Tuesday, November 23, 2010

Rap Song Invented 500 years ago in TAMIL

அருணகிரிநாதரின் "Rap...

காதலன் படத்தில் "பேட்டை ரேப்" என்கிற பாட்டை கேடிருப்பீங்க. தமிழில் முதல் "ரேப்" பாட்டு இதுதானென்று எல்லோரும் சொன்னார்கள். பாட்டை இயக்கிய ரெஹமானை பாரட்டினார்கள். ஆனால் தமிழில் இது தான் முதல் "ரேப்" என்று நான் ஓற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு.. அருணகிரிநாதர், முருகன் பேரில் எழுதிய பாட்டுகளில் நிறைய பாட்டுகள் , "ரேப்" சாயலில் இருக்கின்றன.

சரி...
தும் தும் தக திகுதக திகுதக 

தும் தும் தக திகுதக துகுதக

என்கிற மெட்டில் தாளம் போடுங்கள். பிரகு.. கிழே எழுதியுள்ளப் பாட்டை பாடி பாருங்கள். உங்களுக்கே விளங்கும் :-)
முத்தை தரு பத்தி திருனகை

அத்துக்கிறை சத்தி சரவண
முத்திக்கொரு வித்து குரு பர என ஓதும்

முக்கட் பர மற்கு சுருதியின்
முற்பட்டது கற்பித்- திருவரும்
முப்பத்து முவர்க்கத்- தமரரும் அடி பேண

பத்துத்- தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்- கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்- பகல் வட்டத்- திகிரியில் இரவாக

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் த்யகு பொருள்
பட்ஷத்தொடு ரக்ஷித் தருள்வதும் ஒரு நாளே

தித்திதெய ஒத்தப் பரிபுர
நிர்த்த படம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்கக் கழுவொடு கழுதாட

கொத்துப் பறை கொட்டக் களமிசை
குக்கு குகுக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகோகை

கொட்புட்றெழ நட்பட்ற் அவுணரை
வெத்தி பலியிட்டுக் குலகிரி
குத்துப் பட ஒத்துப் பொரவல பெருமாளே

என்ன? விளங்கிச்சா? எப்படி இருந்தது நம்ம அருணகிரிநாதரின் "ரேப்"?:-)

அன்புடன்,

SGR

No comments:

Post a Comment