன் நினைவில் வாழ்வதால் வீழ்ந்தே போகிறேன் எனக்குள் நடக்கும் உனக்கான யுத்தங்களில்...!

 

      கோலம் போடுவதில் பெண்களே தேர்ந்தவர்களாம் ஆனால் உன் விரல் என்மீது போடும் கோலமே அழகாக தெரிகிறது எப்போதும் எனக்கு...!

 

      மென்லினம் பயில்கிறது மின்னியல் உன்னிடம் ...! #கம்பியூட்டர் முன் நீ ...!

 

 

      எல்லா கல்வெட்டுகளும் படிக்கப்படுவதில்லை...

 

 

புன்னகைகள் சிலநேரம் பேச்சு தொடரவும்பல நேரம் பேச்சை முடிக்கவுமே பயன்படுகிறது...

 

      உன் குரல் கேட்டே விடிவது என் காலை...தூக்கம் கலைந்தாலும் கலையாததுபோல நடிப்பதே உன் வேலை....!

 

      உன் கவிதை சிரிப்பே என் கவலைகள் அனைத்தையும் மறக்க வைக்கும் சங்கீதம்...!

 

என் ராத்திரி தூக்கத்தை திருடும் ரகசிய ரசிகா கொஞ்சமாவது என் ரசனையையும் கற்பனை செய்...!

 

      நிஜங்களைத்தேடி பயணம் போனேன் போலிகள் அதிகம் இருக்கும் இடத்தில், இறுதியில் நிஜம் கிடைக்கவில்லை, நானே போலியாகிவிட்டேன்....

 

      குளிர் காற்றால்  விழித்துக்கொள்ளும் உன் நினைவுகள் அதன்பின் என்னை தூங்கவிடாமல் கொல்லும்...!

 

      மழையை நான் ரசிக்கிறேன் என நினைத்தேன் ஆனால் அதில் நனைந்ததுமே புரிந்தது மழைதான் என்னை ருசிக்க வந்திருக்கிறது...

 

      உன் குடையில் இடம்கேட்க்கவே என்  குடையை தெரிந்தே மறக்கிறேன் தினமும்...!

 

      பூமியில் பிறந்த தேவதை நனைகிறாள் தேவர்கள் தூவும் பூ மழையில்...! (நான்தான்)

 

 

 

      என்னதான் நான் கற்ப்பனை செய்தாலும் கற்பனைகளை மெய்யாக்க நீ இல்லாததில் ஏனோ மழையில் அழும் பேதையாக நான்...!

 

      இதுவரை பயப்படாத இடிக்கும் பயப்படுகிறேன் இறுக்கி பற்றிக்கொள்ள நீ அருகில் இருப்பதால்...!

 

மழையில் தேனீரும் என் குளிர் போக்கவில்லை  ... காச்சல் வந்தாலும் பரவாயில்லையென உன் முத்த மழையை எதிர்பார்த்து நான்...!

 

      ஒற்றை குடையில் என்னை அனைத்து அழைத்துபோக நீ வருவாயெனில் நில்லாது பேய்யட்டும் இந்த செல்ல மழை...!

 

      நீ அழைத்தவுடன் வரவே ஆசைப்படுகிறேன்என் சுயமதிப்பும் இழக்கக்கூடாதென கருதி நீ கூப்பிடும் தூரத்திலேயே காத்திருக்கிறேன்,அழைப்பாயா...?

 

      சொல்லிமுடித்தாய் உன் கேள்வியை என்னை பதில் பேச முடியாதபடி.....

 

      விடுதலை இல்லையா என் தனிமை சிறையிலிருந்து எனக்கு...?

 

      பாராட்ட மனம் இசையாவிட்டாலும் குறைகூற சட்டென தயாராகிறது சிலரது (மானங்கெட்ட)மனம்..

 

      ஒரு மலரை விரும்பினேன், பல மலர்கள் குவிந்தன என் கல்லரையில் ..#பபி

 

தோழமை மட்டும் எனில் தொடுதலில் காமம் இருக்காது.

 

      காகித பூக்களை போலே புன்னகை மாறாமல்+ receptionist girl ...

 

      தூரல் மழையுடன் தூது அனுப்பினேன் என் முத்தங்களை உனக்கு, சாரலில் நனைந்துவிட்டதாய் சலித்துக்கொள்கிறாய் போடா காதலா வீணானதோ என் முத்தம்...?

 

      விளம்பரமே தேவையில்லை நம் காதலுக்கு..மற்றவரை நமக்கிடையில் வரவிடாமல் தவிர்ப்பதாலேயே புரிந்துகொள்வார்கள் மற்றவர்கள் நம் காதலை...

 

      எப்படி முடிகிறது உன்னால் எல்லாக் குறும்புகளையும் செய்துவிட்டு என்னிடம் சமாதானமும் பேச...?

 

     

வேகமாக வந்து களவாட நினைக்காதே காற்றே நிச்சயம் ஏமாற்ந்துவிடுவாய்...தென்றலாக மாறி வா தருகிறேன் நீ எத்ர்பார்ப்பவற்றை நானே...!

 

பராமரிப்பில் பூத்திருக்கும் ரோஜாவைவிட தானே துளிர்த்து பூத்திருக்கும் கள்ளிப்பூ அழகாய் தெரிகிறது எனக்கு...

 

 

      ஜன்னலோர இருக்கை கிடைக்குமாவென தேடிய நிமிடம் மீண்டும் குழந்தையாக நான்.

 

      எல்லைகள் மீறக்கூடாது என எச்சரித்தேன்நீயோ எல்லைகளை மீறவே எத்தனிக்கிறாய் எப்போதும்...!

 

      சொல்லி சொல்லி பார்த்துவிட்டேன் மீண்டும் மீண்டும் அடம்பிடிக்கிறாய், நிச்சயம் நான் சொல்ல மாட்டேன் நீயாகவே கேட்கும்வறை...!

 

 

      கனவிலும் நினைக்கவில்லை காரணமில்லாமல் காயப்படுத்துவாயென ...!

 

      செல்லம் கொஞ்சி நீ நெருங்கும்போதெல்லாம் விலக எத்தனித்தும் முடியாமல் விளக்கிவிடுகிறேன் என் கோபத்தை...!

 

 

      எல்லாமே பிடிக்கும் உன்னிடம் எதை எடுக்கஎதை தவிர்க்கஎகீ

 

      வராதே காதலா தொடங்கிவிட்டேன் அன்பு மாறாமல் என்னுடனே இருக்கும் தனிமையை காதலிக்க...!

 

நீத்தமும் கொஞ்சுகிறாய் நினைவில்...நேரில் வந்தாலோ மிஞ்சுகிறாய்...குறும்புக்கு குறைவில்லை..குழந்தை மனம்கொன்ட காதலா...!

 

      மலராக நீ என்னை மதிக்காததுகூட பரவாயில்லை, ஆனால் முள்ளாக என்னை நினைத்து வெறுக்காதே...!

 

      எதாவதுசொல்லு என்று நீசொல்லும்போதெல்லாம் சொல்லிவிடதுடிகின்றேன் என் காதலை அதற்குள்முடித்துவிடுகிறாய் நம்உரையாடலை நான்எப்படிசொல்ல ?

 

வெறுமையில் பலநேரம் உன்னுடன் இருப்பதை விட தனிமை துணையுடன் இருப்பது சிறந்தது எனக்கு ...!

 

      அனைவரும் அருகில் இருந்தாலும் அரவணைப்பு எதிர் பார்க்கப்படுவது ஏனோ ஒருவரிடம்தான் ...!

 

      இப்ப சொல்லுங்க எனக்கு காந்தக்கண்ணழகி பெயர் சரியா தப்பா? http://t.co/jtkQsRXP

 

      என் கண்களை வர்ணிக்க தெரிந்த உனக்கு அதில் உள்ள காதல் மட்டும் புரியாமல் போனதேனோ?

 

 

      டெய்லி ஸ்விம்மிங் பன்னா ஸ்லிம் ஆகலாமாம்அப்ரம் ஏன் திமிங்களம் மட்டும் குண்டா இருக்கு?  #டவுட்டு

 

உனக்காக நான் பாடும் பாடல்கள் மட்டும் உன் காதில் சேர்ந்து என் காதல் சொல்லாமல் காற்றில் கரைவது ஏனோ?

 

      கிடைக்காது எனத்தெரிந்தும் கிறுக்கு பிடிக்க வைக்கிறது உன் முத்தம் என்னை...!

 

      பெண்ணின் தன்னம்பிக்கை அதிகமாக சோதிக்கப்படும் இடம் "உன் ஃபிரன்டு யாராவது அழகா இருந்தா எனக்கு சொல்லு"இப்டி ஒரு பையன் சொன்னா..

 

      ஏனோ பிடித்தவர் நம்முடன் இருக்கும்போது மற்றோருவருடன் பேசினால் மனம் வருந்துகிறது..:-(

 

      உன் விரல்பிடித்து நடக்கும் நாள் வரும்வரை நரகமே நான் சொர்கத்தில் இருந்தாலும்...!

 

      எந்த இனிப்பு மிகவும் பிடிக்குமென்றாய், எப்போதும் தீராத உன்  இதழ் என சொன்னேன்......

 

      தெளிவாக கூறுகிறேன் உனக்காகவே எழுதினேன் என்பதை இருந்தும் புரிய மறுப்பது ஏனோ உனக்கு?

 

      தனியாக உன் ரயில் பயணம், துணைவர ஆசை இருந்தும் சூழ்நிலைக் கைதியாய் நான் என் சுற்றம் கருதி...

 

      நன்றி சொல்லதான் வேண்டும் உனக்கு நிச்சயம் உதடால்தான் ஆனால் வார்த்தையாகவோ பேச்சாகவோ இல்லை வருந்தாதே அதற்க்குள் காதலா...!

 

      தோற்றமும் எழுத்தும் என்றும் இனையாது.

 

      உன்னால் நான் பட்ட காயங்கள் அனைத்துக்கும் ஒரே மருந்து உன்னிடமே  உள்ளது...

 

      இளமை இனிமை =துணையுடன் இருக்கும்போது மட்டுமே ...

 

      பெண் சுதந்திரம் ஆண்களுக்கு சமமாக அமர்வது... ஆனால் கால்மேல்கால் போட்டு அமர்வது  அல்ல...

 

      அடிமை படுத்த யாரும் விரும்பவில்லை உங்களுக்கும் உரிமை உண்டு என்றே சொல்கிறேன்

 

      பஸ்ல ஆண்கள் பக்கம் சீட் காலியா இருந்தும் உக்காராம இருக்கும் பெண்கள கேட்க்க விரும்பும் கேள்வி"உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?

 

 

      எதிர்ப்பு சொல்பவெரெல்லாம் எதிரியும் அல்லஎதிர்ப்பே சொல்லாதவர் நண்பனும் அல்ல....

 

      விதியாக நான் உனக்கு கிடைத்தபோதும் நீ ஏன் என்னை சதி செய்து பிரிக்க நினைக்கிறாய்...?

 

 

      டிவிட்டரில் சுயநலம் favorite செய்வது....பொது நலம் RT செய்வது, இப்ப சொல்லுங்க நீங்க பொது நலமா? சுயநலமா?

 

      யாருடன் இருக்கும்போது உன் மழலைத் தன்மை வெளிப்படுகிறதோ அவரே சிறந்த துணை உனக்கு....

 

      நம்மை புரிந்துகொள்ளாத நபர்களுடன் இருப்பதைவிட சிறந்தது  நமது எண்ணங்களை புரிந்துகொள்ளத்தெரிந்த நபருடன் இருப்பது ...

 

      நீ வருவாய் என நினைத்து உனக்காக நான் செய்தவைகளைவிட இனித்தது எதிர்பாராமல் நீ வந்து அளித்த உன் இதழ் இனிப்பு...!

 

      எல்லோரும் என்னிடம் பேசினாலும் ஏனோ வலிக்கிறது நீ என்னிடம் பேசாதது ...!

 

      சம்மதம் சொல்லியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன் ஆனால் நீ எதுவுமே சொல்லாமல் என்னை சங்கடத்தில் விட்டுவிட்டாய்...!

 

      நிச்சயம் உனக்கு கேட்க்கவில்லையா என் மனது ஓயாமல் உன்னை அழைக்கிறதே...?

 

போன் நம்பர்கள் நண்பர்களாவதும், நண்பன் நம்பராவதும் அவன் நடத்தையை பொருத்து!

 

      கவர்ச்சியை பெண்ணின் கண்களில் பார்ப்பவன் கவிஞனாகிறான் ! வேறு விதத்தில் பார்ப்பவன் காதலனாகிறான்!

 

      சோப்பை அடிக்கடி மாற்றுபவர்களுக்கு ஏன் தெரியமாட்டேன் என்கிறது அதனால் கிடைப்பது வெள்ளை இல்லை தொல்லை மட்டுமே என்று!

 

 

      குழந்தைகளுக்கு சுயநலம் சொல்லிக்கொடுப்பது பெற்றோர்களே!  #யாருக்கும் குடுக்காத, நீ மட்டும் சாப்டு ஸ்கூல்ல சரியா?  !

 

      உன் மடியில் என் உறக்கம் வேண்டும் அதில் நான் என்னை இழக்கவும் வேண்டும்...!

 

      பிடித்தவரின் நலவிசாரிப்பிலேயே பாதி  குணமாகிவிடுகிறது காச்சல் ...

 

      மனிதனுக்கு பிரச்சனை இல்லையென்றால் கடவுளுக்கு அர்ச்சனை இல்லை#பபி

 

காலைல மாடிக்கு வந்தாதான் எவ்ளோபேர் செழி(கொழு)ப்பா இருக்காங்கனு தெரியுது ...

 

      பிடித்த மழையும் பிடிக்காமல் போனது நான் துணி துவைத்து முடித்தவுடன் வந்ததால்...

 

      எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள்நான் உன்னிடம் கேட்கிறேன் "எங்கே நீ என் காதலா "?

 

      உன் தலைகோதல் கிடைக்குமென்றால் தினம் வந்தாலும் தாங்குவேன் காய்ச்சலை ...!

 

காய்ச்சல் எனக்கே ஆனாலும் கொதிப்பது உன் மனம்...!

 

      மழை பிடிக்குமென களித்தேன் நான், சளி பிடிக்கும் என்பதையும் மறந்து....பிடித்துக்கொன்டது சளி, பிசுபிசுத்துப்போனது மழை

 

என் காய்ச்சலுக்குஏதேதோ மருந்து கொடுக்கிறாய் ஆனால் உனக்கு தெரியுமா உன் ஒற்றை முத்தமும் சில நிமிடஅனைப்பு போதும் நான் மீண்டெழும்மருந்து ...!

 

முகம் நிறைய விபூதி பூசி,ஒரு ரூபாயை முடிந்து வைக்கும் என் பாட்டிக்காகவே பல நாள் என் காய்ச்சல் பறந்துள்ளது!

 

      காய்சல் வந்துவிட்டது எனக்குஉன் நினைவுகள் குளிராய் என்னுள் மாறியதாலோ...?

 

உன்வீடு

தேடச்

செல்வதால்!!

 

 

 

      உன் கண்களை பார்த்து பேச ஆசை ஆனால் அதுவோ நிறுத்தாமல் தொடுக்கிறது போர் என்னிடம் ...!

 

      உயிரே உன்னை உயிராய் பார்க்க ஆசை , வருவாய் அவன் வடிவில் என்ற நம்பிக்கையில் நான், என் காதல், என் ஆசை!

 

      ஒவ்வொருமுறையும் நீ என்னிடம் கேட்க்கும் "என்ன தருவ நீ?" இந்த கேள்விக்கு எப்படி உன்னிடமே சொல்வேன் என்னையே தருவேனென!

 

      கோபமே வராதா என்மீது எனக்கேட்க்கும் உன்னிடம் எப்படி சொல்வேன் உன் கண்ணீர் என் இரத்தமென்று ...!

 

தொலைத்துவிட்டாய் என்னை இது தெரிந்தும் தொலைக்க மறுக்கிறேன் உன்னை...!

 

      உன்னிடம் நீ கேட்டாலும் கொடுக்காத மரியாதையை மற்றவரிடம் உன்னைப்பற்றி பேசும்போது அள்ளி அள்ளி கொடுக்கிறேன், காரணம் ஏனோ?

 

 

      தம்பியுடையான் படைக்கு அஞ்சான், என் தம்பி வெங்கட்ராமன் http://t.co/AwBYUVJA

 

      எங்க வீட்ல பூஜை செய்யப்பட்ட சிலை:-) http://t.co/unFgp2qm

 

      சண்டை போட்டால் கோபிக்கும் நீ ஏன் சமாதானம் மட்டும் செய்ய துடிக்கிறாய் ...!

 

 

      மன்னிப்பே உனக்கில்லை, முடிந்தவரை தவறை எனக்கு தெரியாமல் செய் போதும் !

 

      ரசனைகள் மாறலாம் ஆனால் ரசிப்பு மாறாது!

 

      எப்படிதான் முடிகிறதோ ஏளனமாய் மற்றவரை விமர்சிக்கநாமும் விமர்சிக்கப்படுவோம் என்பதை மறந்து!

 

      மன்னிப்பு கேட்காதே என்னிடம், மரணித்துவிட்டேன் நான் ...!

 

      கேட்காத பாராட்டை கொடுத்து தவறாக பாராட்டிவிட்டேன் என திரும்ப எடுப்பது அமைதியான குளத்தில் கல்எறிந்துவிட்டு அமைதியாய் திரும்புவதைப்போன்றது!

 

      தேன் ருசிக்க ஆசைப்படுகிறேன் வண்டுபோல, பூக்களைப்போலஇதழ் மூடி நீ, உன் இதழ் திறக்க வரும் ஒரு விடியல் மறவாதே பூவே!

 

      சினுங்காதே பெண்ணே சிறைபடுகிறேன் நான் உன் கண்களில்...!

 

      குழந்தைபோல நீ உன் நாக்கை நீட்டி பழிப்பு காட்டும்போது நானும் குழந்தையாகவே மாறிப்போகிறேன்:-P வெவெவவவ:-P

 

      பெண்கள் தயங்காமல் 'டா'சொல்வதுபோல ஆண்கள் இயல்பாய் "டீசொல்வதில்லை!

 

பிரசவ வலியை உணரவில்லை ஆனாலும் தவழ்கிறது என் குழந்தை புத்தகத்தில்!

 

      கவிதை என்றவுடன் நீ வருகிறாய் நியாபகத்தில் , நீ வந்தவுடன் காதலும் வந்துவிடுகிறது ...வடிக்கும் ஒவ்வொரு கவிதையும் உந்தன் வடிவமாய்...

 

      தவழ்ந்து வந்து ஆறுதல் அளிக்கும் என நினைத்தால் சுழன்று வந்து என் தூக்கம் கலைத்தது - தென்றல்.

 

      பலரது வாழ்க்கை பக்கத்தில் இருப்பவராலும் கவனிக்கப்படாமல் இருந்தது வரலாறாய் மாறும் வரை

     

வண்ணவண்ணமாய் மீன்கள் நீந்தினாலும் அவற்றுக்குள் பேதமில்லைஅந்த சிறு தொட்டிக்குள், ஆனால்நாமோ அடித்துக்கொள்கிறோம் இவ்வளவு பெரிய நாட்டுக்குள்

 

      எனக்கு தெரிஞ்சி சீரியல் வில்லனவிட அதிகமா திட்டு வாங்குறது ஈபில வேலை செய்யுறவங்கதான் தாய்குலத்துகிட்ட!

 

      கல்யாணம் மட்டும் வேணாவாம் ஆனா ஆத்தங்கறை மட்டும் வேணுமாம் -பிளடி ராஸ்கேல் புள்ளையார்!

 

      புள்ளையார்னா ஏன்எல்லாருக்கும் புடிக்குது தெரியுமாஏன்னா அவர்கிட்டதான்  மௌவுசு ஜாஸ்தி!

 

பிள்ளையாருக்கு பர்த்டேனா அவர சீகா போட்டு குளிக்க சொல்லுங்க நான் குளிக்கமாட்டேன் கண் எரியும்-பக்கத்து வீட்டில் வான்டு அழகே அழகு!

 

விநாயகனே வினை தீர்ப்பவனே, வேத முதற்ரோனே, ஞான முதல்வனேஹாப்பி பர்த் டே புள்ளையார்! http://t.co/FavRtCe6

 

      நான் உதட்டுச்சாயம் பூசுவது பிடிக்காதென்றாய் நீ பின்பு ஏன் இன்று சிவப்பாக்கினாய் என் இதழை?

 

 

கண்ணழகா?   காலழகாபொன் அழகாபெண் அழகா?

 

      கவலைகளுடன் பயணித்துக்கொன்டிருந்தேன் என் கவலை அறிந்து வந்துவிட்டான் என் காதலன்-மழை!

 

      நிலவும் என்னைப்பார்த்து மெல்ல மௌன புன்னகை பூக்கிறது நீ என் அருகில் இல்லாதது தெரிந்துவிட்டதோ? !!

 

      உனக்காக நான் வாங்கிவைத்த சாக்கிலேட்டை என் கையில் எனக்கென கொடுத்தாய் ஏனோ தெரியவில்லை அதன் ருசியிலனைத்தும் உன் முத்தமாகவே உள்ளது எனக்கு!

 

      இருட்டில் நான் தூரத்து தெரு விளக்காய் உன் நினைவு அனைந்து அனைந்து ஒளிர்ந்து என் கவனமீர்க்கிறது!

 

      பயணச்சீட்டாய் உந்தன் காதல் இறங்கும் வரை மட்டுமே உனக்கு முக்கியம் ,உன் தேவை தீர்ந்ததும் குப்பை!

 

இரண்டு நிமிடம் உன் தோள் சாய்ந்ததில் பெற்றுவிட்டேன் விமோச்சனம் தனிமை சாபத்திடமிருந்து!

 

      பாராட்டும் பனித்துளி போலவே, சூரியன் வந்தால் பனி மறையும், ரசனை வேறானால் பாராட்டு குறையும்!

 

      நம் உரையாடல்கள் எப்பொழுதும் நிறைவு பெறுவதில்லை, பேச ஏதும் நம்மிடம் இல்லாத போதும் ம்ம்ம் சத்தமும் வார்த்தையாகிறது

 

      சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்டதென கூறப்படும் திருமணங்கள் பெரும்பாலும் இருவர் மனதிலும் நரகத்தையே தோற்றுவிக்கிறது!

 

      படித்தவன் அறிவாளியுமல்ல, படிக்காதவர் முட்டாளுமல்ல, இரண்டாக நம்மை பிரிப்பது நாம் பிரச்சனைகளை எப்படி தீர்க்கிறோம் என்பதே!

 

      முல்லைக்கு தேர் கொடுத்ததால் வள்ளலானான் பாரி, நான்  தலை சாய தோள் கொடுத்து வள்ளலானாய் நீ எனக்கு!

     

சிலருடன் பேச ஆசைதான் ஆனா நாம பேசி அவங்க பதில் பேசலனா கஷ்டமாகிடும் அதனால நிறைய பேசரதில்ல நான் எல்லோர்கிட்டயும்!

 

      வரவேற்க காத்திருக்கிறேன் வாசலில்  சாலையில் போவோர் வருவோர் முகங்களில் உன் முகம் எதுவென தெரியாமல்!

 

      நல்ல விஷயங்கள் பல இருந்தாலும் முதலில் நாம்  கெட்ட விஷயம் தெரிந்துகொள்ளவே அதிக ஆர்வம் கொள்கிறோம், அந்த விஷயம் நம்மைப்பற்றி இல்லாத போது!

 

      நம்மைப்பற்றி ஓர் இன்பமயமான கனவு, ரசித்து களித்திருந்தேன், கனவுகூட நிறைவடைய வில்லை அதுவும் கலைந்தது!

 

 

      வேறெதுவும் தோன்றவில்லை உன் நியாபகங்களைத் தவிரஇதுவே கடைசி நான் தூங்க வேண்டும் காதலா

 

      ஒவ்வொரு இரவும் விடியலை நோக்கி ஆனால் என் இரவுகளனைத்தும் உன் கண்களை நோக்கி!

 

 

      ஈவ்னிங் என்பது பெண்களைப்போல மகிழ்ச்சி தருவதால்தான் ஈவ்(பெண்)னிங்னு பெயர் வச்சாங்க தெரியுமா?    :-)

 

உனக்கும் பேருந்துக்கும் ஒரே ஒற்றுமை இருவருமே நான் எதிர் பார்க்கும் சமயம் வராமல் என்னை சிறிது இன்னல்படுத்தி பின்பே தேன்றுகிறார்கள்..!

 

      உண்மையா காதல் சைனாலதான் பொறந்திருக்கனும் அதனாலதான் அதுக்கு வாரன்டியும் இல்ல கேரன்டியும் இல்ல!

 

      நீ எனக்குள் இருந்தது தெரியவில்லை எனக்கு என்னையும் சேர்த்து நீ பிரித்து எடுத்து பிரியும் வரை!

      சில நேர சண்டைக்கு பின் மவுனம் நமக்கே நம் செயல் பிடிக்காமல் போனதால் வருகிறது!

 

      நான் விளையாட்டு என நினைக்கையில் அது வினையாகிறதுயாருடைய மனதையாவது புன்படுத்தியிருந்தால் சாரி:'(  மன்னிச்சுடுங்க!

 

      எல்லோரும் உங்களை விட்டு பிரியும்போதும், யாரும் நெருங்காகபோதும் ....ஒன்னு தெரிஞ்சிக்கோங்க அதுக்குதான் டெய்லி குளிக்கனும்ங்கறது! பபி

 

      ஏனோ சில பெயர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிடுகின்றன அதன் உரிமையாளரை நமக்கு பிடிக்காத போதும்!

 

      நேற்று நானும் தங்கத் தலீவர் @g4gunaa வும் ...என்னா ஒரு லுக்கு தலீவா வாழ்க#குணா விசிரிகள்! http://t.co/Hfuu0Oe3

 

      நம் அவசரத்திற்க்காக ஒழுங்காக அடுக்கப்படாத செருப்புகளும் நம் வாழ்க்கையும் ஒன்றே -நிதானம் தவறினால் அழகாய் இருக்காது!

 

      உன்னைக்காண இருந்த ஆவலில் நான் வந்த பாதையை மறந்துவிட்டேன், தக்க சமயத்தில் உன் பொய் ரூபம் காட்டி என் மெய் பாதையை நினைக்க வைத்தாய்!

 

      நீ வரும்பாதைஎதுவெனதெரியாமல் தேடிநின்றேன்கலைத்துப்போய் ஒரிடத்தில், அந்த சமயத்திலேகடந்து சென்றாய்என்னை,நான் உன்னால் தொலைந்ததையும்கவனிக்காமல்

 

      சில நேரம் நம் மகிழ்ச்சியும் காகித பூவும் ஒரே மாதிரியானது,இரண்டுமே பார்க்க உண்மைபோல தோன்றினாலும் உண்மையில் அது உண்மையல்ல!

 

      மலர் தோட்டத்தை கடந்துவந்தேன் என் மனமும் அதில் பூவாய் மாறியது!

 

 

பொய் என்று தெரியாமல் போனது உன் நட்புதெரிந்திருந்தால் வீணாக்கியிருக்கமாட்டேன் என் விலைமதிப்பான கண்ணீர் துளியை அத்துடன் ஒப்பிடமுடியாத உனக்காக

     

நட்புக்குள் காதலைகாண நான் விரும்பினேன், நீ காமம் இல்லையெனில் நட்பும் வேண்டாமென்கிறாய் எனக்குள் நீ சூழ் கொண்டிருந்தது தெரியாமல்!

     

உனக்கு தெரியுமா என் ரகசிய காதலா நீ எனக்கு கொடுத்த கடிதங்களைவிட நான் உனக்கு கொடுக்காமல்போனகடிதங்களே அதிகம்...!

     

இராத்திரி ஆனா பீர்னு சொல்லுறாங்க, காலைல ஆனா மோர்னு சொல்லுறாங்க, நான் தெரியாமத்தான் கேக்குறேன் எதுக்கு குடிக்கனும் எதுக்கு தெளியனும்!

     

      பிச்சை என்னிடம் கேட்கிறார் ஆனால் எனக்கோ அவரிடம் கேட்க தோன்றியது பாசத்துடன் அவர் மகளை பார்த்து சிரித்த சிரிப் http://t.co/I58LIub3

 

படிக்கறதுல இரண்டுவகை.1-கஷ்டமான பாடம் அதை படிக்க முடியாது,2.ஈசியான பாடம் அதை படிக்கவே வேணா!  #படிக்காமலே பாஸ் ஆனோர் சங்கம்!

 

      குரங்கு1-நான்இந்த மரத்துக்கு புதுசு,இங்க இருக்க யாருகிட்ட அனுமதி வாங்கனும்கு2-மெதுவா பேசு தல டிவிட்டர்ல பிஸியா இருக்காருபபி

 

பனி இரவும் பாலைவனமானது குளிரை பகிர நீ அருகில் இல்லாததால்!

 

      அழைக்கிறேன் ஆவலுடன் இருந்தும் ஏனோ வரமறுக்கிறாய் உணவுன்ன மறுக்கும் குழந்தையாய்! இருந்தும் அழைத்துக்கொன்டே உன் பின்னால் நான் அன்னையாய்!

 

 

      ♥...! கோட்டை உன் பெயர்கொண்டு நிறப்ப ஆசைப்படுகிறேன் நீயோ பெயரைக்கூட சொல்லாமல் என்னை பாடாய் படுத்துகிறாய்...!

 

 

பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை,ஆண்கள் இல்லாமலும் பெண்கள் இல்லைஇது நன்றாக தெரிந்த ஆண்களே பெண்ணை தவறாக உவமிப்பது அவர்களுக்கு ஏற்பட்ட இழிவே!

 

      காதல் பறவையாய் உன்னுடன் பறக்க ஆசைப்பட்டேன் ஆனால் நீ என்னை கூண்டு கிளியாய் மாற்ற நினைக்கிறாய் ...!

     

சிறையிலிருக்கும் பறவை நான் , எனக்கும் விடுதலை கிடைக்கும் என்று நம்பினேன் ஆனால் அது  கிடைத்ததோ என் சிறகு  உடைந்த பின்பு .

     

காலை எழுந்ததும்தான்கவனித்தேன் காலில் ஒரு கொலுசு நழுவிப்போயிருந்தது  கண்டெடுத்தேன் என்கட்டில்அருகில் உண்மைசொல் கள்வா கொலுசை மட்டும்தானா?

     

அடுத்தவரை குறைகூறுவதென்றால் அவரிடம் மட்டும் கூறவும் காரணம் உனக்கு அவரது செயல் பிடிக்கவில்லை என்பதற்க்காக எல்லோருக்குமேஅதுபிடிக்காமல்போகாது

     

என் இமைக்கதவுகளை தாழிடாமலே உள்ளது நீ வரும்போது அதை தட்டித் திறக்கவும் கஷ்டப்படக்கூடாது என்பதால்!

     

என்னோட காபி கப், யாராச்சும் வரீங்கலா காபி குடிக்க? http://t.co/OtQHIqMp

     

ஜன்னல் வழி தோன்றி எந்தன் தூக்கம் கலைத்தது மின்னல் ....என் காதலனின் வருகையை எனக்கு தெரியப்படுத்த   ...............

     

சொல்லுவதை விட செய்வதே அதிகமாக இருந்தது காதலிக்கும்போது, கொஞ்சுவதைவிட கத்துவதே அதிகமாகிவிட்டது திருமணத்திற்க்கு பின்பு!

     

நண்பனின் புலம்பல்"அவ கூட இருந்தவரைக்கும் ஹோட்டல் பில், ஊருக்கு போயிட்டதால போன் பில், என்ன உட்டுட்டே போயிட்டா'பார் பில் "செலவுதான் அவளால

     

அமைதியான ஆண்களைவிட குறும்பான ஆண்களையே பெண்கள் ()சிக்கிறார்கள் கண்களால்!

     

யாருடன் சண்டையிட்டாலும் விட்டுக்கொடுப்பதே என் வழக்கம் ஆனால் இப்போது மாறிவிட்டேன் உன்னுடன் சண்டை போட ஆரம்பித்ததிலிருந்து...!

     

சூடிய மல்லியும்    வதங்கிப்போனது வாசம் பார்க்க நீ இல்லாததால்!

     

எழுத ஆயிரம் இருந்தாலும் ஏனோ அந்த ஓன்றைப்பற்றி எழுதினாலே எல்லோருக்கும் பிடிக்கிறது!

 

      வெயிலும் பிடிக்கிறது என் தலைவன் இல்லாத சமயம் குளிரை என்னிடம் நெருங்க விடாததால்!

 

      பெண்களுக்கு அழகுஅலங்கார  நகையிலும் பகட்டு உடையிலும் இல்லை அன்பான புன்னகையிலும் பண்பான நடத்தையிலுமே உள்ளது!

 

நதி நீரில் கலந்து கரையும் மழைத்துளியாய் உன்னில் கரைந்து கலந்துவிட்டேன்!

      அல்லிராணியாக ஆசை இல்லை எனக்கு உன் உள்ளத்தை அள்ளி ஆளவே ஆசை எனக்கு!

 

      தேடித்தேடி படிக்கிறேன் உன் கிறுக்கல்களுடன் என் ரகசிய பெட்டியில் தேக்கிவைத்த கடிதங்களை!

 

      நீ தேடுவாய் என தெரிந்தே தொலைகிறேன் உன் கண்களில் என்னைக் காண!

 

      ஆண் அன்பின் சோரூபமாகலாம் ஆணவத்தை துறந்தால்!

 

      பயமே இல்லையென்றாலும் பயந்ததுபோல நடிக்கிறேன் பற்றிக்கொள்ள உன் தோள் கிடைக்கும் என்ற ஆசையில்...!

 

      தலைவலி அதிகரிக்கிறது தன்னலம் அதிகமாக பிறர் பார்க்கும்போது!

 

      சாப்டியா? "என்று யாரும் கேட்காதபோதே உணர்கிறேன் சாப்பாடு தட்டுடன் என்னை பின்தொடர்ந்து சாதம் ஊட்டிய உனக்கு என்னால் ஏற்பட்ட கால் வலியை !

 

 

கவிதை பேசுகிறேன் நான், காதல் பேசுகிறாய் நீ - முடிவில் என்னை மட்டுமல்ல என் கவிதைகளையும் மறந்து நான்......காரணம் நீயே அறிவாய்!

 

      தொல்லைகள் சுகமானதாக இருக்கும்வரை  ரசிப்பு எல்லை மீறினால் வெறுப்பு ............

 

      தூக்கமும் விரும்பும் ஒன்றாய் மாறிப்போனது கனவிலேயே உன் குறும்புகள் அதிகம் என்பதால்  ...!

 

      உன் பதில்களுக்காக காத்திருந்தே  என் பதில்கள் மாற்றப்பட்டுவிட்டது பலமுறை ...........

 

      எங்கும் தேடிக்கொண்டே செல்கின்றேன் என் சோகம் நிறைந்த சாலைகளில் எங்காவது நீ புன்னகை பூக்களுடன் காத்திருப்பாய் என்று.! http://t.co/WehtnSx7

 

      சொல்ல வேண்டியவற்றை தெளிவாய் சொல்லிவிட்டால் திரும்ப சொல்லவேண்டிய அவசியமே இல்லை  ...

 

என் கண்களுக்கு புகைப்படம் எடுப்பதே வேலையாகி போனது உன் ஒவ்வொரு செயலும்  ஓவியம் ஆனதால் ...!

 

      வரவேற்க ஆசைபட்டவளுக்கு வீட்டுக்கு வர  வழி சொல்ல தெரியவில்லை ....... காதல் .......

 

 

எல்லோருக்கும் பிடித்த அமைதி எனக்கு மட்டும் பிடிப்பதில்லை காரணம் அது அதிகமாக உன் சொல்லிலும் செயலிலும் இருப்பதால் ...!

 

      பொய் நல்லது உன்னிடம் சொல்லும்போது ( எனக்கு சேலை கட்ட தெரியாது) ...

 

      உன்னால் இங்கு பசியில் சாப்பிடாமல் நான் காத்திருக்க எளிதாக கூறுகிறாய் வெளியில் சாப்பிட்டதை எனக்கு பசிக்கும் என்ற அக்கறை இல்லாமல்

 

      சொல்லகூடாது என நீ சொன்னாலும் சொல்லாமல் போவதில்லை உன்னால் ஏற்பட்ட வடு .............

 

      கூட்டுவதிலும் கழிப்பதிலும் அனுபவம் உனக்கே அதிகம் ...!

 

      அன்பு மாலை சூட்ட வந்தேன் உன் பார்வையில் வெட்கம் தாளாமல் அன்பான மாலை வாழ்த்திவிட்டு நழுவுகிறேன் கண்களை மௌனமாக்கி!

 

      உன்னை வரைய சிறந்த தூரிகை என் உதடுகளே!

 

      நீ இந்த சாலை வழியாக செல்வாய் என்தெரிந்தே கூட்டம் என குறைசொல்லி ஏற மறுக்கிறேன் ஒவ்வொறு பேருந்தையும்!

 

அலங்காரம் செய்வதே பிடிக்காமல் போனது ஒவ்வொருமுறையும் உன்னால் கலைவதால்!

 

      கொட்டும் மழைதானே பிடிக்கும் என்றேன் நீ கொட்டிக்கொடுத்துவிட்டுநனைத்து  போகிறாய் உன் முத்த மழையில் என்னை ...!

 

      எத்தனைமுறை வெட்டினாலும் மீண்டும் மீண்டும் வளர்கிறதே தவிர குறையவில்லை உன் விரல் நகமும், விடலைக் குறும்பும்!

 

உன்னை எழுதி எழுதி பேனா மை மட்டுமே தீர்ந்துபோனது, உன் அழகோ கூட கூட இன்னும் அதிகரிக்கவே  செய்கிறது !

 

      சில நேரம் உன் பிரியமான நண்பர்களும் உன்னிடம் பொய்கூற நேரிடும் அதற்க்காக நீ வருந்தாதே,சந்தோஷப்படு உண்மையைவிட நீ முக்கியமானதால் அவர்களுக்கு!

 

      உண்மை நண்பன் மட்டுமேகண்டுபிடிக்கமுடியும் உன் கண்ணீரை நீ மழையில் நனைந்தாலும்!

 

      வாழ்க்கையும் ஐஸ்கிரீம் மாதிரிதான் டேஸ்ட் பண்ணாலும் கரையும், வேஸ்ட் பண்ணாலும் கரையும்! அதனால நாம டேஸ்ட் பண்ணி கரைப்போம்!

 

      ஆசைப்படுவதையே மறந்துவிட்டேன் ஆசையாக நீ கொடுத்த முத்தத்தால்!

 

      கற்பனையை காதலிக்க பழகியவன் கண்களால் உலகை பார்ப்பதில்லை !

 

 

      நம்பிக்கையில்லாத மனிதன் இங்கு யாரும் இல்லை, அதை மற்றவர்க்கு வெளிப்படுத்தாமல் தன்னை பாவப்பட்டவனாய் காட்டிக்கொள்பவனே அதிகம்!

 

தொடும்வறை காதல் ,தொட்டப்பின் மோதல்!

 

      புரிந்துகொள்ள காதலித்தோம், மிக அதிகமாகவே புரிந்துகொண்டதால் பிரிகிறோம்!

 

      சிரிக்காதே தனிமையே இன்னும் சில நாட்களே உன் சந்தோஷம் வந்துகொண்டிருக்கிறான் என்னவன் உன்னிடமிருந்து என்னை சிறைமீட்க்க!

 

      நினைவாக நீ இருக்கும்போது என் நிஜத்தையே எங்கும் தேடுகிறேன்! தொலைந்தவள் நானல்லவா!

 

      நீ நல்லவனாக இருக்கிறாய் என்பதற்க்காக எல்லோரும் உன்னிடம் உண்மையாக இருக்கவேண்டுமென எதிர்பார்த்தால் நீயே உலகின் சிறந்த  முட்டாள்!

 

      போய் வா என உன்னிடம் கூறிவிட்டு பேகாதே என உள்ளூர தவிப்பது நான்! இல்லை போகாதே என ஒருமுறை கூறடி என உள்ளுக்குள் கேட்பது நீ !

 

சொல்லாதே இனி ஒருமுறை என் பெயரை நீ ,குயில்கள் அனைத்தும் ஏக்கத்துடன் காத்திருக்கிறது அந்த இனிப்பை சுவைக்க! நானும் உன் இதழை!

 

      தனிமையில் இருந்தால் துவண்டு போவேன், என் கைபிடித்துக்கொள் இருக்கும் ஒரே பிடிப்பு அதுதான் நான் மீண்டும் எழ!

 

      துன்பம் வந்ததுகூட அவ்வளவாய் சோகப்படுத்தவில்லை, உன் தோள் சாய்ந்து அழ முடியாததே இன்னும் அதிகப்படுத்துகிறது என் சோகத்தை!

 

உன் தேடல் நான் எனத்தெரிந்தும் மௌனம் காக்கிறேன், தேடிக்கிடைப்பதற்கே மதிப்பதிகம் என்பதால்!

 

      இன்னைக்கு காலைல பஸ்ல வரும்போது என்னோட பணத்த திருடிட்டாங்க

 

      உன்னை பார்த்தால் மட்டுமல்ல உன் பெயரை பார்த்தாலும் வெட்கம் வந்துவிடுகிறது,கட்டிவிட்டாயோ கண்கட்டி வித்தையில் என்னை ...!

 

      நம்மிடம் பிச்சை எதிர்பார்ப்பவனிடம் நாமும் பிச்சை எதிர் பார்க்கிறோம் புன்னியம் என்ற பெயரில்! ஆக நாமும் பிச்சைக்காரர்களே!

 

      இருப்பவன் காதலியோடு, இல்லாதவன் கவிதைகளோடு - காதல்!

 

      விரும்புவதில்லை வேண்டுமென, வெறுப்பதுமில்லை வேண்டாமென,நாமும் பழகிவிட்டோம் வாழ்க்கையை வாழ்க்கைக்கு அடிமையாய் வாழ!

 

      உன் ஒவ்வொரு இதழ் முத்தத்திலும் தெரிந்துகொள்கிறேன் உன் உச்சகட்ட கோபத்தை...!

 

 

      தொட்டுத்தழுவிய மழை தெளிவாக சொன்னது உன் காதலை என்னிடம்!

 

      மழையில் நனைந்து நீ வீடுதிரும்புகையில் உன் தலைதுவட்டிவிடும் சுகம்காணவாது விடாமல் மழை வேண்டும் ஒவ்வொறு மாலையும்!

 

      பெண் அருகில் இருப்பதை மதியாமல் இயல்பாய் சாப்பிடும் ஆண்கள் அழகாய் தெரிகிறார்கள் கம்பீரத்தால்!

 

      கோழையாக யாரும் பிறப்பதில்லை கௌரவம் என்னும் போர்வையில் கோழைகளாக வளர்க்கப்படுகிறார்கள்! # பெண்கள்

 

      உனக்கான தேவைகளை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளும் நீ எனக்கான தேவைகளை தர மறுக்கிறாய்!

 

      நீ துண்டிக்கும் தொலைபேசி அழைப்புடன் சேர்ந்தே துண்டாவது  என் இதயம் மட்டுமே  !

 

 

      எந்த காலையும் விடிந்ததில்லை நமக்கு சந்தோஷங்களைக்கொடுத்து,இதுவும் ஒருகாலை அவ்வளவே! விடியல் சூரியனுக்கேநமக்கில்லை!

 

      பிறக்கும்போதே சாணக்யன் பற்க்களோடு பிறந்தானாம், நான் சொற்க்களோடு உன்னை எழுத!

 

      ராட்டினத்தில் அமர்ந்ததும் உண்டாகும் தலைசுற்றலைரசிக்கும் நாம் வாழ்க்கை ராட்டினத்தில் உண்டாகும் தலசுறறலில் தவித்துவிடுகிறோம்!

 

மனநோயை குணப்படுத்த மருந்தொன்று கண்டுபிடித்தேன் அதற்கும் வந்துவிட்டதுexpiry date#twitterblock

 

      ஆசை அறுபதுநாள் ' யார் சொன்னது ? எத்தனை எத்தனையோ அறுபதுகளை தாண்டியும் நீ என் ஆசையாக மட்டுமே இருக்கின்றாய்  - நிம்மதி

 

      நானும் பறவைதான் வீடு என் கூண்டு ஆனதால் ......

 

      ஞாயிறும் நிம்மதியாய் இருந்திருக்கும் உன் நியாபகம் இல்லாமல் இருந்திருந்தால்! -திங்கள்!

 

      ஆண்களும் அழகே ரசிக்கும் மனம் அதிகம் உள்ளதால்!

 

முன்பெல்லாம் ஊர் சுற்றுவது என்றால் ரொம்ப பிடிக்கும், இப்பொழுதெல்லாம் உன்னை சுற்றவே பிடித்திருக்கிறது- நினைவாக இரவில், நிழலாக பகலில்!

 

      நானும் நீயும் Tom &Jerry மாதிரி இருக்கவே ஆசைப்படுகிறேன் -நித்தம் சண்டை போட்டாலும் நிமிஷமும் நீ இல்லாமல் இருக்க முடியாது !

 

      ஒருநாளில் வாடிப்போகும் மலர்களை பத்திரமாக கவனிக்கும் நாம் ஒரு சொல்லில் வாடும் மனங்களைப்பற்றி சிந்திப்பதுகூட இல்லை!

 

      கூண்டிலிருந்து வெளிவந்த பறவையாய் நீ பறக்கிறாய் -உன் மன கூண்டில் அடைபட்ட பறவையாய் நான்!

 

      அடிக்கடி இமைளை மூடித்திறக்காதே அவை எனக்கு நித்தம் முத்தம் கொடுப்பது போலவே தோன்றுகின்றது!

 

      உன் எல்லா அழகையும் எழுதி விட்டேன் ஆனாலும் மறுநொடி புதிய பாவம் காட்டுகிறாய் நீர்த்துளி போல ...!

 

      காரணம் தெரியவில்லை -காதல் அதற்கு பின் உன்னுடனான மோதல் ...

 

      அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம் சொன்னாலும் கேட்காமல் கேட்டுக்கொண்டே இருகின்றாய் முத்தத்தை......

 

      தனிமை - மூன்று எழுத்துதான் ஆனாலும் போகவில்லை மூன்றுலகம் சுற்றினாலும் என்னைவிட்டு .....

 

      எனது குளிர்காலம் உன்னுடன் இருக்கும்போது மட்டுமே குளிர் காலமாய் நீ இல்லாத பொழுதுகளில் என் கண்ணில் மழை காலமாய் ............

 

      நீ எனக்கு இல்லை என்றாலும் என்னிடம் இருப்பதெல்லாம் நீதானே ...!

 

      மறக்கவே நினைக்கின்றேன் உன்னிடம் பேசாமல் அனுபவித்த வலிகளை, ஆனாலும் முடியவில்லை உன் முத்த மருந்து கிடைத்தால்தான் போகுமோ ?

 

      நீ பேசாமல் இருக்கும் ஒவ்வொரு நொடியும்

எனக்கு மரணம் தேடி வரும் ஒரு வழி

என்று மறந்துவிடாதே...

 

      கவனமாக செல் உன்னைப்பற்றி கனவுகள் குவிந்துகிடக்கும் பகுதி என் இதயம் ...!

 

குடை இல்லாமல் செல்லும்போது அதிகமாகும் மழைபோல நீ இல்லாத பொழுதுதான் காதலும் அதிகமாகிறது உன் மீது

 

 

      ஆஸ்கர் விருது 4கிலோதானாம் ஆனால் எனக்கு கிடைத்த விருதோ அதைவிட 11மடங்கு -நீ தான்!

 

      இணைகிறதா..? இல்லை பிரிகிறதா...?.

எப்போதும் புரியாத தண்டவாளமாய் .....

உன் காதல் ...

 

      பேருந்து ஜன்னல் கம்பியிலிருக்கும் மழைதுளியுடன் உன் விளையாட்டு ,பேருந்துக்குள் இருந்தாலும் முழுதாய் நனைந்து நான்!

 

      தூரலுக்கு பயந்து நீ துள்ளி துள்ளி போகிறாய் குழம்புகிறேன் நீ மானாமயிலா என நான்!

 

      ஆடையில் கறை பட கூடாது என நீ பார்த்து மழையில் நடக்கையில் உன்னைப் பார்த்து  கறை கண்டது என் உள்ளம் மட்டுமே!

 

 

கட்டுபடுத்த முடியவில்லை உன்னை அள்ளி அனைக்காமல் தொலைவில் அமர்ந்து வேடிக்கை பார்க்க வந்துவிட்டேன் இப்போது உன்னுடனே கரைய!

 

      விலகி விலகி அமர்கிறேன் உன் தூரல் கைகளுக்கு கிடைக்க கூடாது என்று இருந்தும் தொடர்கிறாய் உன் துளிகளை அதிகப்படுத்தி#மழை

 

      தொடர்ந்து வந்த நீ தொடர்ந்துகொன்டே இருக்கிறாய் நான் தூங்கிப்போனதும் தெரியாமல்!

 

      என்னை ரசிக்க வைக்க மட்டுமில்லை ருசிக்கவும் வைக்கிறாய் மழையே உன் தேன் துளிகளை!

 

      என் அதிகபட்ச ஆசை என்பது எனது காலைகளை உன் தோளிலிருந்தே நான் தொடங்க வேண்டும்!

 

சட்டென அழவைக்கவும், சடாரென சிரிக்க வைக்கவும் நண்பனால் மட்டுமே முடியும்!

 

     

எல்லா குழந்தைகளுக்கும் உறங்க மடி தேவைப்படுகிறது ஆனால் அது யாருடைய மடி என்பது குழந்தையின் வயதைப்பொருத்தே வித்தியாசப்படுகிறது!

 

      நீ நகம் கடிக்கும் அழகை ரசித்ததில் நான் கடித்துக்கொள்கிறேன் என் உதட்டை!

 

வேலை செய்வதே உன் நினைவை நிறுத்ததான் ஆனாலும் விடவில்லை உன் நினைவு-காரணம் எல்லாமே நீ செய்த வேலை!

 

      ஏசி காற்றும் சோதிக்கிறது என்னை நீ இல்லாத போது !

 

 

      வெப்பம் ரசிக்க வெளிவந்தேன் வானமும் குளுமையாய் உன்னைபோலவே காதல் காற்றுடன் சேர்ந்து அனைக்கிறது என்னை!

 

பிடித்தவருடன் பயணிக்கும் அதே சந்தோஷம் அவரது நியாபகத்துடன் பயணிக்கும்போதும் ஏற்ப்படுகிறது!

 

தொலைவும் இன்பமானது உன்னுடன் பயணிக்கும்போதே!

 

      நீர் ஊற்றுவதே இல்லை ஆனாலும் வளர்கிறது உன் நியாபகம் என் மனதில்!

 

      அவனைப்போலவே அவன் பரிசளித்த  கரடி பொம்மையும் அழகுஅவன் அருகில் இல்லாத தருனங்கள்ல் அவனாகவே மாறிவிடுவதால்!

 

என் ரசனையை அதிகப்படுத்த நீ இருக்கும்போது எல்லா காலையுமே ரம்யமானதுதான் எனக்கு!

 

      கதிரவன்கூட காலையில் எழுந்துவிடுகிறான் ஆனால் உன் காதலில் விழுந்த என்னால் எழுந்திறிக்க முடியவில்லை!

 

      பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்துங்கக் கரிமுகத்து தூ மணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா!

 

      Wife-உங்க friendக்கு பாத்திருக்குற பெண்ணு நல்லா இல்லைனு நீங்களாவது சொல்ல கூடாதா  ?  hus-அவன் மட்டும் எனக்கு சொன்னானா?

 

      ரம்யமான காலை என் ரசணைகளை தூண்டுகிறது உன்னைப்பற்றி :-)

 

      நீ மிளகாய் கடித்துவிட்டு காரத்தை எனக்கு ஊட்டுகிறாய்! -அதுவும் தித்திக்கவே செய்கிறது எனக்கு!

 

      உன் நினைவு வரும்போதெல்லாம் கண்களை மூடி நம் சந்திப்பை தொடங்கிவிடுகிறேன்!

     

காரணமே இல்லாமல் உன்னை நினைக்கிறேன் காற்று என்னை தழுவும்போதெல்லாம் அதற்க்கு காரணம் நீயாக இருப்பாயோ என்று!

 

      பேருந்து கடந்துவரும்ஒவ்வொரு நிறுத்தத்திலும் அலுவலக சோகங்களையும் மறந்து வருகிறேன் பள்ளியின் பயணத்தை என்னிடம் கூற காத்திருக்கும் பிள்ளைக்காக

 

      அதிகாலை துயிலெழும் அவசியமே இல்லாமல் போனது உன்னை கண்ட பின் # தூங்க விட்டாதான?

 

      குட் நைட் சொல்ல போன் சொய்தாய் ஆனால் அது குட் மார்னிங் வந்தபின்னும் முடியவில்லை!

 

      தொலைவில் இருந்தே என்னை இம்சை செய்வதுநீ மட்டுமல்ல நிலவும்தான்!நீ கனவாக,நிலா கனிவாக!

 

      என்னை நீ பார்க்காமல் சென்ற நாட்களைவிட ,என்னை நீ நான் எதிர்பாராதபோது பார்த்த நாட்களே அதிகம் வலி கொடுக்கிறது எனக்கு!

 

      குளித்து முடித்தது நான்,ஆனால் சோப்பு வாசமோ உன்னிடம்!

 

வரும்போது மகிழ்ச்சி,போகும்போது வருத்தம்-"பணம்,காதல்"

     

      ஓடுற பாம்ப மிதிக்கிற வயசுன்னு சொல்லுறாங்களே பாம்பு எப்படி ஓடும் ? நியாயப்படி ஊறுற பாம்ப மிதிக்கிற வயசுனுதான சொல்லனும்?

 

      வாழ்கைத்துணையாய் நீ இருப்பாய் என நம்பினேன் நீயோ வழித்துணையாய் மட்டுமே வந்து இறங்கிவிட்டாய் உன் தடத்தில்!

 

இன்னல்கள் நிறைந்த காலை என் எண்ணங்களை அதிகப்படுத்துகிறது உன்னைப்பற்றி என் அன்பு தோழா ஆதரவுக்கு நீ இல்லையென்று!

 

      காதல் விளையாட்டையும் கற்றுக்கொடுத்து என்னை படைப்பாளியாக்கிய என் செல்ல காதலா உனக்கும் ஆசிரியர்தின வாழ்த்துக்கள்!

 

      நீ கண்ணீர் காதலன் என்பதற்க்காக அதை என் கண்களில் வரவழைத்து ரசிப்பது நியாயமா?

 

      உன் சோலையில் உதிர்ந்துவிட்ட பூக்களை பார்த்து கண்ணீர் வடிக்கிறாய் நீ! நானோ அவற்றை நம் திருமண மாலையாய் கோர்க்க நினைக்கிறேன்!

 

      தங்கமும்,வைரமும் விலை நிர்ணயம் செய்யும் இடம் மும்பையாம் ஆனால் என்னைப்பொறுத்தவரை அது நீ கழுத்தில் அணியும்போதே நிர்ணயிக்கப்படுகிறது!

 

      உன் அழகின் மொத்தமும் எனக்கே என்பதால் எங்கிருந்து ஆரம்பிக்க என் உதட்டின் தேடலை?

 

      கொடுத்தே பழகிவிட்டேன் உனக்கு திரும்ப எதிர்பார்க்கும் பழக்கமில்லை ஆனால் அன்று இனித்தது நீ கேட்ட முத்தம் இன்று கசந்தது நீ கேட்ட பிரிவு!

 

      நீ என்னைக்கேட்டதைக்கூட தரத்தயாராக இருந்த என்னிடம் பிரிவைக்கேட்கிறாய் வாங்கிக்கொள் உனக்கு பிடித்த பரிசை!

 

      ஆண்களால் உடனே பெண்ணிடம் பதில் சொல்ல முடியாத கேள்வி"நீ என்னை காதலிக்கிறாயா? "

 

      நிலவில் ஆம்ஸ்டிராங் இருந்ததோ 22 மணிநேரம் மட்டுமே ஆனால் நானோ உன் நினைவில் 24மணி நேரமும்!

 

      கட்டணமில்லாமல் பயணிக்கிறாய் என் கனவு பேருந்தில் நீ!

 

      கவிதை எழுத தலைப்பு யோசிக்கும்போதெல்லாம் எனோ காதல் மட்டுமே கருத்தாய் தெரிகிறது!

 

      உன் இதயம் ரத்தமும் சதையும் சேர்ந்தே ஆனது என்றே உன்னை காதலித்தேன்! பிரியும்போதே புரிந்தது அதுவும் உன் அன்பைப்போல போலி என்பது!

 

      உனக்கு பிடிக்காத செயல்களே செய்கிறேன் கோபம் வந்தாவது என்னை அழைப்பாயா திட்டுவதற்க்கு?

 

      உன்னை இழந்தேன்உணர்வை இழந்தேன் !

 

      எனக்கான வாழ்க்கைப்பாடம் கற்றுத்தந்த என் நண்பர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

 

      ஓராயிரம் தவறுகள் நான் சொய்தாலும் நூறாயிரம்முறை தண்டனையென்ற பெயரில் மன்னிப்பையே அளிக்கும் ஒரு உள்ளம் -ஆசிரியர்

 

      எனக்கு கை புடிச்சி எழுத கத்துக்கொடுத்த என்னொட அப்பாவும் ஆசிரியரேஅவருக்கும் சொல்லியாச்சி வாழ்த்து!

 

 

      உன்னால் மட்டும் எப்படிமுடிகிறது என்னுடன் பேசாமல் என் நிழலுடன் மட்டும் பேச!

 

முறை அன்னையர் தினம் கொன்டாடுகிறேன் ஆசிரியர் தினம் என்ற பெயரில்!

 

      தினம்தினம் விழிக்கும்போது அனிச்சையாய் விழித்துக்கொள்கிறது எனதாசையும் "இன்றாவது என்னிடம் பேசுவாயா? என்பதே அது!

 

      உன் குரலை கேட்காமல் விடிந்ததில்லை என் எந்த காலையும்!

 

மனிதர்கள் மிருகங்களின் முகங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள் தம் உண்மை முகங்களின்  மிருத்தனத்தை மறைக்க!

 

      இனிய இரவு ,புதிய கனவு, கற்பனைகள் பல கனவுகளும் பல ஆனாலும் அதில் எனக்கானநிறந்தரமான கவிதைக்களம் நீ மட்டுமே!

 

      நம்முடன்இறுதிவரை வரமாட்டார்கள் என்று தெரிந்தும் சிலர்மீது நம்மை நாம் நேசிப்பதைவிட அதிக நேசம் வைத்துவிட்டுபிரிவுவந்தவுடன் நொந்துகொள்கிறோம்

 

      உன் எதிர்பை எல்லா சமயங்களிலும் அடக்க முயற்ச்சிக்காதே உனக்கும் உடன்பாடு உண்டென நினைத்துக்கொள்ளும் உலகம்!

 

      பல சமயம் எல்லை மீறுவதும் ஆபத்தே! சில சமயம் எல்லை மீறாமல் இருப்பதும் ஆபத்தே!

 

      சத்தியமா எனும் வார்த்தையை மற்றவர் நம்மிடமிருந்து எதிர்பார்கிறாரெனில் அவர் நிச்சயம் நம்மை நம்பவில்லை என்றே அர்த்தம்!

 

      எப்பொழுதும் உன் பிரிவு பொருமளவு என்னை பாதிப்பதில்லை மழை இரவுகளைத் தவிர!

 

      நீ என்னை போ என சொன்னாலும் போகமாட்டேன் உன்னைவிட்டு காரணம் உன் அன்பில்லாமல் நான் ஏங்கும் ஏக்கம் உனக்கு வேண்டாம்!

 

      உன்னிடம் அடையும் எல்லா தோல்விகளுக்கும் லாபம் எனக்கே!

 

      நான் உன்னிடம் பேசும்போது உனது ்பதில் "ம்ம்"மட்டுமே இந்த தைரியத்தில் என் காதலை கேட்டேன் அதற்கு மட்டும் "ஹூஹூம் "என்கிறாய் ! என்ன கொடுமை ?

 

      அனைவருக்கும் பேச ஆசை இருந்தும் மௌனவிரதம் சரியாக கடைபிடிக்கப்படும் ஒரே இடம் - பேருந்து!

 

      தனித்தனி உலகங்களில் பலர் ஒரே இடத்தில்!  -பேருந்து!

 

என்னோட காலேஜ் கடைசி நான் அன்னைக்கு எடுத்த போட்டோ 3 months before that day first time am wear saree http://t.co/yWxDpkLf

 

      நான்தான் இது  ஒன்னாவது படிக்கும்போது டான்ஸ் ஆடினது ஸ்கூல்ல http://t.co/1cWoyg50

 

      தெரியாதவர் கூறும் நன்றியை எதிர்பார்க்கும் நாம், பிடித்தவர் கூறும் நன்றிக்கு கோபமடைகிறோம்!

 

      நீ கூறும் அனைத்து வார்த்தையையும் ரசிக்கிறேன் என் தங்கையைப்பற்றி நீ பேசும்போது தவிர!

 

      தெரிந்தும் தெரியாததைப்போல நீ நடிக்கும்போது அது புரிந்தும் புரியாததைப்போல நான் நடிக்கிறேன்நல்ல நடிகர்கள் நாம் நமக்கு!

 

      உன் குரல் கேட்காமல் என் பொழுதுகள் நகராது என்று தெரிந்தும் நீ மௌனம் காப்பது முறையோ?

 

      பிடித்தவர் மரியாதையாய் கூப்பிடுவது பிடிப்பதில்லை நமக்கு!

 

விதியில் நம்பிக்கையில்லாத நான் காரணமில்லாமல் என்னை நீ பிரிந்தபோதுதான் விதி என்று உள்ளது என புரிந்துகொன்டேன்

 

      யாரென்றே தெரியாதபொழுது என்னருகில் இருந்த நீ என் உலகமே நீதான் என மாறியதும் என்னை விட்டுச் செல்வதேனோ?

 

      பிடிக்காமல் உன்னை விட்டு விலகவில்லை உன்னுடன் இருந்தால் என்னை மறந்துவிடுவேனோ என்ற பயத்தாலே விலகிநிற்கின்றேன்

 

      இவ்வளவு சீக்க்ரம் நீ எனக்களித்த வாக்குறுதிகளை மறப்பாய் என நினைக்கவில்லை ஆமாம் நானே முட்டாள் நொடிப்பொழுதில் என்னையே மறந்த உனக்கு உறுதிகள் ?

 

      மிகவும் நன்றி நீ இல்லாமலும் என்னால் வாழ முடியும் என எனக்கு கற்றுக்கொடுத்ததற்க்கு!

 

      உணவே உன்னை நினைத்து சாப்பிட  மறந்த எனக்கு சமைக்க மட்டும் எப்படி தோன்றும்?

 

      உன்னை நான் இன்றுவரை பார்த்ததில்லை ஆனாலும் நீ ஒருவனே அழகென தோன்றுகிறது மற்ற ஆடவர்களை கடக்கும்போது!

 

      பொருத்தம் பார்த்து வருவதில்லை காதல் பொருந்தாத இரு இதயத்தை ஒரே இதயமாக பொருந்த வைப்பதே காதல்!

 

      என்னதான் பசுமாட்டுக்கு ரோஜாப்பூ சாப்ட குடுத்தாலும் அது மில்க்தான் கொடுக்கும்ரோஸ் மில்க் தராது!

 

 

      இங்கு உந்தன் நினைவுகளால் உறங்காமல் நான்,ஆனால் நீயோ இன்னும் சந்தோஷமாய் நான் இல்லாமல் அங்கு! முரண்

 

      உன் தோள்மீது சாயவேண்டும் என்பதற்காகவே தூக்கம் வரவில்லையென்றாலும் தூக்கம் வருவதுபோல் நடிக்கிரேன் உன்னுடன் இருக்கும்போது!

 

      எல்லா செயல்களுக்கும் எதிர் வினை உண்டு "ஒருவர் வாழ்த்துவார், மற்றொருவர் தூற்றுவார்!

 

      என் வலியை பகிர நண்பனை அழைத்தேன் அவனோ நான் அழைத்ததற்கான காரணம்கூட கேட்காமல் எளிதாய் ஏற்றிவிடான் இன்னொரு வலியை மனதில்!

 

      என் நண்பர்கள் அருகில் இல்லாத குறையை பெறும்பாலும் போக்குவது இசை மட்டுமே!

 

      என்னாலும் போலியாக சிரிக்க முடியும் என்று தெரிந்துகொண்டேன் அருகில் இருப்பவர் நான் அழுகிறேனோ என்று சோதனை செய்தபோது!

 

உனக்கு உண்மையில் வருத்தமே இல்லையா அம்மாநீ புகட்டிய பால் கண்ணீராய் வெளிவருவதைக் கண்டு?

 

      நான்உறங்கும்போது தலைகோதி தனது பாசத்தையும் என்னிடமிருந்து மறைத்துவிடுகிறாள் அவளது சோகங்களைப்போல-நானும் இதையே அவள் புகைப்படத்துன்-அம்மா

 

      பேச எதுவுமே இல்லாதபோதும் இன்னும் நீள்கிறது நமது உரையாடல்கள் மொளனமாக கூட!

 

      குழந்தைகளை கொஞ்சும்போது ஏனோ மனது உன் பெயரையே அதிகம் உபயோகிக்கிறது !

 

      சில சமயம் யோசிப்பேன் எதற்க்காக உன்னை விரும்புகிறேன் என்று பின்பே  புரிந்துகொண்டேன் என் விருப்பங்களின்  முழு ரூபம் நீ!

 

      பிள்ளைகள் பெறாத பாரத தாயை போற்றி புகழும் ஆண்கள் பலர் தன் பிள்ளையை  பெறும் தாயை மதிப்பதில்லை!

 

      அப்பா- டெஸ்ல ஃபெயில் ஆகிட்ட இனி என்ன அப்பானு கூப்டாதபையன்-"ரிலாக்ஸ் பா இது வெறும் ஸ்கூல் டெஸ்ட்தான்  ,டீ.என். டெஸ்ட் இல்ல!

 

      டீச்சர்-8ஆப்பிள் 5 பேருக்கு எப்படி சமமா பிரிச்சி குடுப்ப?  "நான் -ஜூஸ் போட்டுதான் #எப்பூடீ டீ?

 

      உன்னுடன் நேரடியாக பேசும்பொழுது இல்லாத சுவாரஸ்யம் பலர்முன் உன் பெயர் குறிப்பிடாமல் பேசும்போது ஏற்படுகின்றது ! இதற்க்கு பெயர் என்ன?

 

      குடிப்பவனைவிட குடிக்காதவனுக்கே அதைப்பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும் இது காதலுக்கும் பொருந்தும்!

 

      எதிர்பார்த்து காத்திருந்தபோது நீ என்னை அழைக்கவில்லை எதிர்பாராமல் இன்று அழைத்தாய் இன்னும் சந்தேகமே இதுவும் உன்னுடனான என் கற்பனையே என்று!

 

      உன் பேயர் என்னவென்று எனக்கே தெரியாத பொழுது மற்றவற்க்கு எப்படி கூறுவேன்ஆனாலும் என்னளவில் உனது பெயர் "என்னை ஆளவருபவன்"

 

      சொல்லாமலே தெரிந்துகொள்வாய் என்ற நம்பிக்கையிலே எங்கும் குறிப்பிடுவதில்லை உன் பெயரை என் கவிதைகளில்

 

      செல்ல பேர் வைத்து கூப்பிடும்போது  வெளியே கோபப்படுவதுபோல நடித்தாலும் உள்ளூர அதை ரசிக்கவே செய்கிறோம்!

 

      நேரம் நமக்காக காத்திருப்பதில்லை பின்பு நாம் ஏன் நல்ல நேரத்திற்க்காக காத்திருக்க வேண்டும்?

 

எப்பொழுதும் உன்னிடம் பேச ஆசைதான் ஆனால் எனது வெட்கமா? இல்லை தயக்கமா ? ஏதோ ஒன்று பயமறியாத என்னையும் பயப்பட வைக்கிறது நீ பதில்கூறுவாயா என்று!

 

நீ புரிந்துகொள்வாய் என நினைத்து நான் உனக்காக எழுதும் ஒவ்வெரு கவிதையும் ஏனோ உனக்குமட்டும் புரிவது இல்லை!

 

      நமதுபல சண்டைகளுக்குஒரு காரணம் மட்டுமே "நம் தொலைபேசிஅழைப்பை யார் கடைசியில் நிறுத்துவது என்பதே!

 

      உறங்க மனம் வரவில்லை காரணம் கேட்டேன் உன்னைக்காட்டியது பின்பே புரிந்தது என் இரவுகள் அனைத்தையும் திருடிக்கொன்ட கள்வன் நீ

 

      என்னை இங்கு அழ வைத்தாலும் அங்கு நீ சந்தோஷமாய் இருப்பதே போதும் எனக்கு!

 

 

      எதிர்பாராத நேரத்தில் எதிர்பாரா சமயத்தில் தோன்றுவது காதல் மட்டுமல்ல கவிதையும்!

 

      கிடைக்கும் வரை வரம், கிடைத்தபின் சாபம் # காதல்!

 

      அன்று நீயும் நானும் மழைக்கு பயந்து ஒதுங்கியடீக்கடை வாசலில் இன்று நான் என் கண்ணில் கண்ணீர் மழையும், இதயத்தில் சோக இடியும்!

 

      நீ செய்வதையெல்லாம் சரி என சொல்பவர்கள் உன் நண்பனாகிறான்தவறை சுட்டிக்காட்டுபவன் உன் எதிரியாகிறான்!

 

      கண்களை திறந்துபார் அனைவரும் தெரிவார்கள், கண்களை முடிப்பார்த்தால் உனக்கு பிடித்தவர்கள் மட்டுமே தெரிவார்!

 

      நம் காதலில் எந்த முடிவுகளுக்குமே நீ என்னிடம் சம்மதம் வாங்கவில்லை அதனாலதான் பிரியும்போதும் நீ என்னிடம் சொல்லவில்லையா ?

 

      எல்லாருடைய வாழ்கையிலும் வருத்தங்கள் உள்ளது அதை எப்படி சமாளிப்பது என்று தெரிந்தவர்களே வாழ்கின்றனர் சந்தோஷமான வாழ்கையை # its only a different

 

      உண்மையாக யாரையும் காதலிக்காதே , மீறி காதலித்தால் அவர்களுக்கு வலியின் உணர்வை காட்டாதே# advice

 

      குறைகூறும் மக்கள் இருக்கும்வரை சிறந்த படைப்புகள் வெளிவராது

 

 

      எனது தவறுகளில் நான் சரியாக இருக்கின்றேன் ஆகவே சோகம் , வருத்தம் எனக்கு இல்லை காரணம் நான் நானாக இருக்கின்றேன்

 

      எல்லா வருட கடைசியிலும் நான் யோசிகின்றேன் என்ன ஒரு முட்டாள்தனமாக இந்த ஆண்டை கழிதிருகின்றேன் என்று அடுத்த ஆண்டும் இது தொடர்கின்றது

 

      குறைகளை மட்டுமே பார்ப்பவர்களின் வாழ்க்கையும் குறையாகவே உள்ளது முழுமை பெறுவதில்லை!

 

      உனக்கு சாக்லேட் வாங்கி தருவதில் என் சுயநலனும் உள்ளது "நீ சாக்லேட் சாப்பிடுகிறாய்,நான் உன்னை சாப்பிடுகிறேன் கண்களால்!

 

      எனது நட்பை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை ஆனால் எனக்கு இருக்கும் நண்பர்கள் எனது மௌனத்தையும் புரிந்துகொள்ளும் புத்திசாலிகள் !

 

      நிறைய கடைகளில் தேடினேன் உனக்கு ஒரு சாக்லேட் வாங்க ஆனால் எங்கேயும் கிடைக்கவில்லை உன் முத்தத்தை விட சுவையான ஒன்று!

 

      மலர்களில் ஆடும் இளமை புதுமையேமனதுக்குள் போகும் நினைவு இனிமையேஇன்றைய தொடக்கம்!

 

      நண்பர்களின் நியாபகம் புத்தகத்தில் பதிந்துவைத்த மலர்போல, வாசம் இழந்தாலும் வடிவம் மாறுவதில்லை!

 

      டைரி மில்க் சாக்லேட் மீட்டிங் ஹால்ல ஒளிஞ்சி சாப்டுரதும் டேஸ்டாதான் கீது பாஉங்க வீட்ல யாராவது இருக்காங்களா என்ன மாதிரி?

 

      குறுகிய எல்லை கொண்ட இதயம் சின்ன விஷயத்திற்கெல்லாம் வருத்தப்படும் ,எல்லைகள் இல்லாத இதயத்திற்கு வருத்தப்படவும் நேரம் இல்லை

 

      காமமும் கவிதையாகிறது ஆண்கள் கூறும்போதுகவிதையும் காமமாகிறது அதை பெண் எழுதும்போது # என் கவிதை எனது உரிமை!

 

      என்னுடன் பேசாமல் இருக்கமாட்டாய் என்ற தைரியமே என்னை உன்னுடன் சண்டையிட தூண்டுகிறது!

 

      மனசு கேட்டு போகாத வரைக்கும் மனுஷனுக்கு எந்த பிரச்சனையும் இல்ல

 

      தவறுகள் சிறந்த நியாபகங்களை தருகின்றது

 

      உண்மையாய் காதலிப்பவர்களே நிறைய சண்டை போடுகின்றார்கள்

 

      உன்னுடன் பேசக்கூடாது என்றுதான் நினைக்கிறேன் ஆனால் ஏனோ என் தன்னம்பிக்கை இந்த விஷயத்தில் எனக்கு இல்லாமல் போகிறது!

 

      எல்லோருடனும் பேசி சிரித்தாலும் உள்ளுக்குள் நீ இல்லை என்ற நினைவுகளே என்னை வதைக்கிறது சிரித்தும் சிரிக்காமல் நான்

 

      எந்த புதுமண தம்பதிகளைப்பார்த்தாலும் அன்னிச்சையாக நமது திருமணகோலம் வந்துவிடுகிறதுபுன்முறுவலாய் உதட்டில்

 

      துரத்தி வந்து முத்தமிடுவதில் மேகத்திற்க்கு என்ன ஒரு சந்தோஷம் - மழை!

 

      என்னை கடந்துசெல்லும் அனைவரையும் கவனிக்றேன் அதில் ஒருவனாய் நிச்சயம் நீ இருக்ககூடாதா என்ற ஏக்கத்தில்!

 

      அலுவலக கோப்புகள் என்னிடம் சொன்னது "இப்படி நீ என்னை அணைத்தால் எனக்கும் ஆசை வந்துவிடும் மனிதனாய் பிறக்க"

 

      உனது அலைபேசி அழைப்புக்காக காத்திருந்தே விடிந்துவிடுகிறது எனது இரவுகள் உறங்காமல்!

 

நீ பிரிந்து சென்றதுகூட அவ்வளவாய் வலிக்கவில்லை ஆனால் என்னுடனே சுற்றும் உந்தன் வாசம் என்னை சுட்டெறிக்கிறது!

 

      என்னை கடித்த கொசுவை நான் பிடித்துவிட்டேன் அடிக்கவில்லை காரணம் "பயபுள்ள அது உடம்புலயும் நம்ம இரத்தம்தான! " நோ நோ அழப்டாது!

 

எல்லா தோல்விகளும் நமக்கு ஒரு பாடம்  - Learn well. எல்லா வெற்றியும் கண்ணாடி போன்றது - Care well!

 

நட்பும் இதயமும் ஒன்றேநமக்காகவே துடிக்கும் நமக்குள்ளே நாம்தான் அதை உணர வேண்டும்!

 

      காலை கண் விழித்துவிட்டாலும் கொஞ்சநேரம் போர்வை போர்த்தி கண்மூடும் இதமான கதகதப்பு நீ!

 

கனவுகளுக்கு வண்ணங்களை கொடுக்கும் நீ ஏனோ என் நிஜத்தை வண்ணங்களற்ற ஓவியமாக்கிவிடுகிறாய் பிரிவால்!

 

      எத்தனைமுறை புரண்டு படுத்தாலும் உன் நினைவுகள் என்னை புரட்டிபோடுகிறது உறங்க விடுவதில்லை என் செல்ல காதலா!

 

எனது மழலையைபருவத்தை எனக்கு திருப்பிக்கொடுத்துவிட்டு என்னுள் உலாவருகிறது மழை -லஞ்சம் வாங்கிய அரசியல்வாதியாய் நான்!

 

      சாலை நெரிசலில் முன்னேற மோதும் வாகனங்களைப்போல என் மனதில் உன் நியாபகங்களும், என் நிஜங்களும் உன்னை மறக்க என்னை மறந்த காதலா

 

      அழகான குழந்தைகளை பார்க்கும்போதெல்லாம் உன்மீதே கோபம் வருகிறது என்னை தனியாய் தவிக்கவிட்டு நீ தூரத்தில் இருப்பதால்!

 

      காற்றில் கூந்தல் தவழும்போதெல்லாம்  நினைவுக்குவருவது நீ என் கூந்தல் சரி செய்து காதோறம் கொடுத்த முத்தம் !

 

      கோபத்துடன் நீ முடிக்கும் ஒவ்வொறுதொலைபேசி அழைப்பும் சுனாமியைவிட பெரிய சோக அலைகளை எழுப்பிவிடுகிறது என் மனதில்!

 

ஒரு சிப்பிக்குள் இரு முத்துக்கள்- போர்வைக்குள் நாம்!

 

      தூரல் மழை என் துணைவனின் ஸ்பரிசத்தை நினைவுபடுத்துகிறது

 

 

      தூய்மைக்குஅழகாய் வெள்ளை வேட்டி, ஆண்மைக்கு அழகாய் கம்பீரம், வீரத்திற்க்குஇலக்கணமாய் மீசை! அழகான கேரள மகன்களுக்கு ஓணம் வாழ்த்துக்கள்!

 

      காதலா எனது கனவுகளை திருப்பிக்கொடு போராட முடியவில்லை இரவோடு தினமும்!

 

      தோற்றாலும் நம்பிக்கையாய் இரு ஆனால் யாரையும் நம்பி தோற்று விடாதே , மறுபடியும் எழுவது கடிணம்!

 

      எப்போது நாம் இருவரும் பேச ஆரம்பித்தாலும் அந்த நொடி மட்டும் என்ன பேச வேண்டுமென்பது மறந்து போவதேன்?

 

      முத்தம் இரு நாடுகளை இணைக்க நடத்தப்படும் யுத்தம்

 

      உலகில் உள்ள அனைவரையும் அன்போடு நேசயுங்கள்(காதலியுங்கள்) என்னை போல காதலுடன்

      பெற்ற தாயை உண்மையாக நேசிப்பவனால் நிச்சயமாக ஒரு பெண்ணை ஏமாற்ற முடியாது

 

      ஆணின் வெற்றிக்கு உரிமை கோரும் பெண்கள் யாரும் ஆணின் கண்ணீருக்கு உரிமை கோருவது இல்லை

 

      உன் இதயம் "சுட்டவளை" .. இமைக்கும் முன் மறந்துவிடு..! ஆனால்.. உன் இதயம் "தொட்டவளை" இறக்கும் வரை மறந்துவிடாதே

 

      எத்தனை கல்லறைகள் தாஜ்மஹாலை விட புனிதமான காதலை சுமக்கிறதோ !என்னை போல

      உன் அன்பு என் மீது படர்ந்தது இதயத்தில் நுழைந்தது மாறா இடமாக என்றும் என்னுடனே நீ இருக்க..... தினமும் தேடும் உருவமாக என் கண் முன்னே.. நீ

 

      அன்பே கண்களால் காதல் சொல்லி கவிதையாய் கொஞ்சி பேசி என் நிழலாய் நீயே மாறி மிரட்டுகிறாய் உன் அழகால் இப்போது என் நிழலும் நீயாய்

 

பொய் பேசும் உன் கண்கள் பின் தொடரும் நான் இது எங்கே போய் முடியும்?உன் மௌனம் என்னைக் கொல்கிறது கண்களால் பேசாமல் வார்த்தைகளாக சொல் ....

 

      நீ ஈர்க்கிற ஈர்ப்பில் கவிழ்ந்து விழுகிறேன் உன்னிடம் ஒவ்வொரு தரமும் நீ ஒரு முரண்பட்ட கவிதை காதலனே

 

      நீ போகும் பேருந்தை குறி வைத்தே அனைத்து சாலை விதி சிகப்பு விளக்குகளும் எரிகின்றது.. உன் அழகை,,, பொறுமையாக ரசிப்பதற்கு

 

      யோசிக்காம சொல்ல முடியாது யோசிச்சா சொல்லவே முடியாது... ♥ காதல்

 

பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால் , முதலில் உன் கண்களை மூடிக்கொள் . உன் உதடுகளை விட , உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன

 

ஆர்வத்தினால் அல்ல நீ படிப்பாய் என்ற ஆதங்கத்தினால் தான் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன் கவிதை......

 

      வெட்கமென்ன பெண்களின் தேசிய மொழியா ? அடிக்கடி பேசுகிறார்கள் .

 

அவள் சொல்லும் முன்னே அவள் விருப்பத்தை அறிந்து அனைத்தையும் செய்த எனக்கு அவள் சொல்லியும் செய்ய முடியாமல் போன ஒன்று அவளை மறக்க சொன்னது...

 

      Young boy praying to god"i want an intelligent girl to love me" God replied "Intelligent girl never love boys"வட போச்சே.....

 

      காலங்காலமாய் கூடி உண்ணும் காகங்களுக்குள் இன்று மோதல்... உன் விரல் பிசைந்த சாதம் யாருக்கு என்று... ....

 

      உறவாக நீ இருந்தாய் உள்ளம்பூரித்தது உதறிவிட்டாய் என்று தெரிந்ததும்  உள்ளம்நோகிறது.

 

      தெரியாத போது தெரிந்து கொள்ள ஆசைப்பட்டடாய் தெரிந்த போது

தெருவில் விட்டாய்.

 

      யாரை இழந்தால் திரும்ப பெற முடியாதோ , யார் இல்லாமல் நாம் பிறக்க முடியாதோ அவளே அம்மா !!!

 

      நொடிக்கொருமுறை call or sms இதுவல்ல உண்மைக் காதல், உனது காதலை நீ நினைக்கும் அந்த நொடிஉன் உதட்டில் தோன்றும் புன்னகையே  "காதல்"

 

மலரேநீயும் நானும் ஒன்றுதான், நீ வந்தது வண்டுக்காக, நான் என் ஃபிரண்டுக்காக! # நோ நோ அழக்கூடாது நண்பா!

 

நாம் போராடும்போது வீண் முயற்ச்சி என்பவர்கள், வெற்றிபெற்றதும் உனது விடா முயற்ச்சி  என்பார்கள்! # Fact

 

      இருட்டில் வரையப்பட்ட ஓவியமே பெண்களின் மனதுகடைசிவரை யாருமே பார்பதில்லை!

 

 

காலை உனது மதி முகம் பார்த்து மதி மயங்கி நிற்க்கிறேன்!

 

சிலரது பிரிவை மறக்க பலரது வரவு தேவை வாழ்வில் !!

 

      கோபம் வந்தால் அழுதுவிடு தனிமையில், இதுவே சிறந்தது கோபமாக பேசி  மற்றவர் மனதை காயப்படுத்துவதை  விட

 

      எதிர்பாராமல் எனக்குள் நிகழப்போகும் மாற்றங்களுக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன் உனது வருகையை என் வாழ்வில்!

 

      சில சமயம் நமது கண்களை கண்ணீர் சூழ்ந்திருக்கும் ஆனால் நாம் அந்த கண்ணீரை பயன்படுத்தி நம் பார்வையை சுத்தப்படுத்திக்கொள்வோம்,

 

      காதல் வந்தால் வானத்தில் பறப்பார்களாம் இதற்க்காகவாது காதலிக்க வேண்டும், உனக்கு ஆசையில்லையா என் அன்பு காதலே?

 

 

      வாசனையில்லாத பூவிலும் வாசம் உணர்கிறேன் காதல் பூ மனதில் பூத்ததும்  !

 

      பெண்ணை வெறுப்பவனே உண்மையில் பெண்மையை அதிகம் நேசிக்கிறான்!

 

      ஞாயிறு அன்று பகலிலேயே தலையனையை கட்டிப்பிடித்து தூக்கம் வரலனாலும் கண்மூடி உன்னை நினைக்கும் போது நானும் அழகாய் தெரிகிறேன் என் குறும்புடன்

 

      யாருக்கு வேணும்இப்ப நான்வாழ்நாள்லயே முதல் முறையா ஜிகர்தண்டா சாப்டுறேன் http://t.co/sTmt3xpH

 

காதலும் கற்பனையும்ஒன்றே தோன்றும்போதே ரசிக்கவேண்டும் ! மீண்டும் நல்ல காதலும், சிறந்த கற்பனையும் கிடைப்பது அரிது!

 

      என்றாவது ஒரு ஞாயிறு நீ வந்து அழைத்துசொல்வாய் என்றநம்பிக்கையில் கழிகிறது எனது ஒவ்வொறு ஞாயிறும் தனிமையில்!

 

      உன்னுடன் எனக்கான உரையாடல் பல, அதற்கு இனையான இலக்கனங்களோ சில, கம்பனும் எதிரியானான் உன் கன்னித்தமிழை நான் படிக்கத்தொடங்கியதும்

 

      கேட்கும்போது கிடைக்காத காதல் என்னால் ஏற்றுகொள்ள முடியாதபொழுது கிடைகிறது # இதுதான் வாழ்க்கையா ??

 

      உனக்கு கண்ணீர் பிடிக்கும் என்பதற்காக என்னை ஏன் அழவைத்து பார்க்கின்றாய்

 

      உன்னுடன் பேசும்போது அடுத்தடுத்து என்ன சொல்வது என்று தெரியவில்லை ஆனாலும் எதையாவது பேசிகொண்டே இருக்கவேண்டும் என்று  தோன்றுகிறது

 

      உறவுகள் என்பது பயிற்சி இல்லை பின்பு எதற்கு பொய் வேஷம் ?

 

அமைதி பெண்களின் மௌனமாக அழுகை பல சமயங்களில்பிடித்தவருடன் இருக்கும்போது

 

      கடந்தகாலம் என்பது சிறந்த இடம் நான் சுற்றுலா போக ஆனால் அது மிகவும் மோசமான இடம் அங்கேயே தங்க

 

      எப்பொழுது என்னைப்பற்றி புறம் பேச ஆரம்பிகின்றனரோ அப்பொழுதே நான் பிரபலமாகின்றேன்

 

      எப்பொழுதும் உன்னுடைய உண்மையான நடத்தைகளுடன் இரு ஏனெனில் போலிகள் எப்பொழுதும் உண்மையாகிவிடாது

 

      உனது முதல் காதலியாக இருக்க ஆசை இல்லை எனக்கு ஆனால் உனது கடைசி காதலியாக நானே இருக்கவேண்டும்

 

      எனது கனவுகளில் நீ எனது வாழ்க்கையாக இருக்கின்றாய் ஆனால் எனது வாழ்கையில் நீ கனவாக இருக்கின்றாய்

 

      எல்லோரும் எதிர்பார்க்கின்றர்கள் யாரையோ எப்பொழுதும் ஆனால் அவர்களை தவிர மற்றவர் அனைவரையும் சந்தித்து விடுகின்றனர்

 

நீ என்னை காயபடுத்தி இருந்தால்கூட நான் வேதனை கொண்டிருக்கமாட்டேன் ஆனால் நீயோ எனது உணர்சிகளை உதாசீனபடுத்திவிட்டாய் வார்த்தைகள் இல்லை என்னிடம்

 

 

      ஆச்சர்யபடுகிறேன் உனது கையெழுத்தை பார்த்தவுடன் எனக்குள் மிளிரும் குறுநகை உனக்குள்ளும் பிறக்கிறது நீ எனது பெயரை படிக்கும்போது

 

தவறான மனிதர்கள் எப்பொழுதும் சரியனவற்றையே சொல்லி தருகிறார்கள் நமது வாழ்வில்

 

      எப்பொழுதெல்லாம் உன்னை பார்கின்றேனோ அந்த ஒரு நொடி எனது சுவாசம் நின்று மறுபடியும் தொடர்வது ஏனோ இன்றுவரை மாறவில்லை

 

      எப்பொழுதெல்லாம் நீ அருகில் இல்லை என்று நினைகின்றேனோ உடனே கண்மூடி உன்னை பார்த்துவிடுவேன் என் கண்களுக்குள்

 

      உனது எதிரிக்காக எப்பொழுதும் பயபடாதே , போலி நண்பனின் புன்னகைக்கு அடிபணியாதே

 

      தினமும் பல விஷயங்களை கற்றுக்கொடுப்பதாலே பேருந்தும் குருவானது எனக்கு!

 

      உனது அரவணைப்பில் இருந்தவரை உன்னையும் ஒர் ஆசிரியையாகவே எண்ணியிருந்தேன் பிரிந்ததும் உணர்கிறேன் அம்மா என்ற மந்திரத்தின் மகிமையை!

 

 

      நீ துணியில் இருக்கும் அழுக்கை நீக்குகிறாய் நானோ உனது அழகை ரசிக்கிறேன் மனம் முழுதும் அழுக்குடன்!

 

      பூக்களும் பெண்களும் ஒன்றே இருவருமே  இதழ் திறந்து கூறுவதில்லை தன் காதலை ஆடவர்க்கு!

 

      இப்பொழுதெல்லாம் உதவிகள் எதிர்பாகப்படுவதில்லைபிரச்சனை செய்யாமல் இருந்தால் போதுமானது!

 

      உன் மௌன விரதம் என் ஆயுள் வரையோவிரதம் நீ இருக்கிறாய் விரக்தியில் நான் இருக்கிறேன்  !

 

      நீ மிகவும் அதிஷ்டசாலியாம் நான் கிடைத்ததால் என்று நண்பர்கள் கூறினர் ஆனால் உண்மையில் நானே அதிஷ்டசாலி என் கனவுகளின்முழூ ரூபமாய் நீ இருப்பதால்

 

      என் அம்மாவின் புலம்பல் "ஃபோன்னை கூடவேதான் வைச்சிட்டு இருப்பியா துக்கி வை தூர"அவங்களுக்கு தெரியுமா எனக்கு இருக்கும் ஒரே காதலன் அதுதான்னு

 

 

நீண்ட நாள் கனவு புத்தகமாய் கைகளில்நிறைவேறும் என்ற நம்பிக்கை மனம் முழுதும்! http://t.co/1nr2Cj2z

 

      பிடித்த பாடலுக்கு பிடித்த மாதிரி நடனமாடக்கூட அனுமதியில்லை காரணம் ஒன்றே "வளர்ந்த பெண் " இப்டி தெரிஞ்சிருந்தா நான் வளந்திருக்க மாட்டேன்

 

      காதலன் கவிஞனாய் இருந்து காதலி கவிதை பிடிக்காதவளாயின்  காதலன்  பாவம்

 

      தேனீர் அருந்தும் ஒவ்வொறுமுறையும் மறக்காமல் வந்து செல்கின்றது உனக்கே தெரியாமல் நீ குடித்து வைத்த கோப்பையில் தேனீரை ருசி பார்த்தது

 

நான் நீ அழைப்பாயென இங்கு காத்திருக்க அங்கு நீயோ என் அழைப்பிற்காக காத்திருக்கிறாய் " ஆகமொத்தம் நமது எண்ணங்களில்கூட பிரிவில்லை

 

      அருகில் நீயிருந்தும் கைகளால் அனைக்கதான்  முடியவில்லை,கண்கள் போதுமடி நான் உன்னை அனைக்க போதை கொடுக்கும் பேதைப் பெண்ணே    !!

 

பசி ஒன்றுதான் வயிறுகள் பல #எகி

 

      வீட்டின் கூரை ஓட்டை வழியே எட்டிப்பார்க்கும் வெயிலுடன் விளையாடிய நாட்கள் மழலை பருவத்திற்கே உரிய சந்தோஷம்

 

உன்னையும் என்னையும் இனைத்து நண்பர்கள் குறும்பு செய்யும்போது வெட்கத்தில் முகம் சிவந்து விலகினாலும் தனிமையில் அதை ரசிக்க தவறியதில்லை

 

      காலை நேரம் குவிந்துகிடக்கும் வேலைகளுக்கு நடுவே நீ எதிர்பாராமல் அளித்த முத்தம் இயந்திர மனிதனைவிட வேகமாக்கியது என்னை என் அன்பு கணவா

 

      நீ என் அருகில் இருந்திருந்தால்  கவலைகளையும் கண்ணீரையும் வார்தையில் மட்டுமே அறிந்திருப்பேன் ஆனால் நீ இல்லை ஆகவே உணர்கிறேன் இப்பேது கண்களில்

 

      யாருக்கும் தெரியாமல் முத்தம் கொடுத்துவிட்டேநிம்மதியாக உறங்குகின்றேன்,தலையனைக்கு கொடுத்த முத்தம் உனக்கு கிடைத்திருக்கும் என்ற நம்பிக்கையில்

 

      பிடித்தவருக்கு குறுந்தகவல் அனுப்புவிட்டு  பதிலுக்காக தூக்கம் வந்தாலும் தூங்காமல் காத்திருப்பதிலேயே உள்ளது உண்மைகாதல்

 

      பெண்களை ஆண்கள் வர்ணிக்கும்போது ஆண்களை பெண்கள் வர்ணித்தால் குற்றமா?  #சம உரிமை கவிதையில்கூட இல்லையா?

 

      ஆண்கள் செய்த தவறை மற்றவர்களுக்கு தெரியகூடாது என்று  நினைத்து மாட்டிக்கொண்டால் அவர்களின் முகபாவம் #so cute

 

      சிலசண்டைகளை சீக்கிரம் முடித்துவைக்க எளிதான வழி எதிர் பாராத முத்தம்

 

      கள்ளத்தனம் செய்துவிட்டு காதலியிடம் திட்டுவாங்கும்போது காதலனின் பரிதாப முழி அழகோ அழகு:-) :-)

 

      முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று லேசாக எனை மாற்றுதே !!அங்கங்கு அனலேற்றுதே:-)

 

      குழந்தை தூக்கத்தில் சிரித்தால் கடவுளைக்கண்டதாக அர்த்தமாம், நான் தூக்கத்தில் சிரித்தால் நிச்சயம் கனவில் நீ செய்த  குறும்பே  காரணம் காதலா

 

குளிர்காற்றின் காரணமாக இழுத்து பேர்த்தும் போர்வையில் இதமான வாடைக்காற்றாய் நீ

 

      என்னால் கண்டுபிடிக்க முடிவதில்லை இரவில் என் தலையனைக்குள் உயிராக நீ எப்படி வருகின்றாய் என்று! !!!!!???

 

 

 

      உனக்கு பிடிக்காத ஒரு தவறை செய்துவிட்டு உனதுபதிலுக்காக காத்திருப்பது காதலில் கொடுமை கொடுமை --

 

      அன்னிச்சையாய் தோன்றிவிடுகிறது ஒவ்வொருமுறை சாலையை கடக்கும்போதும் இருக்க பற்றிக்கொள்ள உனது கரம் இல்லை என்று! !

 

 

      உனக்கு புரியவில்லையா ? நான் ஆசைபடுவது உனது தோழிகளில் ஒருத்தியாக இருக்க அல்ல உனக்கானவளாக இருக்க

 

      வெட்கம் கலந்த குறுநகை தவறாமல் வருகிறது எப்பொழுது என் கைபேசியில் உனது அழைப்பை பார்த்தாலும்

 

 

உன்னை வெறுப்பவர்கள் முன் சந்தோஷமாக இரு அது போதும் அவர்களை வெல்வதற்கு

 

      நீ எனது வாழ்வில் மட்டும் இல்லை எனக்குள் எங்கோ ஒளிந்து இருகின்றாய் அதை நான் கண்டுபிடித்துவிட்டால் நமக்குள் காதல் இருக்காது

 

      சிறந்தவற்றை யார் கூறுகிறார்கள் என்று அறிவதை விட அதனால் நமக்கு கிடைக்கும் பயன் என்ன என்பதே முக்கியம்

 

      எதற்காக நான் பயபடுகின்றேன் உன்னை இழக்க நீ என்னுடையவனாக இல்லாத பொழுதும் ??

 

      என்னை அழவைப்பதில் உனக்கு அவளவு சந்தோஷமா ? தினமும் அழவைகின்றாய் காரணமே இல்லாமல் #oh god

 

      பலருடன் இருக்கும்போதும் வெறுமையே மிஞ்சுகிறது நமது நண்பர்கள் அருகில் இல்லாததால்

 

      நல்ல நண்பன் என்பவன் எப்பொழுதும் உன்னை நேசிப்பவன் நீயே உன்னை வெறுத்த பொழுதும்

 

      நீ அழகானவர் யார் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதல் வார்த்தையை படிக்கவும் #fb

 

      என்கரம் நீ பிடித்த அந்த  நொடி முழுதாய் உணர்ந்தேன் என் பெண்மையை:-)

 

      காலை எழுந்ததும் உன்னுடனான கனவுகளின் மிச்சம் என்னை தொடர்ந்து வருகிறது அன்றைய தினம் முழுதும்:-)

 

      வந்தாரை வாழ வைக்கும் ஊரு, சுனாமி வந்தாலும் அசையாது பாரு:-)  இனிய பிறந்த நாள் சென்னை:-)

 

      தெரிந்தே  செய்யப்படும் தவறுகளுக்கு மன்னிப்பும், வெகுமதியும் கிடைப்பது காதலில் மட்டும்:-)

 

      முதல்ல பசங்க பேசினா வழியுறது, பொண்ணுங்க பேசினா குழையுறது #அப்ப யாருதான் பேசுரது? ?

 

      முதன்முதலாய் நானே விரும்பி  அழகி நாடகம் பார்த்தேன் நண்பன் கிரேசிகோபால் நடித்ததால் :-) நட்புக்கு மரியாதை:-)

 

      ஆண்கள் அதிகம் அக்கறை கொள்ளாமல் கூறிவிடும் சில  வார்த்தைகளே அவர்களின் அன்பனவர்களிடமிருந்து பிரிவை ஏற்படுத்திவிடுகிறது

 

      உனது சிரிப்பும் எரிச்சலை தரலாம், யாரெல்லாம் உன்னை அடிமைபடுத்த நினைகின்றார்களோ அவர்களுக்கு

 

      பையன் பொண்ணுகூட பேசினா கடலை, அதுவே பொண்ணு பையனோட பேசினா எதார்த்தமா ? என்ன பதார்த்தம் டா இது ?? #so sad boys

 

      எந்த இதயத்தால் நீ காயபட்டாலும் உனக்கு உண்மையான அன்புடன் திட்டியாவது ஆறுதல் சொல்லும்  ஒரே இதயம் உன் நண்பன் மட்டுமே

 

 

 

      நம் சிலநொடி தயக்கத்தால் சிறந்தவைகளை இழக்க நேரிடும்

 

 

      நான் குருடர்களை மதிக்கின்றேன் காரணம் அவர்கள் மற்றவர்களின் மனதை மட்டும் பார்க்க தெரிந்தவர்கள் போலி அழகை அல்ல

 

      கல்லூரியிலும் பள்ளியிலும் இயல்பாய் இருந்ததைப்போல அலுவளகத்தில் முடிவதில்லை சாப்பிடும்போது:-)

 

      காலை பேருந்து பயணத்தில் காசு கொடுத்து நடத்துனரிடம்  டிக்கெட் வாங்க சொன்னா எந்த பொண்ணும் வாங்க மாட்டேங்குது - பெண்ணிற்கு பெண்ணே எதிரி

 

இல்லாமல் வாழ்வதே இன்பம் இருந்தும் இல்லாமல் இருப்பதற்கு பதில் - காதல்

 

      பொய் நல்லது "அலைபேசியில் அழைக்கும் அம்மாவிடம் "சாப்பிட்டேன்" என்று கூறும்போது

 

      நான் நானாகவே இல்லாத போழுது நீ ிநீயாகவே இருப்பது   எனக்கு சந்தோஷமில்லை

 

      காத்திருக்கிறேன் இன்றும் உன் அழைப்பொலிக்காக என் கதவருகில் கனவுகளுடன்:-) நீ வருவாயா?

 

      பேருந்து படியில் தொங்குபவனெல்லாம் கெட்டவனும் இல்லை உள்ளே நிற்ப்பவர்கலெல்லாம் நல்லவனும் அல்ல:-)

 

 

      காதல் என்பது சரியாக இருப்பது இல்லை உண்மையாக இருப்பது

 

      எப்பொழுதும் நேரத்தை மற்றவருக்கு எடுத்துரைப்பதற்காக வீணாக்காதே பலர் தலை ஆட்டலாம் ஆனால் சிலர் மட்டுமே கவனிப்பார்கள்

 

      சிலசமயம் நான் அதிகமாக கற்பனை செய்துவிட்டு அதற்காக என்னையே திட்டிகொள்கிறேன்

 

      சிலசமயம் கஷ்டமாகவே இருக்கும் உண்மையான உள்ளத்தில் இடம்பெற

 

      தனியாய் இருப்பதே மேல் , நம்மை தனிமை படுதுபவர்களுடன்   இருப்பதை விட

 

      பலரது அன்பு பொய் என்பது அவர்கள் நம்மை எளிதாக மறந்துவிட்ட போழுதுதான் தெரிகிறது

 

      வெளிப்படையாய் பேசுபவர்களை யாருக்குமே பிடிப்பதில்லை

 

      மனம் திறந்து பேசுங்கள் ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதீர்கள்  சிலர் புரிந்துகொள்வார்கள் சிலர் பிரிந்துசெல்வார்கள்

 

பிரிந்தவுடன் தானே தெரிகிறது உன்னுடன் சேர்ந்து சண்டைபோடும் சுகம், சொல்லவும் முடியாத ஏக்கங்கள் ஆரம்பிக்கின்றது ...சீக்கிரம் வந்துவிடு

 

      நீ என் காதலை மறுத்தபோதுதான் புரிந்தது நான் மறுத்தபோது மற்றவரின் வலி

 

      பால் போன்ற என் மனதில் ஏக்கம் ஏன்பகல் போழுதிலே உந்தன் தாக்கம் ஏன்?

 

      எனக்கான இரவுகள் அனைத்தையும் நீ திருடிக்கொன்டு ஏன் என்னை தவிக்க விடுகிறாய்?

 

      உன்னைக் கண் தேடுதே, உன் முகம் காணவே உள்ளம் நாடுதே:-) :-)

 

      ஆண்கள் நல்லவர்களே பெண்கள் நச்சரிக்காதவரை:-)

 

      விடுமுறை தினமும் விரக்தியுடன் போவது தனிமையில் இருக்கும்போதுதான்

 

      அனுபவசாலியும் ஒருநாள் புதுமுகமாய் இருந்தவனே

 

      புரிந்துகொள்ள முடியாதவர்களை  புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது பல சமயம் ஏமாற்றங்களே பரிசாய் கிடைக்கும்

 

      நம்கிட்ட சிரிச்சி பேசுறவங்க எல்லாரும் நல்லவங்களும் இல்ல , கொவபடுற எல்லாரும் கெட்டவங்களும் இல்ல

 

      எந்த காதல் பாடல் கேட்டாலும் மனம் உன்னையும் என்னையும் சேர்த்து பார்க்கின்றது அந்த பாடலுடன்

 

      தினமும் காலை தேநீர் தயாரிக்கும்போதும் எதிர் பார்க்கின்றேன் உனது திடீர் அணைப்பையும் முத்தத்தையும் ஆனால் இன்னும் எனது ஆசை  நிறைவேறவில்லை

 

      என் கண்ணாடியும் நண்பனாகிவிட்டது எனக்கு எப்பொழுது பார்த்தாலும் உன் முகத்தையே காட்டிக்கொண்டிருப்ப்பதால் ......

 

      தோன்றுவதெல்லாம் எழுத ஆசைதான் என்ன செய்வது உனக்கும் எனக்குமான நெருக்கம் அனைத்தும் என் எழுத்துகளின் வழியாக பிரதிபலிக்கின்றதே

 

      மதிமயங்கும் என் மழலை  கனவா ......கொஞ்சம் உறக்கம் களைந்திடு நீ ஒரு குழந்தை போதாது எனக்கு

 

      நமக்கு கழுதை வயது ஆகும்போதும் நம்மை குழந்தையை பாவித்து கொஞ்சுவது தாய்தான் ..

 

      உறங்குவதுபோல் நடிப்பதே உனக்கு வாடிக்கை ஆகிவிட்டது என் முத்தத்திற்காக

 

      அனைவரும் உறங்கும் இரவு நேரம் உன் கற்பனைகளுடன் நான்  கண் மூடினால் கனவுகள் வருவதேயில்லை அதற்குபதில் நம் எதிர்கலமே கண்முன்  விரிகிறது

 

      நானும் சராசரி பெண் தான், கடவுள் இல்லை என் வலியை மறந்து உன்னுடன் சிரிக்க

 

      சிலரது பிரிவு பலரது அக்கறையை நமக்கு புரியவைக்கிறது

 

      நமது நாக்கை விட பெரிய எதிரி நமக்கு வேறு யாரும் இல்லை ..........

 

      நீ மறுபடியும் என் வாழ்வில் வரவேண்டிய அவசியம் இல்லை நீ இல்லாமல் நான் சந்தோஷமாய் இருக்க பழகி கொண்டேன்

 

      பொய்யான  கரணம் கூறி பிரிந்து சென்றுவிட்டாய் பொய் என்று தெரிந்தும் நிரூபிக்க முடியாமல் நான் காதல் கைதியாக ........

 

 

எதிர்பார்க்கும் அனைத்தும் வாழ்வில் சரியான சமயத்தில் கிடைத்துவிட்டால் நாம் சோம்பேறிகளாகவே இருந்துவிடுவோம்

 

      வாழ்வில் துன்பம் என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இன்பத்தின் மதிப்பு தெரியாமலே போய் இருக்கும் நமக்கு

 

      அன்றும் மழை இன்றும் மழை ஆனால் ஒன்று வித்தியாசம் அன்று நாம் கனவுகளுடன்  இன்று நான் கண்ணீருடன் ....

 

      சிலநேரத்தில் எதிர்பாராமல் நமது வாழ்க்கைக்குள் நுழையும் சில மனிதர்கள் போகும்போது மொத்தமாக எடுத்து செல்கிறார்கள் நமது சந்தோஷத்தை

 

பால் போலத்தான் காதலும் இன்று, பழக பழக காதலியும் புளித்து விடுகிறாள் ...

 

      நம்பினார் கெடுவதில்லை இது பழ மொழி, நம்பினால் நிச்சயம் கெடுவாய் இது இன்றைய பொய் காதலின் புது மொழி

 

      காதலில் மட்டுமே கூறிய அனைத்தும் பொய் என்று தெரிந்தும் நம்ப மறுக்கின்றோம் சில உண்மைகளை

 

      இறந்துவிடு என்று நீ கூறி இருந்தால் சுகமாய் இறந்திருப்பேன் ஆனால் நீ என்னை மறந்துவிடு என்று கூறியபின் நான் எப்படி இருப்பேன் உணர்வுடன் ??

 

      அழுகையே பிடிக்காத என்னையும் அழவைத்துவிட்டது காதல்

 

      சிலநிமிடம்கூட உனது கைபேசியை அணைத்துவிடாதே எனக்கு இங்கு உயிரே அணைந்துவிடும்

 

      காதல் பூஜைக்கு முத்தமே அர்ச்சனை பூ ...........

 

      பிரிவின் வலியை உணர்ந்ததில்லை உன்னை சந்திக்கும்வரை

 

      புன்னகை புரிந்தால் மட்டும் போதும் பூக்கள் வேண்டாம் என்னை பார்க்க வரும்போது .. எனக்கு உன் புன்னகையே என்றும் வாடாத பூ .......

 

      எவ்வளவு நாள்தான் உனது புகைப்படத்தை மட்டும் கொஞ்சுவது  ? சீக்கிரம் வா உனக்கான முத்தங்கள் வீணாகிறது

 

      என் மடியில் தலை வைத்து நீ உறங்கும் பொது எனது முதல் குழந்தை நீயே என்றுணர்ந்தேன்

 

      எவ்வளவு கோவமாக நான் இருந்தலும் எப்படியோ சமாதனம் செய்துவிடுகின்றாய் தெரிந்தும் கொள்கிறேன் பொய்கோபம் உன்னிடம்

 

      உறங்கிகொண்டிருக்கும் உன் காதுமடல் கடித்து உனது தூக்கம் கலைபதற்கு இணையான சந்தோஷம் ஏதும் உண்டோ ??உண்மை காதலில்

     

எப்பொழுதும் எனது கை பேசியை எடுத்து பார்க்கின்றேன் நமது சண்டைக்கு பிறகு ஒரு முறையாவது மனிப்பு கேளேன் ..உன்னுடன் பேசாமல் இருக்க முடிவதில்லை .

 

      வானமே எல்லை என்றபோதும் ஏனோ எனது எல்லை உன் வீடு வரை வந்தே முடிகின்றது .......

      காதலனின் மன்னிக்க முடியாத தவறுகளையும் மன்னிக்க வைப்பது அவனது எதிர்பாராத முத்தம் .

 

      கோபப்படுவேன் என்று தெரிந்தும் என்னை கோவப்படுத்தி பார்ப்பதில் உனக்கு அவ்வளவு சந்தோசம் ஏனோ ?

 

      சிலநேரம் நீ செய்யும் செயல்கள் என்னை பலநேரம் தனிமையில் அழ வைக்கின்றது .........

 

      நீ பார்க்காமல் போகும் ஒவ்வொரு முறையும் இறந்து போகிறேன் ............

 

      குளிப்பதும் சுகமானது நீ ேசாப்பாக மாறியதால்:-) :-) :-) :-) :-)

 

      அனைவரிடமும் தயங்காமல் ேபசு ம்  நா உன்னிடம் மட்டும் தடுமாறுவது ஏேன:-)

 

      விழுவது உன் மடியாக இருக்கும்போது எப்படி எழுந்துகொள்ள மனம் வரும் எனக்கு ??

 

      விழுவது உன் மடியாக இருக்கும்போது எனக்கு எப்படி எழுந்துகொள்ள மனம் வரும் எனக்கு ??

 

      கை பிடித்து நடக்க ஆசை இல்லை சாய்ந்துகொள்ள உன் தோல் இருக்கும்போது .........

 

நான் உனக்கு தலை துவட்ட வேண்டும் என்பதற்காகவே  நீ  மழையில் நனைகிறாய் தினமும்-அது எனக்கும் தெரியும் .....

 

      கிடைத்தாய் நீ எனக்கு, அழும் குழந்தைக்கு ஆரஞ்சு மிட்டாய் போல ..

 

      தினமும் நான் உன்னை நினைத்து அணைக்கும் போதெல்லாம் எனது தலையணை என்னிடம் கூறியது உனது காதலனாக பிறக்க வேண்டும் என்று ..

 

      சகாத வரம் வேண்டாம் ..... உன் பார்வை அம்புகள் என்னை தாக்கும் பொது ......

 

      உன்மீது தவழும் ஒவொரு மழை துளியையும் சிறையில் அடைக்க வேண்டும் என்னை கேட்காமல் உன்னை அணைகின்றது

 

      எனக்கு தூக்கம் வேண்டாம் ........ ஆனால் உனது கனவுகள் வேண்டும் ......அணைத்துக்கொண்டு குளிர்காய .........

 

      புரிந்துகொள்பவர்கள் விலகுவதில்லை புரிந்துகொள்ளாதவர் நீடிப்பதில்லை

 

      காதல் செய்ய ஆரம்பித்துவிட்டால் தயவு செய்து காதலிற்கு சரியான இலக்கணம் காமம் மட்டுமில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்

 

      பெண்களின் மிக பெரிய பொய் "நான் நலமாக இருக்கிறேன்" என்பதே .......

 

      தூரல் சிந்தும் மாலை நேரம் உன்னுடன் கைகோர்த்து நடக்க அசை கடற்கரை மணலில், நனைந்தபடி நமக்குள்  காதல் மழை வெளியில் சாரல் மழை

 

நானும் சில கொள்கைகளுடன் இருந்தேன் உன்னை பார்க்கும்வரை , உன்னை பார்த்த பின்பு அவ்வளவையும் மறந்தேன் அரசியல்வாதி போல .....

 

      கொள்கைகளை பற்றி பேசினால் கொள்ளை போகும் அனைத்தும் .........

 

      என்னை முழுவதும் நீ ரசிப்பதால் எனக்கே நான் அழகாக தெரிகிறேன் .....

 

      காரமான நமது சண்டைகள் இனிப்பான உனது முத்தத்தில் முடிகிறது .......

 

எத்தனை விதமான மனிதர்களை சந்திகின்றோம் சிலமணிநேர பேருந்து பயணத்தில் - கலப்படம்

 

      நோடிபோழுதும்  உன்னை நான் மறந்ததில்லை பின்பு எப்படி உன்னை மீண்டும் நினைக்க முடியும் ...

     

காதலனின் குரல் கனவுகளுக்குள் அழைக்கிறது  .......இனிய இரவு வணக்கம்..... விருப்பங்கள் கனவிலாவது நிறைவேற வாழ்த்துக்கள் ....

 

      கடிவாளம் இல்லாத குதிரை காதல் , அதை சரிவர அடக்க வந்தவன் நீ .......

 

      இன்னும் என்னிடம் பொக்கிஷமாய் நமது முதல் சந்திப்பின் அடையாளமாக நீ எனக்கு எடுத்து கொடுத்த பயண சீட்டு

 

      ஏனோ சிலரை சந்திக்க வில்லை என்றாலும் அவர்களை பற்றிய சிந்தனை ஓய்வதில்லை ........

 

      உன்னுடன் நான் இருக்கும் சமயம் எனது நிழலும் எனக்கு எதிரியாகவே தெரிகிறது

 

      ரசனைகள் பலவிதம் அதில் எனது ரசனையையும் அங்கீகரிக்கும் என் அணைத்து நண்பர்களுக்கும் என் கனவுகளின் நன்றி .......

 

      நான் உன்னை காதலிப்பதற்கான கரணம் தெரிந்துவிட்டால் நான் எப்படி கவிஞ்சர் ஆனேன் என்பதும் தெரிந்துவிடும்

 

      மறுபடியும் கோபப்படும்போது இன்னும் கொஞ்சம் தாமதமாகவே எனக்கு மன்னிப்பை  வழங்கு உனது செல்ல கோபத்தை நான் ரசிக்க வேண்டும்

 

      உனது பொய் கோபம் என்னை மீண்டும் உன்னை கொஞ்ச தூண்டுகிறது .........

 

      சிலரது கனவுகள் எல்லைகளில் அடங்குவது ஆனால் எனது கனவுகள் உன்னுள் அடங்குவது ............

 

      உனக்காக நான் எழுப்பும் மாளிகையில் உனது பாதம் பதியும்போது நீ உணர்வாய் அது எனது கனவுகளாலும். கற்பனைகளாலும் வர்ணம் பூசபட்டதேன்று ........

     

பலமுறை யோசித்தேன் எதற்காக அன்று உன்னை பிரிந்தேன் என்று இன்றே புரிந்துகொண்டேன் பிரிவுதான் பிரியத்தை அதிகபடுதுமாம் ..

 

      வாழ்வில் சிலரை மறக்க முடியாது அதுபோலத்தான் எனது கவிதைகளில் உன்னை கலக்காமல் இருக்க முடியாது

 

      பிரிந்து சென்றுவிட்டாய் எளிதாக ஆனால் நான் தனிமை என்னும் கொடிய நரகத்தில் வாழ்ந்து வருகிறேன் உன் நினைவுகள் எனும் பந்தத்துடன்

 

      கண்களை மூடினால் கனவின் உனது குறும்புகள்  என்னை காலை கண்  விழிக்க விடுவதில்லை

 

      காலமெல்லாம் காத்திருப்பேன் என்று கூறிய காதலன் , காத்திருந்தான் இன்னொரு பேருந்து நிறுத்தத்தில் வேறோருதிக்காக

 

      உன்னை பார்த்து பின்பு பிரியும் பிரிவு மிகவும் கொடுமையானது என்பதால்தான் நான் உன்னை பார்பதையே தவிர்க்கிறேன்

 

      காதலியை நேசிக்கும் அளவுக்கு மனைவியை நேசிப்பதில்லை ஆண்கள் , காதல் திருமணத்திற்கு பின்பு

 

      பல பெண்களுக்கு காதலன் மீது இருக்கும் அக்கறை கணவன் மீது இருப்பதில்லை , காதல் திருமணத்தின் பின் ...

 

      போகும்போதே எனை ரசித்து விட்டு போ நீ விரும்பும் நேரம் நான் மாறிவிடுவேன் வேறு தோற்றத்துக்கு -வாழ்க்கை

 

எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறி விட்டால் நமக்கு கடவுளின் நியாபகம் வரவே வராது .....

 

      என்னை உன்னை பற்றி சிந்திப்பதை தவிர வேறெதுவும் செய்யக்கூடாது  என்றா வசியம் செய்கிறாய் உனது கண்களால்  ??

 

      உன் பிறந்த நாளுக்கு நீ கொடுத்த மிட்டாயை இன்று வரை நான் பாதுகாக்கின்றேன் அது நீ எனக்கு கொடுத்த முதல் பரிசு என்பதால்

 

      கனவில் மட்டும் எனக்கு காட்சி தருவதால் தானோ நீ எனது கலாபகாதலன் ??

 

      சொல்வது எளிது செய்வது கடினம் இன்று உணர்ந்தேன் உன்னுடன் பேச முயற்சித்த பொழுது எனது வெட்கத்தை மறைக்க முடியாமல்

 

      ஒவ்வொரு முறை ஜன்னல் திறக்கும்போதும் ஏனோ கண்கள் உன் முகம் தெரியாத என்றே தேடுகிறது

 

      உயிரை உன்னுடன் விட்டு விட்டு நினைவுகளை மட்டுமே எடுத்து செல்கிறேன் என்றாவது நீ எனக்கு உயிர் கொடுப்பாய் என்று

 

      காற்றிடமும் தூது அனுப்பி விட்டாயா ?? தூங்க விடுவதில்லை என்னை சுற்றித்திரிந்து உனது அரவனைப்பையே நினைவூட்டுகிறது

 

      இதுவரை நான் விரும்பிய துணை தனிமை, ஆனால் நீ வந்ததும் நான் வெறுக்கும் முதல் எதிரி தனிமை

 

      இன்றுவரை நான் கள்ளத்தனம் பழகியது இல்லை ஆனால்  இபோழுது உனக்கே தெரியாமல் உன்னை பார்ப்பதில் கண் தேர்ந்த கள்ளி ஆகிவிட்டேன்

 

      உன்னை என்று சந்தித்தேனோ அன்றிலிருந்தே என் தாயிடம் பொய் கூற பழகி கொண்டேன் நான் நிம்மதியாக உறங்குகிறேன் என்று

 

      எல்லோரும் நின்றிருக்கும் பேருந்து நிறுத்தத்தில் கூட்டத்தில் நின்றாலும் சரியாக கண்டு பிடிகின்றது என் விழிகள் உன்னை -கள்வனே

 

கிள்ள கிள்ள வளரும் மருதாணி போல் உனது நினைவை அழிக்க அழிக்க நீயே வளருகிறாய்  என் மனதில்

 

      சந்தோஷத்தை  பகிர்ந்துகொள்ள விரும்பும் அளவிற்கு சோகத்தை பகிர்ந்துகொள்ள விரும்புவதில்லை நாம்

 

      வெறுப்பை காட்டும் மனதின் மீதே அன்பை காட்ட மனம் விழைவது ஏனோ ??

 

      சிலரது மௌனம் நமக்கு உணர்த்தும் பாடங்கள் பல ..........

 

      காதலை நான் கூறவில்லை நீ புரிந்துகொள்வாய் என்று நினைத்து ஆனால் நீயோ எப்பொழுதும் tube light என்பதை நிரூபிக்கிறாய்

 

      உன்னை பற்றி நினைக்ககூடாது என்று  நினைத்து நான் செய்யும் ஒவ்வொரு  செயலிலும் நீயே தெரிகிறாய் .......

 

      காரணத்துடன் பிரியும் நண்பர்களை விட காரணமே இல்லாமல் வெறுப்பை காட்டும் நண்பர்களையே மனம் மிகவும் நேசிக்கிறது

 

      கொடுமையிலும் கொடுமை இளமையில் தனிமை

 

      எப்பொழுது ரோஜா மலரை பார்த்தாலும் முதல் முதல் என்னை  காதலிப்பதாக  கூறிய அப்பாவியின் முகமே நியாபகம் வருகிறது

 

      எனது கவிதைகளின் பிரதிபலிப்பு நீ.... அது அதை படிக்கும் அனைவருக்கும் புரிகிறது உன்னைத்தவிர ............

 

      நம்மைத்தவிர வேறு யாராலும் நம்மை அமைதிப்படுத்த இயலாது ......

 

      பெண்ணுடன் ஆணின் போலி நட்பு , ஆணுடன் பெண்ணின் போலி காதல் என்ன வித்தியாசம் ??

 

      நட்புடன் காதல் வருவது ஆரோக்யமானது ஆனால் காதலுக்கு பிறகு நண்பர்களாய் பிரிவது ஆபத்தானது

 

      பலரது கண்ணீருக்கு காரணம் அவர்களுக்கு மிகவும் பிடித்தவரின் வெறுப்பு ...

 

      சிரித்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் வாழ்கையில் சந்தோஷமானவர்கள் அல்ல.

 

      உன்னை தொலைத்ததாலோ என்னமோ என்னையும் தொலைத்து நடைப்பிணமாக நான் வாழ்கிறேன்

 

உண்மைக்காதல் உயிருள்ளவரை

வாழும் என்ற நம்பிக்கையில்

 

      எனை போலவே காற்று  இட்டு கட்டும் பாட்டு இனிமை  ..........எனை போலவே பூத்து எட்டி பார்க்கும் நாற்று இளமை

 

      மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்

 

      காதலிக்காமல் இருப்பதை விட காதலித்து தொல்வி அடைவதெ மேல்

 

      காலங்களும் கடக்கிறது

கனவுகளும் நீடிக்கிறது

கவிதைகளும் தொடர்கிறது

காற்றோடு என் மூச்சும்

கடல் கடந்து செல்கிறது

 

      தனியாக நடப்பது கொடுமையல்ல .. ஆனால் நமக்கு பிடித்தவருடன் சென்று பிறகு தனியாக திரும்புவது கொடுமையானது

 

      இதயம் சொல்வதை செய்

வெற்றியோ?

தோல்வியோ?

அதை தாங்கும்

வலிமை அதற்குதான் உள்ளது.

 

      நம் தமிழ்ப் பெண்களில்

அவர்கள் அழகை விட

அழகான அந்த "வெட்கம்"

அழகோ அழகு...!

 

      நாம் வழக்கை முழுவதும் நினைத்து கொண்டிருக்கும் ஒரு நபர் நம்மை அடியோடு மறப்பது

 

      நண்பன் நமது பிறந்த நாள் அன்று நம்மை பார்த்தும் வாழ்த்த மறப்பது

 

      எந்த ஒரு நண்பன் நம்மை வெறுக்கிறானோ  அவன் மீது அதிகமாக அன்பு செலுத்துவது

 

உனக்காகவே உயிர் வாழ்கிறேன் நான் ... உன்னாலே தனியாய் தவிக்கிறேன் நான்

 

      மறக்கவும் தெரியாமல் நீ என் வசம் இல்லை என்பதை மறுக்கவும் முடியாமல் தவிக்கும் கிணற்ற்று தவளையாய் நான் ..

 

      ஒரே நாளில் என் காதலை மண்ணோடு மண்ணாய் புதைக்கவும் ஞானி இல்லை நான்

 

உன் காதலை வாழ்த்தும் அளவிற்கு தியாகி இல்லை நான் ...

 

      ரசிப்பதற்கும்  காதலன் இல்லை ....... அரவணைக்கவும் நண்பன் இல்லை .... என்ன வழக்கை டா இது ..

 

      எந்த தவறையும் நானாக செய்யவில்லை

எனும்போதே

அரசியல் ஆரம்பம் ஆகி விடுகிறது

அன்பினில் ....

 

      பேசவேண்டிய இடத்தில்  அமைதியாய் இருக்காதே அமைதியாக இருக்க வேண்டிய நேரத்தில் பேசாதே

 

      நீ எனது வாழ்கையில் வந்த அற்புதமான கனவு அதனாலதான் எனக்கு விழிக்கவே மனமில்லை

 

      உனது மௌனத்தை உணர்பவர் யாரோ அவரே உன்னை முழுதாய் புரிந்தவர்

 

      உன் தோளில் சரிந்து தூங்கும் - என் இரவும் வேண்டும்.தினமும் உன் முகத்தில் - என் விடியலும் வேண்டும்..... தருவாயா ??

 

      காரணத்துடன்  அழுகிறேன் ....... அன்று காரணமில்லாமல் உன்னுடன் சிரித்ததற்காக ..........

 

      தன்னை பற்றி சிந்திக்கும் ஒருவனால் மட்டுமே மற்றவர்களை உணர்சிகளை உணர முடியும்

 

      யாருமட்ற  தனிமையில் அமர்ந்திருக்கிறேன்..... ஆனாலும் மனதினுள் உனது குரல் கேட்டுகொண்டே இருகிறது

 

 

      தவறும் சரியும் பார்பவரின் மனதை பொறுத்தே உள்ளது ...

 

      சிலநேரங்களில் உண்மையான அன்பும் தோற்று விடும் உரிமை இல்லாதவரிடம் காட்டும்போது

 

      தூக்கம் ஒரு வியாதி ... பழகியவனால் விடமுடியாது, பழகாதவனால்  தொடர முடியாது

 

      என்னுள் தவழ்ந்து ஓடும் நீர் திவலைகளை பார்க்கும்போது உந்தன் ஸ்பரிசமே நினைவில் தவழ்கிறது

     

உன் முகத்தை பார்கவில்லை அந்த வலிகூட எனக்கு சிறிதுதான், ஆனால் நீ எனக்காக ஏங்கும் ஒவொரு நொடியும் எனை கொள்கிறது நீ தொலைவில் இருந்தாலும்

 

      கண்களால் பார்த்து இதயத்தில் வருவது காதல் என்றால் உன் குரலை எங்கோ தொலைவில் கேட்டாலும் சட்டென மனதில் மின்னல் வருவது எப்படி ??

 

      நாளை விடியும் என்று  ஆசைபட்டே இன்று உறக்கம் கொள்கிறோம்.. உண்மை இப்படி இருக்க நான் எதற்கும் ஆசை படாதவன் என்று சொனால் நியாயமா ??

 

உந்தன் தோள் சாய்ந்து

எந்தன் சோகம் மறக்கிறேன்

உலகமே நீயாய் மாறிப்போனதால்..

 

      மழை- பிடித்த தோழனாக  சிலநேரம் ...... என்னை  கட்டித்தழுவும் காதலனாக சிலநேரம் ......

 

சிலநேரம் நம்மையும் அறியாமல் எட்டிபார்க்கும் கண்ணீர் துளி உணர்த்தி விடுகிறது நமது சோகத்தை நண்பனுக்கு

 

நீ மட்டும் என்னை

அணைத்து கொண்டு இருப்பாயேயானால்

ஆயுள் முழுவதும் உன் அருகில்

தூங்கிக்கொண்டு இருப்பேன்.

 

எதிர் பாராமல் உன்னை சந்திக்கும்போது  சொல்ல நினைத்தும் மறைகிறேன்  தினமும் உன்னை எதிர்பார்த்தே வருகிறேன் என்று .

 

      பெண்களில் விலை மாதுகள் போல ஆண்களில் விலைபோன மருமகன்கள் .. வரதட்சணை

 

நீ என் இதயத்தை

பூ என்று சொன்னாய்!

புரியவில்லை அன்று!

புரிந்துகொண்டேன் இன்று!

நீ என் இதயத்தை

பறித்து சென்ற போது!

 

 

      நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனம் ........ நண்பியின் நண்ம்பி மட்டும்  தங்கையாம்  ..........specially for boys ....

 

      கண்களுக்கும் கண்ணீருக்கும் வித்தியாசம் உண்டு கண்கள் உலகத்தை பார்க்கும், கண்ணீர் உணர்வுகளை பார்க்கும்

 

      பிச்சை எடுப்பது குற்றம் என்று  அறிவித்துவிட்டால் நெறைய மாப்பிள்ளைகள்தான் மாட்டுவார்கள் இன்றைய தினத்தில் --

 

      அன்பை பற்றி படிக்கும்போதெல்லாம் தவறாமல் வந்துபோகிறது அம்மாவின் முகம் ...

     

என்னை நீ

ஏமாற்றவில்லை

என்னை நானே

ஏமாற்றி விட்டேன்.

உன்னைக்

காதலித்தது

நான் தானே!

 

      எப்போதும் உன்னுடன் பேசிகொண்டிருக்க பிடிக்கும் அதைவிட இபோழுதெல்லாம் பேசாமல் உன் முகத்தை பார்கவே மிகவும் பிடிகிறது

 

      விழி வழி மட்டுமின்றி  விரல் வழியும் மின்சாரம் பாயும் என்பதை நேற்றே உணர்ந்தேன் நீ என் கை தொட்டவுடன்

 

      நீ எனை மறப்பாய் என்று தெரிந்தும் சுமக்கிறேன் உனது நினைவுகளை சுகமாக ........

 

      ஒரு வண்ணத்து பூச்சி உன்னை காட்டி என்னை  கேட்டது ஏன் இந்த பூ நகர்ந்துகொண்டே செல்கிறது என்று ?!!!

 

உதடுகள் உரசும் நேரத்தில் இதயங்கள் பரிமாறும்  சத்தம்தான் முத்தம்

 

      பலபேரின் அர்த்தமில்லாத உறவை பெறுவதைவிட அர்த்தமுள்ள அன்புள்ள ஓர் உறவே போதும் வாழ்நாள் முழுவதும்

 

      காதலை உருக்கி நீ காயபடுத்து ....... காயத்தை உருக்கி  நான் காதல்படுத்துகிறேன் --

 

      புரிந்துகொண்டால் கோபம்கூட அர்த்தமுள்ளதாய்  தெரியும்...... புரியவில்லைஎன்றல் அன்புகூட அர்த்தமற்றதாகிவிடும் ........

 

      சொல்லும்போது ரசிக்க கூடியதும் அனுபவிக்கும்போது வலிக்க கூடியதும்  காதல் மட்டுமே .........

 

      கனவில் நி வருவாய் என கன் மூடி படுதிருந்தென்்  நீயும் வந்தாய் கனவாக அல்ல  கனனீரக.

 

உன் கை விரல் என் விரல்கலுடன் இனையும்்பொது முழுதாய் உனர்ந்தென் எனது பென்மை்யை

 

நான் தூங்கிவிட்டதாய்  நினைத்துகொண்டு நீ எனக்கு  கொடுக்கும் முத்தம் உணர்த்துகிறது உனது காதலின் ஆழத்தை ........

 

      இசை எனக்கு தேவை இல்லை உன் மார்பில் சாயும்போது கேட்கும் உன் இதய துடிப்பு போதும் ..........

 

      இடையில் கைவளைத்து அவன் என்னை இறுக்க அணைத்தபோது லேசாய் துளிர்த்தது என்னுள் காதல் திமிர் ...........

 

      காதல் போதையில் என்கவிதைகள் உனக்காக மட்டும் ............

 

      முக்கனியும் ஈடில்லை நீ கொடுத்த முத்தத்திற்கு .

 

மழலையாய் உணர்ந்தேன் ...................உன்தோளில் சாய்ந்த அரைநொடி ...........

 

      தொலைபேசி ஒலிக்கையில் நீயோ என  அடிகடி துடிக்கிறது என் மனம் ......

 

      உந்தன் குரும்புகளுக்குள்ளும்  உந்தன் புன்னகைகுள்ளும்    ஒளிந்துகொண்டு சிரிக்கிறது எந்தன் துன்பங்கள்....

 

      உண்மையோ பொய்யோ எதுவாக இருந்தாலும்   சிரிப்பேன் பேசுவது உனது உதடுகளாக இருந்தால் ....

 

      காலங்காலமாய் கூடி உண்ணும் காகங்களுக்குள் இன்று மோதல்... உன் விரல் பிசைந்த சாதம் யாருக்கு என்று... ....

 

      எல்லோரும் அருகில் இருந்தும் தனிமை உணர்கிறேன் நீ அருகில் இல்லாததால்.. உன்னுடன் இருந்தும் வெறுமை உணர்கிறேன் நீ என்னுடன் பேசாததால்.

 

அவள் சொல்லும் முன்னே அவள் விருப்பத்தை அறிந்து அனைத்தையும் செய்த எனக்கு அவள் சொல்லியும் செய்ய முடியாமல் போன ஒன்று அவளை மறக்க சொன்னது...

 

      வெட்கமென்ன பெண்களின் தேசிய மொழியா ? அடிக்கடி பேசுகிறார்கள் .

 

மழைத்துளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் உன் அனுமதியில்லாமல் உன்னைத்தொட்டு விளையாடுகிறது!!

 

பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால் , முதலில் உன் கண்களை மூடிக்கொள் . உன் உதடுகளை விட , உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன

 

ஆர்வத்தினால் அல்ல நீ படிப்பாய் என்ற ஆதங்கத்தினால் தான் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன் கவிதை......

 

      உன்னோடு நானிருக்க உள்ளமோ பூத்திருக்க வார்த்தைகளால் என்னில் வாசம் செய்தவளே சொன்ன காதல் மறக்குமா

 

யோசிக்காம சொல்ல முடியாது யோசிச்சா சொல்லவே முடியாது... ♥ காதல்

 

      நீ போகும் பேருந்தை குறி வைத்தே அனைத்து சாலை விதி சிகப்பு விளக்குகளும் எரிகின்றது.. உன் அழகை,,, பொறுமையாக ரசிப்பதற்கு

 

      நம்மிடம் இருப்பதெல்லாம் நாம் என்று நம்மை சொல்லவைக்கும் ஒரு சின்ன நட்பு மட்டுமே..

 

நீ ஈர்க்கிற ஈர்ப்பில் கவிழ்ந்து விழுகிறேன் உன்னிடம் ஒவ்வொரு தரமும் நீ ஒரு முரண்பட்ட கவிதை காதலனே

 

பொய் பேசும் உன் கண்கள் பின் தொடரும் நான் இது எங்கே போய் முடியும்?உன் மௌனம் என்னைக் கொல்கிறது கண்களால் பேசாமல் வார்த்தைகளாக சொல் ....

உன் அன்பு என் மீது படர்ந்தது இதயத்தில் நுழைந்தது மாறா இடமாக என்றும் என்னுடனே நீ இருக்க..... தினமும் தேடும் உருவமாக என் கண் முன்னே நீ..

 

அன்பே கண்களால் காதல் சொல்லி கவிதையாய் கொஞ்சி பேசி என் நிழலாய் நீயே மாறி மிரட்டுகிறாய் உன் அழகால் இப்போது என் நிழலும் நீயாய்

 

எத்தனை கல்லறைகள் தாஜ்மஹாலை விட புனிதமான காதலை சுமக்கிறதோ !என்னை போல

 

சிரிக்கும் போது அழகாய் இருப்பவர்கள் பெண்கள்அழும்போதும் அழகாய் இருப்பவர்கள் தேவதைகள்

 

நட்பு என்றாலும் காதல் என்றாலும் இதயத்தில் வைக்க வேண்டிய இரண்டு வரிகள்.. பழகும் வரை உண்மையாய் இரு.. பழகிய பின் உயிராய் இரு.

 

பெண்ணே! அடிக்கடி கடற்கரையோரம் செல்லாதே! உப்புக் காற்றில் - உன் இரும்பு இதயம் துருப்பிடித்து விடும்.

ஆணின் வெற்றிக்கு உரிமை கோரும் பெண்கள் யாரும் ஆணின் கண்ணீருக்கு உரிமை கோருவது இல்லை

     

மனிதன் நல்லவனாகவே இருந்துவிட்டால் கடவுள் தேவை இல்லை...

     

உன் விழிகளைக் கொஞ்சம் கடன் கொடு விடியும் வரையில், உன் கனவாவது என்னோடு இருக்கட்டும்,,

 

யாருமே இல்லாத உன் இதயக்காட்டுக்குள்ளே வழி தெரியாமல் தவிக்கிறேன்,,, எப்படி வெளிவருவதென்று தெரியாமல்..

 

அழகான பெண் கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம் இரண்டாமவள் ஒரு புதையல்

 

அம்மாவின் தலை கோதல் இல்லாமல் தூங்க பழகி கொண்டேன் எனது வேலையின் களைப்பில்

 

 

கவிதைகள்: @vimalashri    tweets  http://twitter.com/vimalashri

தொகுப்பு : @karaiyaan 

நன்றி,

புரட்சிகனல் SGR