அன்பு மலர்களே ,
போச்சு எல்லாம் போச்சு.. கசாப தூக்கில போட்ட நாள்ல இப்படி ஆயி போச்சு எனக்கு.
21/11/2012 வழக்கம் போல் டிவிட்டரில் ஜாலியாய் இருந்து கொண்டிருந்தேன். மாலை 6 மணி. ஆப்பிஸ் வந்து சேர்ந்தேன். ஆப்பிசிலும் டிவிட்டரில் தான் வழக்கம் போல் விளையாடி கொண்டிருந்தேன்.
மணி 8.30 PM ஆனது. பசி. எட்டாவது மாடியில் உள்ள கேண்டீனுக்கு சென்றேன்.. என் கெட்ட நேரம் " பீஃப் பெப்பர் ரைஸ்" ன்னு ஒரு எழவ சாப்ட்டேன். அத சாப்பிடும் போதே மைல்டா டவுட்டு இருந்துச்சு வயிறு கலக்க போகுதுன்னு...எதுக்கும் சேப்டிக்கு ஒரு லைம் ஜூஸ் குடிச்சேன். சாப்பிட்டு முடிஞ்சு மறுபடியும் ஆப்பிஸ் வந்து மொபைல்ல டிவிட்டர்ல இருந்தேன்..
நேரம்: நயிட் 1 மணி. என் .,ஆர்,ஐ டிவிட்டர்ஸ் கூட வழக்கம் போல பேசிகிட்டிருந்தேன். திடீர்ன்னு வயிறு கட கட மட மடன்னு சவுண்டு கொடுக்க ஆரம்பிச்சு. அப்புறம் என்ன துண்ட காணோம் துணிய காணோம்ன்னு வாஷ்ரூம் பக்கம் ஒரே ஓட்டம். பாக்கட்ல மொபைல வச்சிட்டு பேன்ட அவுக்க குனிஞ்ச்ச்சனா..... அவ்ளோ தான் மொபைல் பாக்ட்ல இருந்து வழுக்கி கக்கூஸ் குண்டுக்குள்ள விழுந்துடுச்சு,. :(((((( ஒடனே குண்டுக்குள கைய்ய விட்டு மொபைல எடுத்தேன்.
வயிறு கலக்கி வந்ததும் நின்னு போச்சு. மொபைல் ஆன் பண்ணா ஆண் ஆகல..செம மூட் அவுட்டு... இதுவர ஆன் ஆகவே இல்ல. சோகத்தோட இந்த பதிவ 2 மணிக்கு எழுதிட்டு இருக்கேன் ஆப்பிஸ்ல ..
கடந்த ஒரு மணி நேரமா டிவிட்டே போடல . கை ஞமஞமஞமண்ணு இருக்கு இனி மொபைல நான் எப்ப ரிப்பேர் பண்ணி எப்ப டிவிட்டர் வருவேன்னு தெர்ல நிறைய பேர் என்ன தேடுவாங்க. இந்த பதிவ யாராவது பாத்தீங்கன்ன மறக்காம டிவிட்டர்ல சொல்லுங்க மக்கா. இல்லேன்னா சொல்லாம கொள்ளாம போயிட்டேன்னு வதந்தி பரப்பிருவாணுங்க.
எல்லா என் தலை விதி என்று நினைக்கமாட்டேன். உலக அழிவின் ஆரம்பம் என்றே மனதில் தோன்றுகிறது.
உங்கள் புரட்சி கனல் SGR
நகைச்சுவையாக எழுதியிருக்கீங்க. போனை காய வைத்து, பின் ஆன் பண்ணி பாருங்க!
ReplyDelete