Sunday, January 27, 2013

ஃபேக் டிவிட்டர் அக்கவுன்டாய் வாழ்வது எப்டி?

எல்லாருக்கும் கனல் வணக்கம்..

வாழ்க்கைல போலி இருக்கலாம்.. ஆனா போலியான வாழ்க்கை இருக்க கூடாது..அதாவது வாழ்க்கைங்க்றது..... சரி..ஓக்கே..இதெல்லாம் டிஎல்ல பாத்துப்போம்..

இன்னைக்கு நான் சொல்லி தர போறது ரொம்ப ரொம்ப முக்கியமானது.. நல்லா கவனிங்க மக்கா..

ஃபேக் ஐடிகள் மெயின்டெயின் செய்வது எப்டி.. மாட்டாம இருக்குறது எப்டி..

1. மொதல்ல போலியா ஒரு ஜிமெயில் அக்கவுன்ட் ஆரம்பிச்சு அந்த ஐடி மூலமா ஒரு டிவிட்டர் அக்கவுன்ட் ஆரம்பிங்க...

2. அத பெண் அக்கவுன்டா மாத்த பொன்னியின் செல்வன், சிலபதிகாரம் நாவல்கள்ல இருந்து ஒரு கதாப்பாத்திர பேர ஊசர்னேமா செலக்ட் பண்ணிடுங்க..உதா. கோப்பெரும்தேவி.

3. அடுத்து முக்கியமா டிபி.. இதுல எதுனா பூ, இல்லேனா  actress photo வச்சிடுங்க.

4. அப்புறம் வெங்காயத்த எடுத்து நறுக்கணும்.. பொன் முறுவலா வர்ற வர வதக்கணும்.

5. இனி தான் முக்கியமா மேட்டர்.. உங்க அறிமுகம்..  எடுத்த ஒடனே தமிழ்ல டிவிட்டிராதீங்க.. மாட்டிப்பீங்க..

6. உங்கள் மொதல் டிவிட் இப்டி இருக்கணும்.. Hi Twitter.. Good evening,  life Is short  ,  Love is pain

7. சுயமா ஒரு 10 இங்க்ளிஷ் டிவிட்டு போட்டுட்டு அப்புறம் கொஞ்சம் சினிமா பிரபலத்தோட டிவிட்டுகள  RT பண்ணுங்க..

8. அப்டி ஒரு ரெண்டு நாள் போணும்..ஏன்னா இந்த தொழில்ல பொறும முக்கியம்.. இல்லேன்னா என்ன மாதிரி 8 அக்கவுன்ட் மெயின்டெயின் பண்ண முடியுமா..

9. இனி ஒபாமா, ராஜன்,கார்கி, தோட்டா,  இந்த நாலு தெய்வத்தையும் மொதல்ல பாலோ பண்ணுங்க.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சம மீதி தமிழ் டிவிட்டர்ஸ ஃபாலோ பண்ணிக்கலாம்...

10. எதுக்கும் மொதல்ல கார்கிய ஃபாலோ பண்ணுங்க.. எனக்கு அவர் தான் ராசி.. என்னோட நாலு பெண் அக்கவுன்ட் ஓஹோன்னு வந்திருக்குன்னா அதுக்கு காரணம் கார்க்கி என்று சொன்னா மிகையாகாது என்று கூறி கொள்ளகொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

11: இனி ஒரு டிவிட்டு போடுங்க.. HOW to type in tamil pls help ன்னு வண்டவாளம், இல்லேனா சிபியார், இல்லேனா சேட்டு, இல்லென்னா என்கிட்ட மென்சன் போடுங்க.. விழுந்தடிச்சுட்டு உதவுவோம்..

12.  அப்புறம் நீங்க பெண்ணா டிவிட்ட ஆரம்பிக்க கொஞ்சம் பெண் டிவிட்டர்கள் கிட்ட அடிக்கடி பேச்சு கொடுக்கணும்.. லேடி சூப்பர் ஸ்டார் ராஜகுமாரி உங்களுக்கு இந்த விஷயத்துல உதவுவாங்க..

13: பெண் மாதிரியே டிவிட்டணும்.. நெழிவு, சுழிவு பாவனை எல்லாம் சரியா இருக்கணும்..அடிக்கடி க்ர்ர்ர்ர், ப்ர்ர்ர்ர் , வெவெவெவெ, :| , ://, அப்டின்னு அடிக்கடி மென்சன் போட்டுட்டே இருக்கணும்..

14: யாராவது டிஎம்ல வந்து  தொல்ல பண்ணா ரிப்ளை பண்ணாதீங்க...

15: வாரத்துக்கு ஒரு தடவ மஞ்சள் தேச்சு குளிங்க..அப்ப தான் முழுசா கங்காவா மாற முடியும்..

இத மொதல்ல ட்ரை பண்ணுங்க.. அடுத்த பதிவுல இன்னும் சில ரகசியங்கள சொல்றேன்.

ஜாக் நாமம் வாழ்க.. டிவிட்டர் நாமம் வாழ்க..

நன்றி..

8 comments:

  1. யோவ் :-)))) செமத்தியா எழுதியிருக்க .சூப்பர்
    //4. அப்புறம் வெங்காயத்த எடுத்து நறுக்கணும்.. பொன் முறுவலா வர்ற வர வதக்கணும்.
    10. எதுக்கும் மொதல்ல கார்கிய ஃபாலோ பண்ணுங்க.. எனக்கு அவர் தான் ராசி..
    15: வாரத்துக்கு ஒரு தடவ மஞ்சள் தேச்சு குளிங்க..அப்ப தான் முழுசா கங்காவா மாற முடியும்//

    இதெல்லாம் நான் ரொம்ப ரசிச்சேன் :-D
    - @GaneshVasanth

    ReplyDelete
  2. puratchi kanal, neenga enna puratchi pannuninga

    ReplyDelete
  3. vazkaila poli iruka koodathunu solra, neeyae fake id vachu irukanu solra.
    Enna elavuku indha blog eludhi iruka.

    ReplyDelete
  4. //வாரத்துக்கு ஒரு தடவ மஞ்சள் தேச்சு குளிங்க..அப்ப தான் முழுசா கங்காவா மாற முடியும்..

    kanal vaalga

    ReplyDelete
  5. ஹாஹாஹா #WhykanalisGod

    ReplyDelete