ராஞ்சனா - மற்றுமொரு பாதிப்பை ஏற்படுத்தும் படம். இத இனி தமிழ்ல பாக்கணும்ன்னு நினச்சாலே பயமா இருக்கு.. ட்ராஜடி படங்கள 3 க்கு அப்புறம் வேணும்ன்னே தவிர்த்து வந்தேன்.. ஏன்னா 3 படம் என்ன நல்லா பாத்திச்சது.. என்னோட லைஃப்ல கொஞ்சம் ஒத்து போன கத அது.. அதுக்கப்றம் இந்த மாதிரி சோகமான படங்கள பாக்க கூடாத்துன்னு இருந்தேன். இருக்குறேன்.. ஆனா ராஞ்சனா கத பெரிய அளவு வெளி வரல. சாதாரண லவ் ஸ்டோரியா இருக்கும்ன்னு தான் நெனச்சேன்.. தனுஷோட ஃபேன்ங்க்றதுனால மொத நா மொத ஷோ பாத்துரலாம்ன்னு தான் இன்னிக்கு பாத்தேன்..
தனுஷ் இந்தில பின்னிருக்காப்ல.. எதோ இந்தி படம் 40,50 நடிச்ச மாதிரி அப்டி ஒரு அசால்ட்டான பெர்ஃபார்மன்ஸ். தனுஷுக்கு சமமா சோனம்.. யம்மாடி நிஜமாவே ஐ லவ் யு. ரெண்டு பேரும் போட்டி போட்டு வாழ்ந்திருக்காய்ங்க.. ஒரு இந்து பையன் ஒரு முஸ்லிம் பொண்ண லவ்வுற கத தான். அது நாலு டிவிஸ்டு, அதிரடி, 8 பாட்டுன்னு கலர்ஃபுல்லா எடுத்துருக்காங்க... ஓவரலா படம் ரொம்ப பிடிச்சிருக்கு.. ஆனா தனுஷ் மேல செம காண்டுல இருக்கேன்.. ஏன் சார் மறுபடியும் மறுபடியும் இப்டி சோகமாவே க்ளைமாக்ஸ்ல ஷாக் கொடுக்குறீங்க.. இத இனி தமிழ்ல அம்பிகாபதியா பாக்க ஆசை போய் பயமும் கவலையும் தான் இப்ப இருக்கு.. உங்களுக்கு அவார்டு கண்ஃபார்மு.. ஆனா பாக்குற எங்களுக்கு மன பாதிப்பு.. க்ர்ர்ர்ர்.. my marks 4/5
Friday, June 21, 2013
Raanjhanaa- my Review
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment