IamKanal: தினமும் என்னை எழுப்பும் பூங்காற்றே. நீ அவளா இல்லை அவளின் நகலா
IamKanal: நம் காதலை வர்ணிக்க வார்த்தையே கிடப்பதில்லை எந்த மொழியிலும்.
IamKanal: என் உடலில் உயிரை தேடி தேடி களைத்தபின் அறிந்தேன் நீ என்னுடன் இல்லை என்ற வலியை
IamKanal: மன்னித்து விட்டேன் என்று பொய் கூறி நீ பிரிந்த பின் சுவை இல்லாத இசையாய் என் வாழ்வு
IamKanal: என்னை மன்னிக்க யாரடி நீ.. நீ தான் நான் என்பது புரியாமல் மிரட்டுகிறாயே
IamKanal: நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் எனக்கு #EarthHour தானடி..
IamKanal: பச்ச தண்ணியும் போதையடி உன்னை நினைத்து பருகுகையில்.
IamKanal: இருட்டில் கூட இருட்டே தெரிவதில்லை.. வெளிச்சமாய் உன் நிழலுடன் நான்.
IamKanal: பறவை கூட்டம் ஒன்றில் ஐக்கியம் ஆகிவிட்டால் என்ன.. ரெக்கை கூட வேண்டாம்..
IamKanal: கண்களால் என்னை கைது செய்து ஜெயித்தவள் நீ என்பதை நான் அறிந்துகொண்டது நீ இல்லாத ஆயுளை அனுபவிக்கும் போது
IamKanal: உடைந்த கண்ணாடி கூட பெருமைப்படும் உன்னை பார்த்ததால் தான் உடைந்தேன் என்று