ஜாக்: ஏ கனலு... ஏ தம்பி.. இந்தா இங்க.. நாந்தேன் ..இங்கிட்டு வா..இப்டி வாப்பு....
facebook போனியா .. டிவிட்டர டிவிட்டரா தான் பாக்கணும்ணீ ங்களே ..இப்ப இந்த சந்தோட நிலைமை புரிஞ்சிதா,.
கனலு : நல்லாவே புரியுது.. நான் செஞ்ச தப்பும் புரியுது.. அதுக்கு பரிகாரமா டிவிட்டர விட்டே போயிரலாமன்னு இருக்கேன்..
ஜாக்: டிவிட்.. டிவிட்டர.. ஆங்.. டிவிட்டர விட்டு போறியளா ..நீ பண்ண அலும்புக்கு மன்னிப்பு கேக்காம டிவிட்டர விட்டு போறேங்க்றது கோழைத்தனம் இல்ல. .
கனலு : அதுக்காக ...
ஜாக்: அதுக்காக ...
கனலு: அதுக்காக டிஎல நகத்த என் சக்திய இழக்குறது ....முட்டாள் தனம்.
ஜாக்: டிஎல நகத்த எங்காளுகளும் இருக்குறாங்கன்னு மறந்துறாத அப்பு.
கனலு: அப்டி பாத்தா எங்காளுகளும் தாங்க இருக்குறானுங்க .. ஆனா அத நெனச்சு திட்ட முடியல .. 2 வர்ஷம் பின் தங்கிருக்குற இந்த சந்துல என் திறமை எல்லாம் வேஸ்ட் பண்ண விரும்பலங்க ஐய்யா.
ஜாக்: 2 வர்ஷம் பின் தங்கி தான் போயிட்டோம்.. ஒத்துக்கிறேன்...4 வர்ஷமா டைம்லைன்ல RT யும், DM யுமா இருந்து கவுஜ போட்டுக்கிட்டு இருந்த பயலுக .. கார்க்கியும் ராஜனும் ப்ளாக் ஆரம்பிச்சப்ப ஓடி போய் மொதல்ல சப்ஸ்க்ரைப் பண்ணதுல முக்காவாசி பயலுக நம்ம பயலுக தியென். திடீர்ன்னு அவன ந.நி.கீ., கவுஜய விட்டுட்டு மொக்க போடா கூப்ட்டா எப்டி வருவான்.. நீ தான் புரட்சி கனலாச்சே. அவன கூட்டிட்டு வா.. ஆனா அந்த பய மெதுவா தியென் வருவான்.. மெதுவா..தியென் வருவான்.
கனலு: மெதுவானா எம்புட்டு மெதுவாயா .. அதுக்குள்ள நான் மெண்டல் ஆயிருவேன் போலிருக்கே ..
ஜாக்: போ.. மெண்டல் ஆஸ்பிட்டல் போ.. நான் தடுக்க முடியுமா ..நாள் பூரா டிவிட்டர்லையே இருந்தா எல்லாரும் ஒரு நாள் மென்டலாக வேண்டியது தான்.. கடலை போடுறது முக்கியம் தான்..நான் இல்லேன்னு சொல்லல்ல .. ஆனா அடுத்தவங்களுக்கு கொடச்சல் கொடுக்காம கடலை போட்டா தான் நீ பிரபல டிவிட்டர் ஆக முடியும்.. ஒரு பொண்ணுகிட்ட மட்டும் கடலை போடலாமா. இன்னிக்கு நான் கேள்வி கேக்குறேன்.. நாளைக்கு வேற ஒருத்தன், அப்புறம் .. இன்னொருத்தன்,, அதுக்கப்றம் ஆர்குட் காரன் வருவான்.. அப்பெல்லாம் நான் டிஎல்லையே இருக்க மாட்டேன்.. ஆனா திரி நான் கொளுத்தினது.. இதென்ன பெருமையா.. கடம..
என்னோட கடம ..
கனலு: ஆனா டிவிட்டு போடும் போது , நடுவுல ட்ரோல் பண்றவங்க இருக்குற இந்த சந்துல என்னால இருக்க முடியாதுயா .. என்ன விட்டுடுங்க,, நான் போறேன்.,,
ஜாக்: (சட்டைய பிடிச்சு) .. 8 ஃபேக் ஐடிகள வச்சு பிள்ளைகள வளைக்கிறியாம்ல ..
கனலு: இல்ல..அப்டி இல்லீங்க ஐய்யா.
ஜாக்: வேற எப்டி.. இல்ல வேற எப்டின்னு கேக்குறேன்.. பெண் ஃபேக் அக்கவுண்ட் க்ரியேட் பண்ணி பசங்கள ஏமாத்துறியே ஏன் ?? இதுவர ஒரு தடவ ப்ளாக் பண்ணிருக்கமா உன்ன ஒரு தடவ..
நான் என் வேலைய பாக்குறேன். நீ ஒழுங்கா கவித மட்டும் போடு.. நீ என்னமோ சினிமா படமா லைவ் அப்டேட் பண்ணுறியே.. அதுல சில டிவிட்ட கொறச்சுக்க .. அப்புறம் வேற ஐடில இருந்து RT பண்ணிக்க.. ப்ளாக்ல போடு.. facebookல போடு.. விஜய் டிவில ப்ரொமோட் பண்ணிக்க. அங்க சம்பளம் வாங்கிக்க. என்ன இப்ப,
கனலு: ஆனா தினமும் 1000 போஸ்ட்க்கு மேல கூகிள் ப்ளஸல போட வசதி இருக்குங்கையா,. நான் போறேங்க..
ஜாக்: போயிருவியளோ .. போயிட்டா இருக்குற பயலுக எல்லாம் என்ன வந்து பிடிக்கவா.
யார்ரா இவன்.. எங்க எங்க எங்க இந்த கணக்கு புள்ள ..
இங்க தான் இருக்கியா.. கனலு.. டிவிட்டர விட்டு போறானாம்.. கூகிள் பிளஸ்ல ஐடி க்ரியேட் பண்ணி கொடு..
கணக்கு: ஒரு 10 நாள் கழிச்சு டிஆக்டிவெட் பன்னிக்கலாமா..
ஜாக்: என்ன கனலு.. 10 நாள் பொறுக்க மாட்டியளா .. 10 நாள் இருக்க மாட்டியளா .. விஸ்வரூபம், ABCD எல்லாம் இந்த வாரம் தான் ரிலிஸ் ஆயிருக்கு.. நீங்க போயிட்டீங்கன்னா யாரு லைவ் அப்டேட் பண்றதூஊஉ ...
கனலு: ஐய்யா ஐய்யா நான் கூகிள் ப்ளஸ் போய் சும்மா இருக்கமாட்டேன்யா..அங்க பிரபலம் ஆனதும் உங்களையும் அங்க சேத்து விடுறேன்யா..
ஜாக்: அங்க வந்தா. என்ன டிவிட்டரலையே ஸ்பாம் ரிப்போர்ட் பண்ணி ப்ளாக் பண்ணி அசிங்கபடுத்தினாலும் இங்கேயே தான்பு இருப்பேன்.. இந்த மரத்த வேரோட சாச்சுபோடாத அப்பு. அம்புட்டு தான் சொல்லுவேன்..
கனலு: ஐய்யா நான் அப்பப்போ கூகிள் பிளாஸ்ல இருந்து ஆட்டோ டிவிட்டு போடுறேன்யா. என்ன நம்புங்கைய்யா.
ஜாக்: உங்கள தான நம்பனும்.. வேற யாரூ இருக்கா டிஎல நகத்தஆஆஅ ..ட்ரெயின் எல்லாம் விடுவியேஏஏஏ ..போ . போய் டிஆக்டிவெட் பண்ணிக்க.. ..